உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம்புயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியலில் ஓம்புயிர் (host) அல்லது விருந்து வழங்கி என்பது, ஒட்டுண்ணிகளாக வாழும் வைரசுக்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றுக்கு உணவும், வாழிடமும் அளிக்கும் உயிரினங்களாகவும், அத்துடன் ஒன்றிய வாழ்வு (Symbiosis) வாழும் உயிரினங்களில் இணை வாழ்வை நடத்தும் அடுத்த உயிரினத்துக்கு உணவையும், வாழிடத்தையும் வழங்கும் உயிரினங்களாகவும் இருப்பவையேயாகும். விலங்குகளின் உடற்கலங்களில் வைரசுக்கள் ஒட்டுண்ணியாக வாழும்போது விலங்குகள் ஓம்புயிராகவும், நைதரசன் உருவாக்கும் பக்டீரியாக்கள் அவரைவகைத் தாவர வேர்களில் ஒன்றியவாழ்வு வாழும்போது அவரைவகைத் தாவரங்கள் ஓம்புயிராகவும், ஒட்டுண்ணிப் புழுக்கள் விலங்குகளில் வாழும்போது, விலங்குகள் ஓம்புயிர்களாகவும் இருக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Campbell, Neil A.; Reece, Jane B. (2002). Biology (6th ed.). Pearson Education. pp. 540–541. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-75054-6.
  2. Pappas, Stephanie (21 July 2016). "Parasite Evolution: Here's How Some Animals Became Moochers". Live Science. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  3. "Parasitoids". Cornell University College of Agriculture and Life Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்புயிர்&oldid=3889636" இலிருந்து மீள்விக்கப்பட்டது