குண்டி (உடல்)
குண்டி | |
---|---|
ஓர் பெண்ணின் குண்டியும் (மேல்) ஆணின் குண்டியும் (கீழ்). | |
தமனி | superior gluteal artery, inferior gluteal artery |
நரம்பு | superior gluteal nerve, inferior gluteal nerve, cluneal nerves |
ம.பா.தலைப்பு | Buttocks |
குண்டி (buttock) என்பது மனிதன் மற்றும் மனிதக் குரங்கு போன்ற விலங்குகளின் உடலில் பின் பகுதியில், முதுகுப் பகுதிக்குக் கீழாகவும், கால் தொடைப் பகுதிக்கு மேலாகவும் உருண்டையான, சதைப் பிடிப்புடன் காணப்படும் உறுப்புக்கான தமிழ்ச் சொல்லாகும். தமிழிலும் பிற திராவிட மொழிகளான கன்னடம் மலையாளத்திலும் குண்டி என்னும் சொல் பள்ளமான பகுதியைக் குறிக்கும்.[1] குறிப்பாக, வாயகன்ற பாத்திரம் (இதனைக் குண்டா, குண்டான் என்றும் சொல்வர்),[2] பழங்களில் காம்புள்ள பகுதியில் குழிந்து இருக்கும் பக்கம்[3] (எ.கா. ஆப்பிள், மாம்பழம்) முதலியவற்றைக் குண்டி என்று சொல்வதுண்டு.
இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கில்
[தொகு]குண்டி எனும் தமிழ் சொல் மனித உடலின் பின்னுறுப்பை குறிக்க பயன்படும் அதேவேளை, இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் குண்டி எனும் சொல் பெண்களின் பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தபடுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில்.
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்
[தொகு]யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் குண்டி எனும் சொல்லுடன் தொடர்புடைய பல சொல்லாடல்கள், நகைச்சுவைக் கதைகள் உள்ளன.
"குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவ மறுப்பது போன்று", "குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவ மறுப்பவன் போன்று" எனும் சொல்லாடல்கள் காரணமற்று கோபம் கொள்வதனையும், கோபம் கொண்டவரின் கோபம் பொருளற்றது என்பதை இடித்துரைக்கும் வகையிலும் இச்சொல்லாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அடிக்கடி பயன்படுவதுண்டு. சிலவேளை இச்சொல்லாடல்கள் நகைச்சுவையாக சொல்லப்படுவதும் உண்டு.
நகைச்சுவைக் கதை
[தொகு]யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு வண்டில் கட்டி பலநாள் நீண்டநாள் பயணமாக பயணித்த கால கட்டத்தில் "அதுவல்லோ குண்டி, இதுவென்ன குண்டி" என காலைக் கடன் முடிக்க சிரமப்பட்ட ஒரு பக்தர், தனது குண்டியை தானே நொந்துகொண்ட நகைச்சுவைக் கதையொன்றும் உண்டு.
பழமொழி
[தொகு]எது கிடைத்தாலும் மிகுதியாகப் பயன்படுத்துபவரைக் குறிக்க, சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தடவுவான் என்பர்.
இலக்கியப் பயன்பாட்டில்
[தொகு]தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக பெண்களின் இடையின் கீழான பகுதியை "பின்னழகு" என வர்ணனை செய்தெழுதும் வழக்கு பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது.
ஒத்தக்கருத்துச் சொற்கள்
[தொகு]குண்டி என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தும் பிற சொற்களும் அவற்றின் பயன்பாடும்:
- பின்னழகு - இது பொதுவாக குண்டியை நகைச்சுவையாக குறிப்பிடும் பொழுது பயன்படுத்தப் படுகிறது.
- சூத்து - தகாத வார்த்தை. பொது இடங்களில் இந்த வார்த்தை பயன்பாட்டை தவிர்க்கவும்.
- பின் பக்கம் - இது ஒரு இடக்கர் அடக்கல் பயன்பாடாகும். குண்டி என்று நேரடியாக கூறத் தயங்குபவர்கள் இந்த வார்த்தையை பயன் படுத்துவர்.
நாகரிகம்
[தொகு]குண்டி என்பது ஆபாசமில்லாத ஒரு உறுப்பு என்றாலும் நவீன நாகரிகம் இதைப் பெரும்பாலும் மறைக்கவே சொல்லுகிறது. தற்பொழுதுள்ள அனைத்து வகைத் துணிகளும் குண்டியை மறைத்தே வைக்கிறது. இருப்பினும், குண்டி வெளியே தெரியும் ஆடைகள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (கோவணம் போன்றவை). ஆனால், மக்கள் பொதுவாகக் கூடும் இடங்களில் இவற்றை யாரும் உடுத்துவதில்லை.
-
Jean-Jacques Lequeu (c. 1785).
-
Félix Vallotton (c. 1884).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murray Barnson Emeneau; Burrows, Thomas D. (1984). Dravidan Etymological Dictionary. Clarendon Press. p. 155.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 978.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: date format (link) - ↑ சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 978.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: date format (link)