உள்ளடக்கத்துக்குச் செல்

கபில் தேவ் பிரசாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கபில் தேவ் பிரசாத்து (Kapil Dev Prasad) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளர் ஆவார். புடவைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் திரைச்சீலைகள் மீது பவன் புட்டி என்ற 52 நோக்குரு வகைகளை நெசவு செய்து புத்த கலையை பிரபலப்படுத்தியதற்காக இவர் அறியப்படுகிறார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

கபில் தேவ் பிரசாத்து 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது குடும்பத் தொழில் கைத்தறி சம்பந்தப்பட்டதாகும். பீகாரில் உள்ள நாலந்தா மாவட்டத் தலைமையகமான பீகார் செரீப்பின் கிழக்கு-வடக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாசுமன் பிகா கிராமம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து இவர் வந்தார்.

2023 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய நாட்டின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]