உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்
முதற் பதிப்பின் அட்டை பக்கம்
நூலாசிரியர்டான் பிரவுன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைதிகில்-துப்பறிவு புனைகதை
வெளியீட்டாளர்Pocket Books
வெளியிடப்பட்ட நாள்
மே 2000
ஊடக வகைஅச்சு வடிவில்
பக்கங்கள்480
ISBNபன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-02735-2 (US) / 9780552160896(UK)
OCLC52990309
813/.54 21
LC வகைPS3552.R685434 A82 2000
முன்னைய நூல்Digital Fortress
அடுத்த நூல்Deception Point

ஏஞ்செல்ஸ் அண்ட் டீமன்ஸ் (Angels & Demons) என்பது 2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வகையில் விற்பனையான திகில்-துப்பறிவு நாவலாகும். இதனை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் ஆவார் இதன் கதையானது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சார்ந்த கற்பனை கதாபாத்திரமான ராபர்ட் லாங்க்டன் என்ற குறியீட்டமர்வு ஆராய்ச்சியாளர் இல்லுமினாட்டி என்ற பெயரில் வழங்கும் ஒரு இரகசிய சமூகத்தை சூழ்ந்திருக்கும் மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு, அவர் எடுத்துவரும் முயற்சிகளையும், மேலும் எதிர்ப் பொருளை வைத்துக்கொண்டு வத்திக்கான் நகரத்தை அழிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அவர் பாடுபடுவதையும் சுற்றி வருவதாகும். இந்தப்புத்தகம் வரலாற்றில் காணப்படும் அறிவியல் மற்றும் மதங்களுக்கு இடையே நிலவி வரும் முரண்பாடுகளை ஆதாரமாகக்கொண்டு, குறிப்பாக இல்லுமினாட்டி சமூகத்தினர் மற்றும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே நிலவி வந்த பகைமையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இந்த நாவலின் மூலமாக ராபர்ட் லாங்க்டன் என்ற கதாபாத்திரத்தை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார், பிரவுன் 2003 ஆம் ஆண்டில் எழுதிய நாவலான, தி டா வின்சி கோட் மற்றும் 2009 ஆண்டில் எழுதிய நாவலான, தி லோஸ்ட் சிம்பல் என்ற இரு கதைகளிலும் இவரே கதாநாயகனாவார். இந்த நாவலின் பின்தொடர்ச்சியானது இரகசிய சமுதாயங்கள் தீட்டும் சதித்திட்டங்கள், ஒரே நாள் கொண்ட காலக்கெடு, கத்தோலிக்க திருச்சபை போன்ற பலவகைப்பட்ட நடையியல் மூலகங்கள் கொண்டதாகும். இந்நாவல்கள் அனைத்தும் பண்டைய வரலாறு, கட்டடக்கலை, மற்றும் குறியீட்டு முறைமை போன்ற ஆதாரங்களை மிகவும் வலிமையாகத் தழுவியிருப்பதை நாம் காணலாம். இந்த நாவலின் திரைப்படத் தழுவல் ஒன்று மே 15, 2009 ஆம் ஆண்டில் வெளியானது.

வெளியீட்டிற்கான பின்னணி

[தொகு]

