உள்ளடக்கத்துக்குச் செல்

காஸ்கி மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°20′N 84°00′E / 28.333°N 84.000°E / 28.333; 84.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு நேபாளத்தில், காஸ்கி மாவட்டத்தின் அமைவிடம்
உலக அமைதிக்கான தூபி, பொக்காரா

காஸ்கி மாவட்டம், (Kaski District) (நேபாளி: कास्की जिल्ला Listen, நேபாளத்தின், நேபாள மாநில எண் 4ல் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பொக்காரா நகரம் ஆகும்.

காஸ்கி மாவட்டம் 2,017 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,92,098 ஆக உள்ளது. இம்மாவட்டம் இமயமலையில் 450 மீட்டர் உயரம் முதல் 8,091 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது.

காஸ்கி மாவட்டம் முப்பத்தி இரண்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும், நான்கு நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது.[1]

இம்மாவட்டம் அண்ணபூர்ணா மலைத் தொடர்களின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஏழாயிரம் மீட்டர்களுக்கும் மேல் உயரமுள்ள கொடுமுடிகள் கொண்ட மச்சபூச்சர மலை உள்ளிட்ட 11 மலைகள் உள்ளது. மலையேற்ற வீரர்களின் சிறந்த பயிற்சி களமாக இம்மாவட்டம் திகழ்கிறது.

இம்மாவட்டத்தில் சேட்டி கண்டகி ஆறு, மோதி மற்றும் மடி ஆறுகள் பாய்கிறது. மாவட்டத் தலைநகரான பொக்காரா நகரம் சிறந்த சுற்றுலாத் தலம் ஆகும்.

வரலாறு

[தொகு]

காஸ்கி பகுதியை 1200 முதல் நேவாரிகளான மல்லர் வம்சத்தினர் ஆண்டனர். 1768ல் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா காஸ்கியைக் கைப்பற்றி நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். பின்னர் காஸ்கி மற்றும் லம்சூங் பகுதிகளுக்கு நேபாள மன்னர்களின் பரம்பரை பிரதம அமைச்சர்களாக இருந்த ராண வம்சத்தை நிறுவிய ஜங் பகதூர் ராணாவும், அவரது ராணா வம்ச பிரதம அமைச்சர்களும் 1951 முடிய ஆண்டனர்.

நிர்வாகம்

[தொகு]
Political map of Kaski District (with updated VDCs)
காஸ்கி மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்
காஸ்கி மாவட்ட நிர்வாக அலுவலகம்

காஸ்கி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளை நிர்வகிப்பதற்கு மாவட்ட வளர்ச்சி மன்றம், மாவட்டத் தலைநகரான பொக்காராவில் இயங்குகிறது. இம்மாவட்டத்தில் பொக்காரா-லெக்நாத் மாநகராட்சியும், ஒரு நகர்புற நகராட்சியும், 53 கிராமிய நகராட்சி மன்றங்களும் உள்ளது.

பண்பாடு

[தொகு]

குரூங் மக்கள், சேத்திரிகள் , நேவார் மக்கள், தக்களி மக்கள், குமால் மக்கள் போன்ற பல்வேறு இனக் குழுக்கள் வாழும் காஸ்கி மாவட்டத்தில், பல்வேறு மொழி பேசும் மக்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்கள் பின்பற்றினாலும், சாதி அடிப்படையில் மக்களின் உணவு, உடைகள், நடனங்கள், இருப்பிடங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் மாறியுள்ளது. 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஸ்கி மாவட்டத்தில் எண்பத்தி நான்கு சாதிகளும், நாற்பத்தி நான்கு மொழிகளும், பதினொன்று சமயங்களும் பயிலப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

இம்மக்களின் அன்றாட முக்கிய உணவு பருப்புச் சாதம் ஆகும்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
நேபாளப் புவியியல் மற்றும் தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 18.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 29.4%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 16.6%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 12.1%
Montane ecology#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள் 14.8%
Snow line 5,000 மீட்டர்களுக்கு மேல் 7.4%
டிரான்ஸ் - இமயமலை 3,000 - 6,400 மீட்டர்கள் 0.6%

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Handbook of District Development Committee, Kaski, 2015. Pokhara, Kaski. 2015. pp. 3–5.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்

[தொகு]