காஷ்மீரிகள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
காஷ்மீரிகள் (காஷ்மீரி: کٲشِر لۄکھ / कॉशुर लुखکٲشِر لۄکھ) என்பவர்கள் காஷ்மீரக பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீரி, தாத்ரிக் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் ஆவர். [upper-alpha 1] [1][2][3]காஷ்மீரி: کٲشُر لُکھ / कॉशुर लुख சம்முகாஷ்மீரின் செனாப் பிராந்தியத்தின் தோடா, ரம்பன், பதர்வா, கிஷ்த்வார் மாவட்டங்களிலும் நீலம் மற்றும் லீபா பள்ளத்தாக்கு பகுதியிலும் காஷ்மீரிகள் செறிந்து வாழ்கின்றனர், பெரும்பாலானோர் இசுலாம் மதத்தை சேர்ந்தவர்களாவர். குறிப்பிடத்தக்க அளவில் இந்து காஷ்மீரிகளும் வாழ்கின்றனர்.
தோற்றம்
[தொகு]ஆய்வாளர்களின் கூற்றின்படி காஷ்மீரிகள் மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர் இந்தோ ஆரியர் பிரிவினர் என்றும் சிலர் தென் இந்திய பகுதியில் இருந்து குடியேரியவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர் .[4]
ஆர்கே பர்மு என்ற அறிஞர் கூற்றின் படி காஷ்மீரிகள் யூத இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாகவும் தெரிவித்தார் எனினும் இக்கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் மறுக்கின்றனர்.[5]
வரலாறு
[தொகு]இந்து மற்றும் புத்தர்களின் ஆட்சி
[தொகு]இந்து மதத்தின் வர்ணாசிரம கோட்பாடுகளால் சாதிய பாகுபாடுகள் காரணமாக ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்கள் மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் காலத்தில் காஷ்மீரிகள் புத்த மதத்தை ஏற்றனர் [6]
இசுலாம் வருகை ஷா மிர் வம்சம் (1320–1580)
[தொகு]காஷ்மீரகத்தில் 1320ம் ஆண்டில் ஆட்சியாளர் சையித் பிலால் ஷா அவர்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்ட முதல் அரசர் ஆவார் கிபி 1339ல் ஷா மிர் என்பவர் மூலம் அவ்வம்சம் தோற்றுவிக்கப்பட்டது இக்கால கட்டத்தில் இசுலாம் தீவிரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .[7][8]
முகலாயர் ஆட்சி (1580–1750)
[தொகு]பேரரசர் அக்பர் காலத்தில் காசுமீர் பள்ளத்தாக்கு படையெடுக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டது முகலாயர் படையில் காஷ்மீரிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றினர் .[9]
சீக்கியர் ஆட்சி (1799–1849)
[தொகு]காஷ்மீர் பகுதிகளை ஆண்ட சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங் 1839-இல் மறைவுக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு பலமிழந்தது. இதனை பயன்படுத்தி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியினர் சீக்கியர்களுக்கு எதிராக 1845ஆம் ஆண்டில் நடந்த முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் சீக்கியர்கள் தோற்றனர். மீண்டும் 1849ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோல்வியுற்ற சீக்கியப் பேரரசு கலைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1849- 1948)
[தொகு]கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால் சீக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றிய காஷ்மீர், லடாக், ஜில்ஜிட்-பால்டிஸ்தான் போன்ற பகுதிகளை 1849-இல் ஜம்முவின் டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங்கிடம் (1792–1857) 7,50,000 நானக்சாஹீ ரூபாய்க்கு மாற்றித் தரப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கிய பகுதிகளைக் கொண்டு டோக்ரா வம்சத்தினர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை நிறுவினர்.
ஜம்மு காஷ்மீர் ஒப்பந்தம் 1947
[தொகு]26 அக்டோபர் 1947-இல் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்திற்கும், இந்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தப்படி, காஷமீரிகள் வாழ்ந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தது.
கலாச்சாரம்
[தொகு]உணவு
[தொகு]பண்டைய காலத்தில் அரிசி மற்றும் மாமிசம் பிரதான உணவாக இருந்துள்ளது தற்போது வரை இறைச்சி உணவு பிரதானமாகும் பசுந்தேனீருடன் பாதாம் விழாக்களில் பரிமாறப்படுகிறது.[10]
மொழி
[தொகு]காஷ்மீரி மற்றும் தாத்ரிக் மொழி இம்மக்களால் பேசப்படுகிறது .தாத்ரிக் மொழி இலக்கன வடிவில் உள்ள ஒரே காஷ்மீரிய மொழியாகும் 2001ம் ஆண்டு இந்திய கணக்கின்படி 55 லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீரிகளால் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[11]
குறிப்புகள்
[தொகு]- ↑ (Snedden, Understanding Kashmir and Kashmiris 2015, ப. 20–21) "...the 'real' Kashmir—that is, the Kashmir Valley...Historically, Kashmir equates to the Kashmir Valley."
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
- ↑ Minahan.J.B., (2012), Dogras, Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia
- ↑ "Department of Tourism, Jammu and Kashmir - Ethnic Groups". Jktourism.org. Archived from the original on 2015-07-31. பார்க்கப்பட்ட நாள் 2017-02-19.
- ↑ Gulshan Majeed., “No Naga Presence in Ancient Kashmir The Past Never Is”, in Approaches to Kashmir Studies, eds G.M. Khawaja, Gulshan Majeed, 2011, Gulshan Books, Srinagar, pp 16-27.
- ↑ Bhat 2017, ப. 56.
- ↑ Kaw, Kashmir and its People 2004, ப. 91.
- ↑ Mīr ʻAbdulʻazīz (2000), Freedom Struggle in Kashmir, Research Society of Pakistan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789694250908,
There is no doubt that many Kashmiri pandits migrated to the plains during the rule of Sikandar the iconoclast
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ Rai, Hindu Rulers, Muslim Subjects 2004, ப. 286.
- ↑ Snedden, Understanding Kashmir and Kashmiris 2015, ப. 29.
- ↑ Solomon H. Katz; William Woys Weaver (2003), Encyclopedia of Food and Culture: Food production to Nuts, Scribner, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-80566-5
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author1=
and|last=
specified (help); More than one of|author2=
and|last2=
specified (help) - ↑ "Up north: Call for exploration of archaeological sites". June 5, 2015. http://tribune.com.pk/story/897933/up-north-call-for-exploration-of-archaeological-sites/.