குனா நகரம்
குனா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°39′N 77°19′E / 24.65°N 77.32°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 84 km2 (32 sq mi) |
ஏற்றம் | 474 m (1,555 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,80,935 |
• அடர்த்தி | 2,155/km2 (5,580/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 473001 |
தொலைபேசி குறியீடு | 91 7542 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
வாகனப் பதிவு | MP-08 |
பாலின விகிதம் | 910 ♂/♀ |
குனா (Guna), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மால்வா பிரதேசத்தில் உள்ள குனா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். குனா நகரம் பார்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடக்கே 211 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 474 மீட்டர் (1555 அடி) உயரத்தில் உள்ளது.
இரயில் நிலையம்
[தொகு]குனா சந்திப்பு இரயில் நிலையம், போபால், புது தில்லி, விசாகப்பட்டினம், கொல்கத்தா நகரங்களுடன் இருப்புப் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 37 வார்டுகளும், 34,383 வீடுகளும் கொண்ட குனா நகரத்தின் மக்கள் தொகை 1,80,935 ஆகும். அதில் ஆண்கள் 94,464 மற்றும் பெண்கள் 86,471 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 24447 (14%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 27,631 மற்றும் 3,623 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.42%, இசுலாமியர் 12.37%, சமணர்கள் 4.25, சீக்கியர்கள் 0.45%, கிறித்தவர்கள் 0.27% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[4]
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், குனா நகரம் (1981–2010, extremes 1932–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.5 (92.3) |
37.8 (100) |
42.0 (107.6) |
45.8 (114.4) |
47.8 (118) |
46.8 (116.2) |
43.0 (109.4) |
39.2 (102.6) |
39.5 (103.1) |
39.3 (102.7) |
37.0 (98.6) |
32.9 (91.2) |
47.8 (118) |
உயர் சராசரி °C (°F) | 24.6 (76.3) |
27.6 (81.7) |
33.5 (92.3) |
38.7 (101.7) |
41.5 (106.7) |
38.9 (102) |
32.3 (90.1) |
30.3 (86.5) |
32.0 (89.6) |
33.1 (91.6) |
29.8 (85.6) |
26.5 (79.7) |
32.4 (90.3) |
தாழ் சராசரி °C (°F) | 9.1 (48.4) |
11.4 (52.5) |
16.6 (61.9) |
21.8 (71.2) |
26.3 (79.3) |
26.6 (79.9) |
24.4 (75.9) |
23.4 (74.1) |
22.5 (72.5) |
18.4 (65.1) |
13.5 (56.3) |
9.6 (49.3) |
18.6 (65.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.2 (28) |
-1.1 (30) |
4.7 (40.5) |
11.1 (52) |
16.7 (62.1) |
19.4 (66.9) |
19.1 (66.4) |
19.4 (66.9) |
13.1 (55.6) |
8.3 (46.9) |
2.8 (37) |
-1.7 (28.9) |
−2.2 (28) |
மழைப்பொழிவுmm (inches) | 9.4 (0.37) |
10.9 (0.429) |
8.4 (0.331) |
4.2 (0.165) |
13.2 (0.52) |
95.8 (3.772) |
303.8 (11.961) |
326.8 (12.866) |
162.3 (6.39) |
24.4 (0.961) |
11.2 (0.441) |
3.4 (0.134) |
973.7 (38.335) |
% ஈரப்பதம் | 41 | 32 | 23 | 18 | 21 | 39 | 69 | 78 | 64 | 42 | 42 | 43 | 43 |
சராசரி மழை நாட்கள் | 1.0 | 0.8 | 0.7 | 0.5 | 1.4 | 4.6 | 12.8 | 13.3 | 6.8 | 1.6 | 0.6 | 0.5 | 44.5 |
ஆதாரம்: India Meteorological Department[5][6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India: Guna". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
- ↑ Guna Junction railway station
- ↑ Guna Population, Religion, Caste, Working Data Guna, Madhya Pradesh - Census 2011
- ↑ "Station: Guna Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 303–304. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M118. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]