உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம்" (National Action Plan for Children) என்பது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் குழந்தைகள் பற்றிய 2002 சிறப்பு அமர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு தேசிய அறிக்கையாகும். பல நாடுகள் 2002 முதல் தங்கள் சொந்த செயல் திட்டத்தினை உருவாக்கி வருகின்றன. இந்தியாவில், குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இது குழந்தைகள் தங்கள் உரிமைகளை அனுபவிப்பதையும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான பல சேவைகளை அணுகுவதையும் உறுதி செய்கிறது. குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2013-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம், நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது. இது மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை மையமாகக் கொண்டது. குழந்தைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விரிவான கட்டமைப்பை இத்திட்டம் வழங்குகிறது.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • "Key documentation for Canada's NPA". Government of Canada.
  • "Special Session on Children - UNICEF". unicef.org.
  • "Convention on the Rights of the Child". UNICEF.