இந்த புத்தகம், நிஜ வாழ்க்கையில் தட்டச்சுவரைபடங்களை உருவாக்கும் ஜான் லாங்க்டன் அவர்கள் படைத்த பல இருதலைகீழ்படைப்புகள் கொண்டதாகும்.[1] "ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்" மற்றும் "இல்லுமினாட்டி" வடிவமைப்புகளுடன், புத்தகத்தின் தலைப்பும் இருதலைகீழ்படைப்பு கொண்டதாக வடிவமைப்பு கொண்டதாகும்., அவற்றை கட்டியான அட்டை கொண்ட பதிப்புகளில் மேலட்டை வெளிப்புறத்திலும், மெல்லிய காகிதம் கொண்ட பதிப்புகளில் உள் அட்டையிலும் காணலாம். இதைத்தவிர, இந்த புத்தகத்தில் பூமி , காற்று , நெருப்பு , மற்றும் தண்ணீர் என ஆங்கிலத்தில் பொருள்படும் சொற்களும் இருதலைகீழ்படைப்பு வடிவமுறையில் வடிவமைப்பு கொண்டதாகும், அதனால் இந்த வடிவமைப்புக் கலையானது காட்சியில் வைக்கப்பட்டு இப்புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்துள்ளது.[2] இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் "இல்லுமினாட்டி வைரமும்" இந்த நான்கு மூலகங்களை வைரத்தின் வடிவில் இருதலைப்படைப்பு வடிவமைப்பு முறையை தழுவி படைத்ததாகும்.

கதைக்கரு

[தொகு]

இதன் கதையானது ஹார்வர்ட் பல்கலைக்கழக குறியீட்டமர்வு ஆராய்ச்சியாளர் ராபர்ட் லாங்க்டன் அவர்களை சுற்றி வருவதாகும், அவர் இல்லுமினாட்டி என அறியப்படும் பழம்பெரும் இரகசிய சமுதாயத்தினரை தடுத்து நிறுத்தி, அவர்கள் கைப்பற்றிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நூதனமான ஆன்ட்டி மேட்டர் என்ற கருவியை வைத்துக்கொண்டு வாட்டிகன் நகரத்தை அழிப்பதைத் தடுத்துப் பாதுகாப்பதேயாகும்.

சிஈஆர்என் என்ற நிறுவனத்தின் இயக்குனரான மாக்ஸிமிலியன் கொஹ்லர் ஒரு நாள் அவர்களுடைய நிறுவனத்தின் மிகவும் மரியாதைக்குரிய இயற்பியல் வல்லுனரான, லியோனார்டோ வெட்றா என்பவர், அவருடைய மிகவும் பாதுகாப்பான, மற்றும் தனிப்பட்ட குடியிருப்பில் கொலையுற்று இறந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மார்பில் ஒரு குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது— அது "இல்லுமினாட்டி" என்ற சொல்லின் இருதலைகீழ்படைப்பு என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார்- மேலும் அவரது கண் அதன் இடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதை காண்கிறார். அவர் காவல் துறையின் உதவியை நாடாமல், கொஹ்லர் அந்த தலைப்பை இணையதளத்தில் ஆராய்ந்து பார்க்கிறார் மேலும் இறுதியில் அவர் லாங்க்டன் என்பவருடன் தொடர்பு கொள்கிறார், அவர் இல்லுமினாட்டியினரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு வல்லுனராவார். கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு கொஹ்லர் அவருடைய உதவியை நாடுகிறார்.

