குஞ்சுண்ணி
குஞ்சுண்ணி | |
---|---|
பிறப்பு | வாலப்பாடு, கொச்சி இராச்சியம், , பிரித்தானிய இந்தியா | 10 மே 1927
இறப்பு | 26 மார்ச்சு 2006 திருச்சூர், கேரளா, , இந்தியா | (அகவை 78)
இருப்பிடம் | வாலப்பாடு, திருச்சூர் |
தேசியம் | இந்தியர் |
இனம் | மலையாளி |
குடியுரிமை | இந்தியா |
பணி | கவிஞர் |
பெற்றோர் | நீலகண்ட மூசாத்து, அதியாத்து நாராயணி அம்மா |
விருதுகள் | கேரள சாகித்திய அகாதமி விருது (1974, 1984) |
குஞ்சுண்ணி ( மே 10, 1927—மார்ச்சு 2, 2006) மலையாளக் கவிஞர் ஆவார். குழந்தைகளுக்கான பாடல்கள் நிறைய எழுதினார். குஞ்சுண்ணி மாசுட்டர் என்றும் அறியப்படும் இவர் பல இலக்கிய விருதுகள் பெற்றார். இவர் மிக எளிமையாக வாழ்ந்தவர்.[1][2] இவர் பல தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.[3]
இளமைக் காலம்
[தொகு]குஞ்சுண்ணி திருச்சூரில் வாலப்பாடு என்னும் ஒரு சிற்றுரில் பிறந்தார். தந்தை நீலகண்ட மூசாத்து, தாய் அதியாத்து நாராயணி அம்மா. சேலரிப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய குஞ்சுண்ணி கோழிக்கோடு இராமகிருட்டினா சேவாசிரம உயர்நிலைப் பள்ளியில் 1953 இல் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டு வரை பணி செய்த இவர் ஒய்வு பெற்ற பிறகும் எளிமை எண்ணம் மேலோங்கிய காரணத்தால் ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார்.
இலக்கியப்பணி
[தொகு]மாத்ரு பூமி என்னும் வார இதழில் குட்டீட்டன் என்னும் புனை பெயரில் குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதி வந்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் குறித்தும் படைப்புகள் பற்றியும் சொல்லிக் கொடுத்தார். கமலுதின் மொகமது மசித் என்பவர் இயக்கிய பூமிக்கீதம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். குஞ்சுண்ணி தம் வாழ்க்கை வரலாற்றை என்னிலூடெ என்ற புத்தகத்தில் எழுதினார். இப்புத்தகம் நகைச் சுவைக்கும் எளிமைக்கும் பேர் போன ஒன்று. 1987 இல் தம் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் செயல்பட்டார். மயில் பீலித் துண்டும் வல பொட்டுகளும் என்ற ஆவணப் படத்தில் கிருட்டிண நம்பூதிரி வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.
இறப்பு
[தொகு]இவர் 2006 மார்ச்சு 26 இல் தன் மூதாதையர் வீட்டில் இறந்தார்.[4]
விருதுகள்
[தொகு]- கேரளா சாகித்திய அகாதமி விருதுகள் (1974, 1984)[3]
- மாநில நிறுவன குழந்தைகள் இலக்கிய விருது (1982)[3]
- கேரளா சாகித்திய அகாதமி வாணாள் சாதனை விருது (1988)[3]
- மாநில நிறுவன குழந்தைகள் இலக்கிய வாணாள் சாதனை விருது (2002)[3]
- வழக்குன்னுவம் விருது (2002[3])
- வி.ஏ கேசவன் நாயர் விருது (2003)[3]
- டோம்யஸ் விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Big Big Kunjunni Mash". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Big Kunjunni Mash". Manoramaonline. Archived from the original on 4 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Santhosh, K., "Kunjunni passes away" பரணிடப்பட்டது 2006-05-27 at the வந்தவழி இயந்திரம், The Hindu, 27 March 2006, retrieved 24 January 2009
- ↑ "Kunjunni passes away" பரணிடப்பட்டது 2006-05-27 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 27 March 2006. Retrieved 10 June 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- https://www.youtube.com/watch?v=RIPfz_pnYP8
- http://topentity.com/kunjunni-mash/ பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/kunjunni-passes-away/article3170082.ece