கரிபிய மொழிகள்
கரிபியம் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
பெரும்பாலும் வட மத்திய தென்னமெரிக்காவில். தென் கரிபியன், நடு அமெரிக்கப் பகுதிகளிலும் காணலாம். |
மொழி வகைப்பாடு: | ஜெ–துபி–கரிபியம்? கரிபியம் |
துணைப்பிரிவு: |
—
|
கரிபிய மொழிகளின் தற்போதைய (2000) பரம்பலும், 16 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கக்கூடிய பரம்பலும். |
கரிபிய மொழிகள் (Cariban languages) தென்னமெரிக்காவின் தாயக மொழிக் குடும்பங்களுள் ஒன்றைச் சேர்ந்த மொழிகள். இவை அமேசான் ஆற்றுக் கழிமுகத்தில் இருந்து கொலம்பியாவின் ஆன்டெசு மலைத்தொடர்கள் வரை தென்னமெரிக்காவின் வடக்கு அந்தலைப் பகுதியில் பரந்து காணப்படுகின்றன. அத்துடன் நடு பிரேசிலிலும் உள்ளன. இம்மொழிகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை. கிளைமொழி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தைப் பொறுத்து இம்மொழிகளின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று டசின்கள் வரை இருக்கக்கூடும். இவற்றுள் பல மொழிகளைச் சில நூறு பேர்கள் மட்டும் பேசினாலும், இன்னும் பேசப்படுகின்றன. மக்கூசி என்னும் ஒரு மொழியை மட்டும் ஏறத்தாழ 30,000 பேர்கள் பேசுகின்றனர். இம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியான இக்சுக்காரியானா மொழி, மனித மொழிகள் எதிலும் இல்லாதது என முன்னர் கருதப்பட்ட செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் சொல்லொழுங்குக்கு உரிய மொழி என அறியப்பட்டதனால், கரிபியன் மொழிக்குடும்பம் மொழியியலாளர்களிடையே பெரிதும் அறியப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kaufman, Terrence. 2007. "South America". In: R. E. Asher and Christopher Moseley (eds.), Atlas of the World’s Languages (2nd edition), 59–94. London: Routledge.
- ↑ Desmond Derbyshire, 1999. "Carib". In Dixon & Aikhenvald, eds., The Amazonian Languages. CUP.
- ↑ Meira, Sérgio. 2006. A família lingüística Caribe (Karíb). Revista de Estudos e Pesquisas v.3, n.1/2, p.157-174. Brasília: FUNAI. (PDF)