உள்ளடக்கத்துக்குச் செல்

2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012

← 2008 நவம்பர் 6, 2012 2016 →

அனைத்து 538 ஐக்கிய அமெரிக்க வாக்காளர் குழு
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை
 
வேட்பாளர் பராக் ஒபாமா மிட் ராம்னி
கட்சி மக்களாட்சி குடியரசு
சொந்த மாநிலம் இலினொய் மாசச்சூசெட்ஸ்
துணை வேட்பாளர் ஜோ பைடன் பால் ராயன்

தேர்வு வாக்குகள்
332 206
வென்ற மாநிலங்கள் 26+DC 24
மொத்த வாக்குகள் 65,915,795 60,933,504
விழுக்காடு 51.1% 62%

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு வரைபடம். நீலம்- ஒபாபா / பைடன் வென்ற மாநிலங்கள் / மாவட்டங்கள்.சிவப்பு - ராம்னி / ராயன் வென்றவை. ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ள வாக்காளர் குழும வாக்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய குடியரசுத் தலைவர்

பராக் ஒபாமா
மக்களாட்சி

குடியரசுத் தலைவர் -தெரிவு

பராக் ஒபாமா
மக்களாட்சி

2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012, நவம்பர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது அமெரிக்காவின் 57வது தேர்தலாகும். இத்தேர்தல் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவர்களே துணை குடியரசுத் தலைவரையும் 2012, திசம்பர் 17 அன்று தேர்ந்தெடுப்பர். தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, இரண்டாம் முறையாக மக்களாட்சி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.[1] குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ராம்னி அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரு தரப்பிற்கும் மிக இறுக்கமான நிலையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறும் என மிக முக்கியமான ஊடகங்கள் தமது கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தன.[2] நவம்பர் 7, அதிகாலை 1:00 மணியளவில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிகக் குறைந்த 270 வாக்காளர் குழுக்களை பராக் ஒபாமா பெற்றதை அடுத்து, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி தமது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

2012 குடியரசுத் தலைவர் தேர்தலுடன் ஐக்கிய அமெரிக்க செனட் தேர்தலும், பல்வேறு மாகாணத் தேர்தல்களும் நடைபெற்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Siegel, Elyse (April 4, 2011). "Barack Obama 2012 Campaign Officially Launches". Huffington Post. http://www.huffingtonpost.com/2011/04/04/barack-obama-2012-campaign_n_844221.html. பார்த்த நாள்: April 4, 2011. 
  2. For example, the Financial Post (from Reuters) [1], Forbes [2], Globe & Mail [3] பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம் all described the election as "too close to call".