கொலை நடந்த இடத்தில் லாங்க்டன் கண்ட காட்சி அவரை உறைய வைக்கிறது; அந்த குறியீடு உண்மையானதாக தெரியவருகிறது, மேலும் செவி வழிக்கதையாக கேட்டு வந்த இரகசிய சமுதாயத்தின் பரம்பரை, அழிந்து விட்டதாக கருதியது, மீண்டும் புத்துயிர் பெற்றதாகத் தோன்றியது. கொஹ்லர் வெட்றாவின் தத்து மகளான வெட்டோரியாவை கொலை நடந்த அறைக்கு வரும்படி அழைக்கிறார், மேலும் இந்த இல்லுமினாட்டி சமூகத்தினர் கால் கிராம் அளவுடைய ஆன்ட்டி மேட்டர் அடங்கிய குப்பி ஒன்றை—அது அழிக்கும் தன்மையுடைய மிகவும் ஆபத்தான பொருளாகும் மற்றும் அதன் ஆற்றல் ஒரு சிறிய அணு ஆயுதத்தைப் போன்றதாகும், அப்பொருள் பொதுவாக காணப்படும் எந்தப்பொருள் மீதும் இடிபட்டாலோ அல்லது தொட்டாலோ, உடனுக்குடன் வெடித்துச்சிதறும் தன்மை கொண்டதாகும். சிஈஆர்என் நிறுவனத்திலுள்ள மின்சாரம் அதில் பாய்ந்து கொண்டே இருக்கும் பொழுது, அதனால் ஏற்படும் காந்த மண்டலங்களின் ஆற்றல் காரணமாக மேலும் அந்த குப்பியின் உட்புறம் ஓர் உயர்ந்த வெற்றிடத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டதால், ஆன்ட்டி மேட்டரின் சொட்டானது (துளி), குப்பிக்குள்ளேயே எங்குமே இடிக்காதவண்ணம் மிதந்தபடியே வைத்திருக்கும்; ஆனால் அதன் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டால், அது தானாகவே அதனுடைய காப்புநகல் மின்கலத்தில் இருந்து மின்சாரம் பெற்று அதன் அந்தரத்தில் தொங்கும் நிலைமை பாதுகாக்கப்படும், ஆனால் இந்த மின்சாரம் 24 மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், மின்கலம் புலன் இழக்கும் அந்த நேரத்தில், இந்த ஆன்ட்டி மேட்டர் கீழே விழுந்து விடும், மேலும் அது குப்பியின் அடி பாகத்தை அடைந்து, தன்னைத்தான் வெடித்து அழித்துக்கொள்ளும். இல்லுமினாட்டி சமூகத்தினர் இந்தக் குப்பியைத் திருடி வாட்டிகன் நகரத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார்கள் மேலும் அதற்கு முன்வசம் ஒரு பாதுகாப்பு நிழற்படக்கருவி (காமெரா) பொருத்தியுள்ளார்கள். அதனுள் அமைந்துள்ள டிஜிட்டல் கடிகாரம் நொடிகளை காட்டிக்கொண்டே வருகிறது மேலும் முடிவில் வெடித்துச்சிதறும் தருணம் வரும் வரை அது நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கும்.

லாங்க்டன் மற்றும் வெட்டோரியா இருவரும் வாட்டிகன் நகரத்தை பதற்றத்துடன் அடைகிறார்கள், அங்கே அண்மையில் போப்பரசர் இறந்துவிட்டார், மேலும் பாதிரியார்களின் கூட்டம் ஒரு புதிய போப்பரசரை தெரிவுசெய்ய குழுமியுள்ளனர். கார்டினல் மோர்டாடி, தேர்வு நடப்பதற்கு இடம் வழங்கியவர், நான்கு பிரிஃபெரிட்டி அல்லது விரும்பத்தக்க மற்றும், தேர்வில் நிற்பதற்குத் தகுதியுடைய கார்டினல்மார்கள், வந்து சேராமலிருப்பது அவருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதர பாதிரியார்கள் வந்த பிறகு, லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தகுதி வாய்ந்த கார்டினல்மார்களை தேடிக்கொண்டு கிளம்புகின்றனர், அப்படி தேடும்பொழுது, ஆன்ட்டி மேட்டர் அடங்கிய குப்பியையும் கண்டுபிடிக்கலாம் என்ற நப்பாசையும் எழுகிறது. அவர்கள் இப்படி தேடிக்கொண்டு இருக்கும் பொழுது, அவர்களுக்கு கமேர்லேங்கோ கார்லோ வென்ட்ரெஸ்கா (இறந்த போப்பரசரின் நெருங்கிய உதவியாளர்) மற்றும் வாட்டிகன் நகரத்தின் ஸ்விஸ் பாதுகாவலர், அவர்களில் கம்மாண்டர் ஓலிவெட்டி, காப்டன் ரோசெர், மற்றும் லெப்டினண்ட் சார்ட்ராண்ட் போன்றோர் உதவ முன்வருகிறார்கள்.

