உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்ச பிகாரி மெகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்ச பிகாரி மெகர்
Kunja Bihari Meher
பிறப்பு1928 (அகவை 95–96)
பர்கஃட் மாவட்டம், ஒடிசா, இந்தியா
பணிநெசவாளர்
தலைமை கைவினைஞர்
அறியப்படுவதுநாத சங்கீர்த்தனம்
விருதுகள்பத்மசிறீ
கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருது

குஞ்ச பிகாரி மெகர் (Kunja Bihari Meher) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் மற்றும் நெசவாளர் ஆவார்.[1] ஒடிசா மாநிலத்தின் பர்கார் மாவட்டத்தில் இவர் பிறந்தார்.[2] இவர் ஒடிசாவின் சம்பல்புரி புடவைகளில் காணப்படும் இக்காட் என்ற கட்டு-சாயப் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றவர் ஆவார்.[3] இவருடைய இத்தொழில்நுட்பம் சம்பல்புரி கைத்தறி தொழில்துறையின் வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.[4] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது குஞ்ச பிகாரி மெகருக்கு வழங்கப்பட்டது.[5] 2009 ஆம் ஆண்டு நெசவு வடிவமைப்புக்கான தேசிய மையத்தின் கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.[6] குஞ்ச பிகாரி மெகரின் மகன் சுரேந்திர மெகரும் ஒரு பிரபலமான நெசவாளர் ஆவார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meet the Weavers and Dyers of Ikat". Strand of Silk. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
  2. "ECourts" (PDF). ECourts. 2015. Archived from the original (PDF) on 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
  3. "Surendra Kumar Meher". Paramparik Karigar. 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
  4. "Sambalpuri Sari: Living tradition". Meri News. 20 November 2008. Archived from the original on 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  6. "National Awards for the year 2009". National Centre for Textile Design. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
  7. "Sant Kabir Award-2013" (PDF). Handloom Corporation of India. 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.