உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்பு குணக எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஒரு ஊடகத்தின் வழியாக செல்லும் போது அதன் ஒரு பகுதி ஊடகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருபகுதி ஊடுருவிச் செல்கிறது. இது ஊடகத்தினையும் கதிரின் அலைநீளத்தையும் பொறுத்திருக்கிறது. ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் கதிரின் செறிவு I என்றும் அக்கதிரின் ஆரம்பச் செறிவு I0 என்றும் கொண்டால்:

[1][2][3]

μ என்பது ஏற்பு குணக எண் (Linear Absorption coefficient ) ஆகும். x என்பது ஊடகத்தின் தடிமனளவாகும். இது செறிவு குறைதல் குணக எண் (Linear Attenuation coeffficient) என்றும் அறியப்படும். x செ.மீட்டரில் அளவிடப்பட வேண்டும். μ என்பதின் அலகு /செ.மீ. அல்லது செ.மீ.−1.ஆகும்.

ஓர் எளிய எடுத்துக்காட்டு மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.2000 எக்சு கதிர் ஒளியன்கள் ஒரு சென்டி மீட்டர் கனமுடைய ஊடகம் வழி சென்று 1000 ஒளியன்கள் மட்டுமே வெளிப்படுவதாகக் கொள்வோம்.மேலே சுட்டிய சமன்பாட்டின் படி ,ஏற்புக் குணக எண்ணின் மதிப்பு 0.693/ செ.மீ என்றாகிறது

சில நேரங்களில் ஏற்புக் குணக எண்ணினை நீளத்திற்கு இவ்வளவு என்பதனைவிட, அலகு பரப்பிற்கு இவ்வளவு கிராம் என்று கொடுப்பது விரும்பப் படுகிறது. ஏற்கும் பொருளின் மொத்த நிறையினைவிட அலகுபரப்பின் நிறையினை இது குறிக்கிறது. gm/cm2. பரப்பு-நிறை (area mass) என்பது ஒரு அலகு பரப்பின் மேல் உள்ள ஒரு கிராம் நிறையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Attenuation coefficient". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Serway, Raymond; Moses, Clement; Moyer, Curt (2005). Modern Physics. California, USA: Brooks/Cole. p. 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-49339-4.
  3. "2nd Edition of the Glossary of Meteorology". American Meteorological Society. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்பு_குணக_எண்&oldid=4164758" இலிருந்து மீள்விக்கப்பட்டது