பிரிஃபெரிட்டி கார்ட்சினல்மார்கள் மறைந்து போனதற்கு ஏதோ வகையில் இல்லுமினாட்டி சமூகத்தினரே காரணம் என்ற நம்பிக்கையில், லாங்க்டன் திரும்பவும் "பாத் ஒப் இல்லுமிநேசன்" (தீப அலங்காரப் பாதை) என்ற பாதையை பின்பற்றி, அது இல்லுமினாட்டி சமூகத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்கு ஏற்படுத்திய பழமையான மற்றும் விரிவான செய்முறை கொண்டதாகும்; உறுப்பினர்களாக சேர நினைக்கும் மக்கள் ரோம் நகரத்தில் இங்கும் அங்கும் விட்டு வைக்கப்பட்ட சிறிய தடயங்களை தொடர்ந்துசென்று இலக்கத்தை அடைய முயற்சிக்க வேண்டும். சரியான முறையில் தடயங்களை தொடர்ந்து சென்றால், அவரால் இல்லுமினாட்டி சமூகத்தினர் சந்திக்க இருக்கும் ரகசிய இடத்தை கண்டுபிடிக்க முடியும் மேலும் உறுப்பினராகவும் சேரயியலும். மதம் சார்ந்த மற்றும் மறைந்த வரலாற்றைப்பற்றிய அறிவாற்றலை வைத்துக்கொண்டு, லாங்க்டன் பாத் ஒப் இல்லுமிநேசன் (தீப அலங்காரப் பாதை) பாதையில் சென்று, பிரிஃபெரிட்டி கார்டினல்மார்கள் மறைந்து போனதற்கான காரணத்தையும் மற்றும்ஆன்ட்டி மேட்டர் குப்பியின் இருப்பிடத்தையும் தடயங்களின் அடிப்படையில் கண்டறிய முனைகிறார்.

பெர்னினிஸ் ஹப்பைகுக் மற்றும் ஏஞ்செல், மற்றும் அகோச்டினோ சிகிஸ் ப்ய்ரமிடல் வால் டோம்ப்.

இந்தப்பாதையானது லாங்க்டன் அவர்களை ரோம் நகரில் உள்ள நான்கு முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்கிறது, (வாட்டிகன் நகரம் ரோம் நகரத்தின் உள் அடங்கியது), ஒவ்வொன்றும் உயிர் வாழ்வதற்காக அத்தியாவசியமாக தேவைப்படும் நான்கு அதிமுக்கியமான மூலகங்கள் என்று இல்லுமினாட்டி சமூகத்தினரால் நம்பப்படுபவை: பூமி, காற்று, நெருப்பு, மற்றும் நீர் அல்லது தண்ணீர். ஒவ்வொரு இடத்திற்கும் வந்தபின்னால், லாங்க்டன் ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்தை சம்பந்தப்படுத்தும் வகையில் ஒரு பிரிஃபெரிட்டி கார்டினல் கொலையுண்டிருப்பதை காண்கிறார்: முதல் கார்டினலின் உடலில் பூமியின் இருதலைகீழ்படைப்பு குறிக்கப்பட்டிருப்பதை காண்கிறார், அவரது வாயில் மணல் திணித்து மூச்சுத் திணறி புதைக்கப்பட்டிருந்தார்; இரண்டாமவர் காற்றின் இருதலைகீழ்படைப்புடன் கூடிய குறியீட்டுடன் காணப்பட்டார் மேலும் அவருடைய நுரையீரல் துளைக்கப்பட்டிருந்தது; மூன்றாமவருக்கு நெருப்புச் சின்னத்தால் இருதலைகீழ்படைப்பு பொறித்துள்ளது மேலும் அவர் உடல் நெருப்பில் எரிக்கப்பெர்றார்; மற்றும் நான்காமவர் தண்ணீர் இருதலைகீழ்படைப்புடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு பெரிய நீரூற்றின் அடியில் மூழ்க வைத்திறந்தார்..

