கூலி
கூலி என்பது, ஓர் ஊழியரின் உழைப்புக்கு ஈடாக வேலைகொள்வோர் வழங்கும் பண ஈடு அல்லது ஊதியம் ஆகும். ஊதியம், ஒரு குறித்த வேலையைச் செய்து முடிப்பதற்கான ஒரு நிலையான பணத்தொகை என்ற அடிப்படையில் அல்லது ஒரு குறித்த கால அளவுக்கு (ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம் போன்றன) இவ்வளவு பணம் என்ற வகையில் அல்லது அளவிடத்தக்க ஒரு வேலையளவுக்கு இவ்வளவு பணம் என்றவாறு கணக்கிடப்படுகின்றது. ஒரு வணிகத்தை நடத்துவதில் ஏற்படும் செலவு வகைகளில் கூலியும் ஒன்று.
கூலி, சம்பளம் என்பதிலும் வேறானது. சம்பளம் என்பது கிழமை அல்லது மாதம் போன்ற குறித்த கால இடைவெளியில் ஊழியர் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார் என்று கணக்கிடாமல், வேலைகொள்வோர் ஊழியருக்கு வழங்கும் தொகையைக் குறிக்கும். கூலிக்குப் புறம்பாக, கூலித் தொழிலாளர்களுக்கு வேலைகொள்வோர் வழங்கும் பணம்சாரா வசதிகளும், வாடிக்கையாளர் நேரடியாக வழங்கும் ஊக்கப்பணமும் கிடைப்பதுண்டு.
தோற்றமும் கூறுகளும்
[தொகு]கூலித் தொழில், வேலை செய்யும் நேரத்துக்காகப் பணத்தைப் பரிமாறிக் கொள்வதோடு தொடர்புடையது. மோசசு ஐ. பின்லி தான் எழுதிய பண்டைக்காலப் பொருளியல் (The Ancient Economy) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
- கூலித் தொழில் என்னும் எண்ணக்கருவுக்கு இரண்டு கடினமான கருத்துருசார்ந்த படிநிலைகள் உள்ளன. முதலில் தன்னிடம் இருந்தும், அவன் வேலை உற்பத்தி செய்யும் பொருளில் இருந்தும் பெறப்படும் மனிதனின் உழைப்பைப் பண்புருவாக்கம் (abstraction) செய்ய வேண்டும். ஒருவர் ஒரு பொருளை தனிப்பட்ட கைப்பணியாளன் ஒருவனிடம் இருந்து வாங்கும்போது, ..... அவர் அக்கைப்பணியாளனின் உழைப்பை வாங்குவதில்லை ஆனால், அவர் தன் சொந்த நேரத்தில் தன் சொந்த வேலை நிபந்தனைகளின்கீழ் உற்பத்திசெய்த பொருளையே வாங்குகிறான். ஆனால், ஒருவர் ஒரு தொழிலாளியைப் பணியில் அமர்த்தும்போது, அவர் உழைப்பு ஆற்றலை விலைக்கு வாங்குகிறார். இதை வாங்கியவர் தான் தீர்மானிக்கும் ஒரு நேரத்திலும், வேலை நிபந்தனைகளின்கீழும் பயன்படுத்துகிறார் (பொதுவாக, இதை அவர் பயன்படுத்தியபின் அதற்கான விலையைச் செலுத்துகிறார்). இரண்டாவது, கூலித் தொழிலாளர் முறையின்கீழ் ஒருவர் தான் வாங்கிய உழைப்புக்கான விலையைச் செலுத்துவதற்காக அதை அளவிடுவதற்கான முறை ஒன்று தேவைப்படுகிறது. இது இரண்டாவது பண்புருவாக்கமான உழைப்பு-நேரம் என்பதன் அறிமுகத்தால் சாத்தியமாகிறது.[1]
கூலி என்பது ஒரு நியம அலகு வேலை நேரத்துக்கான பண அளவு ஆகும். தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நேர அலகு ஒரு நாள் ஆக இருந்தது. மணிக்கூட்டின் கண்டுபிடிப்பின் பின்னர் வேலை நேரத்தை மேலும் சிறிய அலகுகளாகப் பிரிக்க முடிந்தது. இதனால், ஒரு மணிநேரம் பொதுவான அலகானது.[2][3]
பண்டை எகிப்து,[4] பண்டைக் கிரேக்கம்,[5] பண்டை உரோம்[5] ஆகியவற்றில் கூலி முறை காணப்பட்டது.
மேற்கோள்
[தொகு]- ↑ Finley, Moses I. (1973). The ancient economy. Berkeley: University of California Press. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520024366.
- ↑ Thompson, E. P. (1967). "Time, Work-Discipline, and Industrial Capitalism". Past and Present 38: 56–97. doi:10.1093/past/38.1.56.
- ↑ Dohrn-van Rossum, Gerhard,, (1996). History of the hour: Clocks and modern temporal orders. Thomas Dunlap (trans.). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226155104.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Ezzamel, Mahmoud (July 2004). "Work Organization in the Middle Kingdom, Ancient Egypt". Organization 11 (4): 497–537. doi:10.1177/1350508404044060. பன்னாட்டுத் தர தொடர் எண்:13505084. http://org.sagepub.com/content/11/4/497.short. பார்த்த நாள்: 2014-02-13.
- ↑ 5.0 5.1 Finley, Moses I. (1973). The ancient economy. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520024366.