உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தியங்கும் வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒத்தியங்கும் வட்டணை என்பது ஒரு வான்பொருளின் (பொதுவாக ஒரு கோள் ) வட்டணையின் சராசரி சுழற்சி காலத்திற்குச் சமமான சுழற்சிக் காலம் உள்ள துணைக்கோளின் அல்லது செயற்கைக்கோளின்(விண்கலத்தின்) வட்டணையாகும், மேலும் அந்த வான்பொருள் சுழலும் அதே திசையிலேயே துணைக்கோள் அல்லது செயற்கைக்கோளும்(விண்கலமும்) அதைச் சுற்றிவரும். [1]

எளிய பொருள்

[தொகு]

ஒரு ஒத்தியக்க வட்டணை என்பது ஒரு வான்பொருளைச் சுற்றிவரும் பொருள் (ஒரு செயற்கைக்கோள் அல்லது நிலா) தன் வட்டணையை முடிக்க, அந்த வான்பொருள் ஒருமுறை சுழல எடுக்கும் அதே நேரத்தினை எடுக்கும் வட்டணையாகும்.

இயல்புகள்

[தொகு]

ஒரு வான்பொருளின் நிலநடுக் கோட்டில் வட்டப்பாதையில் அமைந்த ஒத்தியங்கும் வட்டணையில் இயங்கும் ஒரு செயற்கைக்கோள்,தாந்த வான்பொருளின் நிலநடுக் கோட்டில் உள்ள ஒரு புள்ளிக்கு மேல் அசைவில்லாமல் நிலைநிறுத்தப்பட்டதாகத் தோன்றும். இத்தகைய நிலயில் புவியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கு, இது புவிநிலை வட்டணை எனப்படுகிறது. இருப்பினும், ஒரு ஒத்தியங்கும் வட்டணை நிலநடுக் கோட்டில் இருக்க வேண்டியதில்லை; அல்லது வட்டவடிவப்பாதையிலும் இருக்கவேண்டியதில்லை. நிலநடுக் கோடு அல்லாத ஒத்தியங்கும் வட்டணை வான்பொருள் நிலநடுக் கோட்டில் புள்ளிக்கு மேலே வடக்கு மற்றும் தெற்காக ஊசலாடுவதாகத் தோன்றும், அதேசமயம் நீள்வட்ட வட்டணையில் உள்ள ஒரு செயற்கைக்கோள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி ஊசலாடுவதாகத் தோன்றும். வட்டணையில் இருந்து பார்த்தால், இந்த இரண்டு இயக்கங்களின் கலவையான ஒப்புருவம் 8 வடிவத்தில் அமைகிறது.

பெயரிடல்

[தொகு]

வான்பொருளின் வட்டணையைப் பொறுத்து ஒத்தியங்கும் வட்டனைகளுக்குப் பல சிறப்பு சொற்கள் உள்ளன. பின்வருபவை மிகவும் பொதுவானவை. புவியைச் சுற்றி ஒத்தியங்கும் வட்டணை (நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமைவது) புவிநிலை வட்டணை என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பொதுவாக, புவி நிலநடுக்கோட்டுக்குச் சற்றே சாய்ந்திருக்கும் வட்டணை புவி ஒத்தியங்கும் வட்டணை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க் கோளைச் சுற்றி ஒத்தியங்கும் வட்டணை செவ்வாய்நிலை வட்டணை அல்லது செவ்வாய் ஒத்தியங்கும் வட்டணை எனப்படுகிறது.

வாய்பாடு

[தொகு]

ஒரு நிலையான ஒத்தியங்கும் வட்டணைக்கு:

[2]
G = ஈர்ப்பு மாறிலி
m2 = வான் பொருளின் பொருண்மை
T = வான்பொருள் சுழற்சி காலம்
= வட்டணை ஆரம்

இந்த வாய்பாட்டால், கொடுக்கப்பட்ட வான்பொருளுடன் தொடர்புடைய ஒரு பொருளின் நிலையான வட்டனையைக் கண்டறிய முடியும்.

வட்டணை வேகம் (ஒரு செயற்கைக்கோள் விண்வெளியில் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பது) செயற்கைக்கோளின் கோண வேகத்தை வட்டணை ஆரத்தால் பெருக்கிக் கணக்கிடப்படுகிறது.

எடுத்துகாட்டுகள்

[தொகு]

ஒரு வானியல எடுத்த்காட்டு புளூட்டோவின் மிகப்பெரிய நிலா சரோன் ஆகும். [3] மிகவும் பொதுவாக, புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள்கள் போன்ற தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களால் ஒத்தியங்கும் வட்டணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையான செயற்கைக்கோள்களுக்கு, அவற்றின் தாய் வான்பொருளைப் பூட்டுவதன் மூலம் மட்டுமே ஒத்தியங்கும் வட்டணையை அடைய முடியும், அது எப்போதும் செயற்கைக்கோளோடு ஒத்தியங்கும் சுழற்சியுடன் இணைந்து செல்கிறது. ஏனென்றால், சிறிய வான்பொருள் வேகமாகப் பூட்டப்படுகிறது, மேலும் ஒரு ஒத்தியங்கும் வட்டணையை அடையும் நேரத்தில், அது ஏகனவே நீண்ட காலமாக பூட்டப்பட்ட ஒத்தியயங்கும் சுழற்சியைக் கொண்டுள்ளது.

வட்டணை வான்பொருள் பொருண்மை

(கிகி)

விண்மீன் சுழற்சிக் காலம் அரை முக்கிய அச்சு (கிமீ) உயரம்
பவி ஒத்தியங்கும் வட்டணை 5.97237×10 24 0.99726968 டி 42,164 கிமீ (26,199 மை) 35,786 கிமீ (22,236 மை)
செவ்வாய் ஒத்தியங்கும் வட்டணை 6.4171×10 23 88,642 கள் 20,428 கிமீ (12,693 மை)
செரசு ஒத்தியங்கும் வட்டணை 9.3835×10 20 9.074170 ம 1,192 கிமீ (741 மை) 722 கிமீ (449 மை)
புளூட்டோ ஒத்தியங்கும் வட்டணை

மேலும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Holli, Riebeek (2009-09-04). "Catalog of Earth Satellite Orbits : Feature Articles". earthobservatory.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
  2. "Calculating the Radius of a Geostationary Orbit - Ask Will Online" (in en-GB). Ask Will Online. 2012-12-27. https://www.askwillonline.com/2012/12/calculating-radius-of-geostationary.html. 
  3. S.A. Stern (1992). "The Pluto-Charon system". Annual Review of Astronomy and Astrophysics 30: 190. doi:10.1146/annurev.aa.30.090192.001153. Bibcode: 1992ARA&A..30..185S. "Charon's orbit is (a) synchronous with Pluto's rotation and (b) highly inclined to the plane of the ecliptic.".