கெப்லர்-452பி
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | கெப்லர்-452 | |
விண்மீன் தொகுதி | சிக்னசு | |
வலது ஏறுகை | (α) | 19h 44m 00.89s[1] |
சாய்வு | (δ) | +44° 16′ 39.2″[1] |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 13.426 (?) |
தொலைவு | 1400 ஒஆ (430 புடைநொடி) | |
அலைமாலை வகை | G2[1] | |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 5 ± 2 M⊕ |
ஆரை | (r) | 1.63-0.24+0.17[2] R⊕ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | 23 சூலை 2015 (அறிவிப்பு) | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | கெப்லர் அறிவியல் குழு | |
கண்டுபிடித்த முறை | கடப்பு முறை | |
கண்டுபிடித்த இடம் | கெப்லர் | |
கண்டுபிடிப்பு நிலை | வெளியீடு | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 1.05 AU |
சுற்றுக்காலம் | (P) | 385 நா |
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
கெப்லர்-452பி (Kepler-452b) என்பது கெப்லர் 452 என்ற ஜி-வகுப்பு விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இப்புறக்கோளை கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்பை அமெரிக்காவின் நாசா நிறுவனம் 2015 சூலை 23 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. நமது சூரியனை ஒத்த வாழ்தகமை வலயத்தைக் கொண்ட ஒரு விண்மீனைச் சுற்றிவரும், பூமியின் அளவினை ஒத்த புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே நான்காவது தடவையாகும்.[3] கெப்லர்-438பி, கெப்லர்-442பி, கெப்லர்-62இ ஆகியவை இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பூமியை ஒத்த புறக்கோள்களாகும். ஆனாலும், கெப்லர் 452பி பாறைகளைக் கொண்டதா அல்லது ஒரு சிறிய வளிமக் கோளா என்பது இன்னும் அறியப்படவில்லை. அதன் அடர்த்தியைக் கொண்டு இது ஒரு பாறைக் கோளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[4]
கெப்லர்-452பி கோள் நமது சூரியக் குடும்பத்தில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. நியூ ஹரைசன்ஸ் விண்கலத்தின் வேகத்தில் இக்கோளை அடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.[5]
பண்புகள்
[தொகு]இப்புறக்கோள் இதனுடைய சூரியனைச் சுற்றி வர 385 நாட்கள் ஆகின்றது. இது பூமியைவிட வயதில் மூத்த, ஆனால் வாழ்தகமை வலயத்தைக் கொண்ட, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.[6][7]. இது பூமியை விட ஐந்து மடங்கு அதிக நிறையும், இரண்டு மடங்கு ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. இது ஒரு புவியொத்த கோளாக இருப்பினும், இதன் அதிக நிறை மற்றும் அடர்த்தி காரணமாக, இது அதிக செயல்பாட்டிலுள்ள எரிமலைகளைக் கொண்ட ஒரு வல்ல-பூமியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அண்டவெளியிலிருந்து நோக்கும்பொழுது, இக்கிரகம் மேகங்களாலும், மூடுபனியாலும் சூழப்பட்டுள்ளது. கெப்லர்-452 என்பது சூரியனைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
கெப்லர்-452பி ஒரு பாறையுடைய கிரகமா அல்லது வளிமக்கிரகமா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், இது பாறைக்கிரகமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கெப்லர்-452பி-இல் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதா என்பது தெளிவாகவில்லை. இக்கிரகம், ஜி2வி-வகை விண்மீனைச் சுற்றி வருகிறது, இவ்விண்மீனின் வெப்பம் மற்றும் நிறை சூரியனைப் போன்றே உள்ளது, ஆனால் சூரியனை விட 20 விழுக்காடு அதிக ஒளியை உமிழ்கிறது. இவ்விண்மீன், 60 கோடி ஆண்டுகள் பழமையானது, இது சூரியனை விட 1.5 கோடி ஆண்டுகள் பழமையானது. கெப்லர்-452பி கிரகம் இவ்விண்மீனிடமிருந்து பெறும் ஆற்றல், பூமி சூரியனிடமிருந்து பெறும் ஆற்றலைவிட 10 விழுக்காடு அதிகமாகும். கெப்லர்-452பி ஒரு பாறைக் கிரகமாக இருந்தால், இதில் வெள்ளி கிரகத்தினைப் போல் பைங்குடில் விளைவுகளை அமைக்க முடியும்.
