உள்ளடக்கத்துக்குச் செல்

கெரிட் சுமித் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெரிட் சுமித் மில்லர் (Gerrit Smith Miller)(திசம்பர் 6, 1869 – பிப்ரவரி 24, 1956) என்பவர் அமெரிக்க விலங்கியல் மற்றும் தாவரவியலாளர் ஆவார் .

கல்வியும் பணியும்

[தொகு]

மில்லர் 1869-ல் நியூயார்க்கில் உள்ள பீட்டர்போரோவில் பிறந்தார். இவர் 1894-ல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் விவசாயத் துறையில் கிளின்டன் ஹார்ட் மெரியமின் கீழ் பணியாற்றினார். இவர் 1898ஆம் ஆண்டில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அருங்காட்சியகத்தில் பாலூட்டி பிரிவின் உதவிக் கண்காணிப்பாளராக ஆனார். 1909 முதல் 1940 வரை மில்லர் சிமித்சோனிய நிறுவனத்தில் உயிரியல் துறையில் இணைந்து பணியாற்றினார். 1906-ல் மில்லர் பிரான்சு, எசுப்பானியா மற்றும் டான்ஜியர் ஆகிய நாடுகளுக்கு மாதிரிகள் சேகரிக்கும் பயணமாகச் சென்றார்.

மனித பரிணாம ஆய்வு

[தொகு]

1915ஆம் ஆண்டில், இவர் பில்டவுன் மனிதனுடன் தொடர்புடைய மாதிரிகளின் வார்ப்புகளின் ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டார். இதன் மூலம் தாடை புதை படிவ குரங்கிலிருந்தும் மண்டை ஓடு நவீன மனிதனிடமிருந்து வந்தது என்றும் முடிவு செய்தார்.

விருது

[தொகு]

பிலடெல்பியாவின் இயற்கை அறிவியல் கழகம் 1934ஆம் ஆண்டு இலிடி விருதினை இவருக்கு வழங்கியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Four Awards Bestowed by The Academy of Natural Sciences and Their Recipients". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia (The Academy of Natural Sciences of Philadelphia) 156 (1): 403–404. June 2007. doi:10.1635/0097-3157(2007)156[403:TFABBT]2.0.CO;2. 

வெளி இணைப்புகள்

[தொகு]