செயிண்ட் பீட்டரின் சதுக்கத்தில் தெற்கு போனேன்டே.
செயிண்ட் பீட்டரின் சதுக்கத்தில் தெற்கு போனேன்டே.

முதல் இரண்டு பிரிஃபெரிட்டி கார்டினல்களின் உடல்களை (பூமி மற்றும் காற்று) கண்டபின், லாங்க்டன் சண்டா மரியா டெல்லா வெட்டோரியா பசிலிகாவிற்கு விரைந்து செல்கிறார் மேலும் அங்கே அவர் மூன்றாவது பிரிஃபெரிட்டி கார்டினலை கடத்திச்சென்ற கள்வன் மூன்றாவது கார்டினல் மீது நெருப்பை பற்றவைக்கும் காட்சியை பார்க்கிறார். கடத்திச்சென்ற கயவன், லியோனார்டோ வெட்றாவை கொலை செய்து ஆன்ட்டி மேட்டர் குப்பியைத் திருடியதும் அவனே, ஒரு அனாமதேய கொலைகாரனாவான் மேலும் அவன் இல்லுமினாட்டி சமூகத்தினரின் தலைவரான "ஜானுஸ்" என்பவரின் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறான், ஆனால் ஜானுஸ் என்பவனின் உண்மையான அடையாளம் யாருக்கும் தெரியாது. கம்மாண்டரான ஓலிவெட்டி கொலை செய்யப்படுகிறார், மேலும் லாங்க்டன் கொலையாளியுடன் நடந்த போராட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்புகிறார் ஆனால் கொலையாளி எப்படியோ வெட்டோரியாவை கடத்திச்சென்று விடுகிறான். லாங்க்டன் எப்படியோ தப்பித்துக்கொண்டு மற்றும் இறுதி மூலகத்தை (தண்ணீர்) குறிக்கும் இருப்பிடத்தில் மீண்டும் கொலையாளியைப் பார்க்கிறார், ஆனால் அவரால் கடைசி கார்டினலைக்காப்பாற்ற இயலவில்லை.

எக்ஸ்டசி ஓப் செயின்ட் தெரேசா.

இருந்தாலும் லாங்க்டன் பாத் ஓப் இல்லுமிநேசன் (தீப அலங்காரப்பாதை) பாதையை இறுதி வரை பின்பற்றி கொலையாளியை கண்டுபிடித்து வெட்டோரியாவைக் காப்பாற்ற நினைக்கிறார். அவரது வேட்கை அவரை காஸ்டல் சாண்ட் ஏஞ்சலோவிற்கு எடுத்துச்செல்கிறது, அது வாட்டிகன் நகரத்தில் உள்ள திருத்தந்தையின் அறைக்கு நேராக எடுத்துச்செல்லும் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட ஓர் சுரங்கப்பாதையை மறைத்து நிற்பதாகும். லாங்க்டன் வெட்டோரியாவை விடுதலை செய்கிறார், மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து கொலையாளியை பல நூறு அடிகள் கீழே விழுந்து இறக்கும்படி தள்ளி விடுகின்றனர். இருவரும் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிகாவிற்கு விரைந்து திரும்பி வருகின்றனர், அங்கே அவர்கள் கொஹ்லர் தனியாக காமேர்லேங்கோவுடன் சண்டை புரிவதை பார்க்கிறார்கள். லாங்க்டன் மற்றும் வெட்டோரியா, கொஹ்லர் ஜானுசாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர், மேலும் அவர் தேவாலயத்திற்கு எதிராக செய்த சதியை நிறைவேற்ற இறுதிப்படியாக கமேர்லேங்கோவை கொலை செய்ய வந்திருப்பதாக பயப்படுகின்றனர். கமேர்லேங்கோ வலி தாங்காமல் கதறும் சத்தத்தைக்கேட்டு, அவர் மீது இல்லுமினாட்டி வைரத்தின் குறியீட்டை பொறிக்கப் பார்க்கிறார், ஸ்விஸ் பாதுகாவலர்கள் விரைந்து அறையினுள் நுழைந்தார்கள் மேலும் கொஹ்லர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். இறப்பதற்கு முன்னால், கொஹ்லர் லாங்க்டனிடம் ஒரு விடியோ டேப்பை தருகிறார் மேலும் அது அனைத்தையும் விளக்கிக்கூறும் என்று சொல்லி மறைந்துவிடுகிறார்.

