கிராம ஊராட்சி
Appearance
கிராம ஊராட்சி (Gram panchayat) தமிழ்நாட்டில் 500 எண்ணிக்கைக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் முறையே:[1][2]
- கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- கிராம ஊராட்சியின் தலைவர் உறுப்பினர்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர்.
- உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
- கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.
கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் கடமைகள்:
[தொகு]- படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதல்
- தெரு விளக்குகள் அமைத்தல
- சிறுபாலங்கள் கட்டுதல்
- ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
- குடிநீர்க் கிணறு தோண்டுதல்
- கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
- சிறிய பாலங்கள் கட்டுதல்
- வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
- கிராம நூலகங்களைப் பராமரித்தல்
- தொகுப்பு வீடுகள் கட்டுதல்
- இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
- வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
கிராம ஊராட்சியின் வருவாய்
[தொகு]- வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்
- குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்
- நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு
- சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு
- சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
- இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.
- மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்.
கிராம சபை / ஊர்மன்றக் கூட்டம்
[தொகு]- ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
- கிராம சபைக் கூட்டத்திற்கு கிராம ஊராட்சித் தலைவர் தலைமை வகிப்பார்.
- ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு (ஏப்ரல் 2022 முதல் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவம்பர் 1- உள்ளாட்சி தினம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி 26 குடியரசு நாள், மே 1 தொழிலாளர் நாள், ஆகத்து 15 இந்திய விடுதலை நாள், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.[3]
கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின்பயனாளிகள் யார் என்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை கிராம சபையின் பணிகள் ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]- வருவாய் கிராமம்
- கணக்கெடுப்பில் உள்ள ஊர்
- ஊராட்சி ஒன்றியம்
- மாவட்ட ஊராட்சி
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
- மாநகராட்சி
- நகராட்சி
- பேரூராட்சி
- மாவட்டம்
- வருவாய் வட்டம்
- குறுவட்டம்
- வருவாய் கிராமம்
- கணக்கெடுப்பில் உள்ள ஊர்