பெயர் | ESI | SPH | HZD | HZC | HZA | pClass | hClass | தூரம்(ஒஆ) | நிலை | கண்டுபிடித்த ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பூமி | 1.00 | 0.72 | −0.50 | −0.31 | −0.52 | மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது | மிதவெப்பகிரகம் | 0 | - | - |
கெப்லர்-438பி | 0.88 | 0.88 | −0.93 | −0.14 | −0.73 | மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது | மிதவெப்பகிரகம் | 470 | உறுதி | 2015 |
கெப்லர்-452பி | 0.83[8][9] | ??? | −0.49 | ??? | ??? | மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது | மிதவெப்பகிரகம் | 1,400 | உறுதி | 2015 |
செவ்வாய் | 0.70 | 0.00 | +0.33 | −0.13 | −1.12}} | மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது | அதிகுளிர்ந்த கிரகம் | 0 | சூரியனைச் சுற்றும் கிரகம் | வரலாற்றுக்கு முந்தைய |
புதன் | 0.60 | 0.00 | −1.46 | −0.52 | −1.37 | அதிவெப்பம் | வாழ உகந்ததல்ல | 0 | சூரியனைச் சுற்றும் கிரகம் | வரலாற்றுக்கு முந்தைய |
வெள்ளி | 0.44 | 0.00 | −0.93 | −0.28 | −0.70 | மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது | அதிவெப்ப கிரகம் | 0 | சூரியனைச் சுற்றும் கிரகம் | வரலாற்றுக்கு முந்தைய |
படக்காட்சியகம்
[தொகு]-
கெப்லர்-452 தொகுதியினுள் கெப்லர் 452பி யின் சுற்றுவட்டம் (உட் சூரியக் குடும்பம், மற்றும் கெப்லர்-186 தொகுதிகளுடன் ஒப்பீடு) -
புவி (இடது) - கெப்லர்-452பி ஒப்பீடு. -
வாழ்தகமைப் பகுதிகளில் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்த சிறிய கோள்களுடன் ஒப்பீடு. -
கெப்லர்-452பி மற்றும் தொடர்பான புறக்கோள்களுடன் புவி ஒப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NASA Exoplanet Archive - Confirmed Planet Overview - Kepler-452b". NASA Exoplanet Archive. 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
- ↑ Zolokhutin, Ivan. "Kepler-452b". Extrasolar Planets Encyclopedia. Extrasolar Planets Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.
- ↑ (23 சூலை 2015). "NASA’s Kepler Mission Discovers Bigger, Older Cousin to Earth". செய்திக் குறிப்பு.
- ↑ Rincon, Paul (23 சூலை 2015). "'Earth 2.0' found in Nasa Kepler telescope haul". பிபிசி. http://www.bbc.com/news/science-environment-33641648. பார்த்த நாள்: 2015-07-24.
- ↑ "NASA telescope discovers Earth-like planet in star's 'habitable zone". BNO News. 23 July 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Feltman, Rachel (23 July 2015). "Scientists discover 12 new potential Earth-like planets". The Washington Post. http://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2015/07/23/scientists-discover-12-new-potential-earth-like-planets/. பார்த்த நாள்: 23 July 2015.
- ↑ Witze, Alexandra (23 July 2015). "NASA spies Earth-sized exoplanet orbiting Sun-like star". Nature. http://www.nature.com/news/nasa-spies-earth-sized-exoplanet-orbiting-sun-like-star-1.18048. பார்த்த நாள்: 23 July 2015.
- ↑ http://www.theweathernetwork.com/news/articles/has-nasa-spotted-earths-twin-watch-live-announcement-here/54694/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.