ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை
ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் சுமார் 12.4 மீ (41 அடி) உயரமுள்ள ஒரு மாபெரும் அமர்ந்த உருவம்பீடியசு என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரேக்க நாட்டில் செதுக்கப்பட்டு அங்குள்ள ஜீயசு கோயிலில் அமைக்கப்பட்டது.[1]
இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Phidias from encyclopædiabritannica.com. Retrieved 3 September 2014
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Alaa K. Ashmawy's Statue of Zeus பரணிடப்பட்டது 2006-02-23 at the வந்தவழி இயந்திரம் at Olympia.
- Unmuseum's Statue of Zeus