உள்ளடக்கத்துக்குச் செல்

கரிக்கோல் துருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிக்கோல் துருவி
இயந்திரவியல் கரிக்கோல் துருவி நிகழ்படம்

கரிக்கோல் துருவி (Pencil sharpener அயர்லாந்தில் ஒரு பாரர் அல்லது டாப்பர் ) [1] என்பது ஒரு கரிக்கோலின் எழுதும் புள்ளியை கூர்மைப்படுத்துவதற்கான ஒரு கருவியாகும். இவற்றை கைமுறையாகவோ அல்லது மின்சார இயக்கி மூலமாகவோ இயக்கலாம்.

வரலாறு

[தொகு]

பிரத்யேகமாக கரிக்கோல் துருவிகள் உருவாகும் முன், கத்தியால் கூர்மைப்படுத்தப்பட்டது .

1822 ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு நூலில் CA பவுச்சரின் (பாரிஸ்) கார்கோல் துருவியின் கண்டுபிடிப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அவர் படம் பதி கருவி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது கார்கோல்களைக் கூர்மையாக்க ஒரு சாதனம் தேவைப்பட்டது. [2] [3] இவரது யோசனை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக அந்த சமயத்தில் வெளியான செருமானிய இலக்கியங்கள் கூறுகின்றன.[4] ஆனால் பௌச்சர் தனது கரிக்கோல் துருவிக்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை

பிரெஞ்சு கணிதவியலாளர் பெர்னார்ட் லாசிமோன் (லிமோஜஸ்) [5] 1828 ஆம் ஆண்டில் கரிக்கோல் துருவிக்கான காப்புரிமையினைப் பெற விண்ணப்பித்தார்.[6] இவரது காப்புரிமையைப் பயன்படுத்தி பாரிஸில் உள்ள வர்ணபூச்சு ஆபரணக் கடையான பினான்ட் மூலம் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. [3]

1830கள் மற்றும் 1840களில், பாரிசைச் சேர்ந்த சில பிரெஞ்சு மக்கள், பிரான்சுவா ஜோசப் லாஹவுஸ் போன்ற எளிய பென்சில் கூர்மைப்படுத்தும் கருவிகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர்.[7] இந்த சாதனங்கள் ஓரளவு விற்பனை செய்யப்பட்டன. 1847 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பிரபுவான தியரி டெஸ் எஸ்டிவாக்ஸ், நவீன வடிவத்தில் எளிமையான கையடக்கக் கருவியினைக் கண்டுபிடித்தார். [8] [9] முதல் அமெரிக்கக் கரிக்கோல் துருவியானது 1855 இல் பேங்கோர், மைனேவைச் சேர்ந்த வால்டர் கிட்ரெட்ஜ் ஃபாஸ்டர் என்பவரால் காப்புரிமை பெற்றது [10] இவர் உலகின் முதல் கரிக்கோல் துருவிக்கான நிறுவனத்தை நிறுவி எளிமையாக (கையடக்க அளாவிலான) துருவிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்தார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவிலும் "அமெரிக்கன் கரிக்கோல் துருவி" என்று விற்கப்பட்டன.[11]

சான்றுகள்

[தொகு]
  1. Gerry Coughlan (2007). Irish Language and Culture. Lonely Planet. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-577-3.
  2. Recueil de la Société polytechnique: ou Recueil industriel, manufacturier, agricole et commercial, de la salubrité publique, ... (in பிரெஞ்சு). Société polytechnique. 1822. pp. 290–295.
  3. 3.0 3.1 Grahl, André. "History of pencil sharpeners and pointers −1850 Lassimone, Cooper/Eckstein, Lahausse". patent-infos.de. Archived from the original on 13 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
  4. Hülsse, Julius A. (1841). Allgemeine Maschinen-Encyclopädie: A – Beu (in ஜெர்மன்). Voss. p. 247.
  5. Description des machines et procédés spécifiés dans les brevets d'invention, publ. par C.P. Molard. [With] Table générale des vingt premiers volumes...
  6. Du Commerce, France min (1835). Description des machines et procédés spécifiés dans les brevets d'invention, publ. par C.P. Molard. [With] Table générale des vingt premiers volumes... (in பிரெஞ்சு). pp. 583, 81–83.
  7. Bulletin de la Société d'encouragement pour l'industrie nationale (in பிரெஞ்சு). Société d'encouragement pour l'industrie nationale. 1834. pp. 406–407.
  8. Description des machines et procédés pour lesquels des brevets d'invention ont été pris sous le régime ... (in பிரெஞ்சு). L'Imprimerie Nationale. 1852. p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781010644743.
  9. "20 Things You Didn't Know About... Pencils", Discover magazine, May 2007, பார்க்கப்பட்ட நாள் 2009-04-30
  10. "Handheld Pencil Sharpeners". Archived from the original on 18 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  11. Neueste Nachrichten aus dem Gebiete der Politik: 1858 (in ஜெர்மன்). Wolf. 1858. p. 2623.


வெளி இணைப்புகள்

[தொகு]