உள்ளடக்கத்துக்குச் செல்

கலாம் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 35°28′48″N 72°35′15″E / 35.4801°N 72.5874°E / 35.4801; 72.5874
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாம்
کالام
கலாம் பள்ளத்தாக்கு
கலாம் பள்ளத்தாக்கு
கலாம் is located in Khyber Pakhtunkhwa
கலாம்
கலாம்
கலாம் is located in பாக்கித்தான்
கலாம்
கலாம்
ஆள்கூறுகள்: 35°28′48″N 72°35′15″E / 35.4801°N 72.5874°E / 35.4801; 72.5874
நாடுபாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்Swat
ஏற்றம்
2,001 m (6,565 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்23,170
நேர வலயம்ஒசநே+5 (PST)

கலாம் பள்ளத்தாக்கு ( Kalam Valley) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சுவாத் ஆற்றின் கரையோரத்தில் சுவாத் பள்ளத்தாக்கின் வடக்கு மேல் பகுதியில் மிங்கோராவிலிருந்து 99 கிலோமீட்டர்கள் (62 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும். [2] [3] கப்ரால் மற்றும் உசு ஆகிய இரண்டு முக்கிய துணை நதிகளின் சங்கமத்தின் விளைவாக சுவாத் ஆறு உருவானது. [4] [5]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீ (6,600 அடி) உயரத்தில், ஆற்றின் மேலே அமைந்துள்ளது. மேலும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[6] 5,918 மீட்டர் (19,416 அடி), 6,096 மீட்டர் (20,000 அடி) உயரமுள்ள பெயரிடப்படாத மற்றொரு சிகரம் உட்பட, கலாம் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கு, மாடில்டனில் இருந்து தெரியும் மலைகளும் உள்ளன. [7]

ஏரிகள்

[தொகு]
குந்தோல் ஏரி, உத்தரர் கலாம், சுவாத்

இங்கு ஏராளமான பனிப்பாறை ஏரிகள் உள்ளன. மகோதந்து ஏரி மற்றும் குந்தோல் ஏரி ஆகிய இரண்டும் கலாம் பள்ளத்தாக்கில் இரண்டு குறிப்பிடத்தக்க ஏரிகள் ஆகும். இவை இரண்டும் எளிதில் அணுகக்கூடிய வழிகள் காரணமாக அடிக்கடி பார்வையிடப்படுகின்றன. இசிமிசு ஏரி போன்ற இப்பகுதியில் உள்ள மற்ற ஏரிகள் உள்ளே நுழைவது கடினம் மற்றும் கால் நடையாகச் செல்ல வேண்டும்.

மகோதந்து ஏரி சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெரிய ஏரியாகும். இது கலாமிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில், இந்து குசு மலைகளின் அடிவாரத்தில் உள்ள உசோ துணைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கலாம் பள்ளத்தாக்கில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க ஏரி, உத்ரோர் பிராந்தியத்தின் வடக்கில் அமைந்துள்ள குந்தோல் ஏரி, கலாமிலிருந்து 19 கிமீ தொலைவில். இது இந்து குசு மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது

புகைப்படங்கள்

[தொகு]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL: KHYBER PAKHTUNKHWA" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-23.
  2. "Kalam Valley in Swat District, Khyber Pakhtunkhwa and Distance from Mingora". Pakistantravelguide.pk. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
  3. "Kalam Valley, Swat District, Khyber Pakhtunkhwa". www.worldfortravel.com. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
  4. "Birthplace of Swat and Surrounded by Green Hills and Thick Forest". Destinations.com.pk. 24 February 2017. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
  5. Hassan, Ali (7 August 2015). "Kalam — As memories of war fade..." Dawn. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  6. Tourists Guide >> Places to Visit >> Kalam Publisher: swat valley.com, Retrieved on 29 September 2012
  7. Archived at Ghostarchive and the "Kalam From Above.......Pakistan HD". யூடியூப். Archived from the original on 2017-03-29. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link): "Kalam From Above.......Pakistan HD". யூடியூப்.