உள்ளடக்கத்துக்குச் செல்

குடையுருமஞ்சரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பெல் அல்லது குடை மஞ்சரியில் மையத்தண்டு தனித்தோ கிளைத்தோ காணப்படலாம். ஆனால் மஞ்சரித்தண்டின் செங்குத்தான வளர்ச்சி திடீரென்று தடைபட்டு, நுனியில் கொத்தான பூவடிச்செதில்கள் தோன்றுகின்றன. இவை வட்டப்பூவடிச்செதில்கள் (இன்வலுகர் ஆப் பிராக்ட்சு) எனப்படும். இவற்றின் கோணங்களிலிருந்து ஒரே நீளமுள்ள காம்புடைய மலர்கள் குடை போன்ற அமைப்பில் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு - அல்லியம் சீபா (வெங்காயம்) [1] 

கூட்டு அம்பெல்

[தொகு]

அம்பெல் அல்லது குடை மஞ்சரியின் மையத்தண்டு கிளைத்து ஒவ்வொரு கிளையின் நுனியிலும் ஒரு அம்பெல் மஞ்சரி காணப்பட்டால் அது கூட்டு அம்பெல் எனப்படும். எடுத்துக்காட்டு-டாகசு கரோட்டா(காரட்)[2]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. umbel etymology
  2. மேல்நிலை முதலாம் ஆண்டு உயிரியல் தாவரவியல். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம். 2011. p. 126.