நான்கு நதிகளின் நீரூற்று.

குப்பியில் காணப்படும் நேரம் குறைந்து வருவதால், ஸ்விஸ் பாதுகாவலர்கள் பசிலிகாவை காலி செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேவாலயத்தை விட்டு வெளியேறும் தருணத்தில், கமேர்லேங்கோ மெய்மறந்து போகிறார் மேலும் பசிலிகாவிற்குள் மீண்டும் நுழைகிறார், ஆண்டவன் அவரிடம் ஆன்ட்டி மேட்டர் குப்பி இருக்கும் இடத்தை சூசகமாக காண்பித்ததாக விளக்கமளிக்கிறார். லாங்க்டன் மற்றும் சிலர் தொடர்ந்துவர, பசிலிகாவின் அடியில் உள்ள தாழ்வாரத்தின் அற்றத்திற்கு செல்கிறார் மேலும் செயிண்ட் பீட்டரின் கல்லறையின் மேல் குப்பி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். லாங்க்டன் மற்றும் காமேர்லேங்கோ ஆன்ட்டி மேட்டர் குப்பியை மீட்டெடுக்கின்றனர் மேலும் ஒரு ஹெலிகாப்டருக்குள் ஐந்து நிமிடங்களே மீதம் இருக்க நுழைகின்றனர். கமேர்லேங்கோ எப்படியோ வான்குடை (பாராச்சூட்) மூலமாக கீழே குதித்து செயிண்ட் பீட்டரின் கூரையில் வந்திறங்குகிறார், அதே வேளையில் குப்பியும் ஆகாயத்தில் யாருக்கும் தீங்கிழைக்காமல் வெடித்துச்சிதறுகிறது. லாங்க்டன் என்னவானார் என்பது உடனுக்குடன் தெரியவில்லை, ஏன் என்றால் ஹெலிகாப்டரில் இன்னொரு வான்குடை பொருத்தப்பட்டிருக்க வில்லை. செயிண்ட் பீட்டரின் சதுக்கத்தில் முன்னர் நின்றுகொண்டிருந்த மக்கள் யாவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, கமேர்லேங்கோ புன்னைகைத்தபடி அவர்கள் முன்னால் வெற்றிகரமாக நின்று கொண்டிருக்கிறார். இந்த "அதிசயமான" நிகழ்வின் காரணமாக, திருத்த்ந்தைக்கான பாதிரியார்களின் தேர்வுக்கூட்டம் காதொலிக்க முறைமையை புறகணித்து காமேர்லேங்கோவை புதிய திருப்பீட தேர்வு செய்யலாமா என்று விவாதிக்கத்தொடங்குகிறார்கள். லாங்க்டன் எப்படியோ ஹெலிகோப்டரில் இருந்த ஜன்னல் திரையை ஒரு வான்குடையைப்போல் பயன்படுத்தி வெடிவிபத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார் மேலும் டைபர் தீவுக்கு அருகாமையிலுள்ள டைபர் நதியில் வந்து விழுகிறார், அந்த தீவானது அதிசயப்படும் வகையில் நோய்களை தீர்க்கவல்ல இறைவனின் அருள் பெற்ற தீவாக பெயர் பெற்றதாகும். அவருக்கு அடிப்பட்டிருந்தாலும், அது தீவிரமானதல்ல.

லாங்க்டன் செயிண்ட் பீட்டர்சுக்கு திரும்பிவருகிறார் மேலும் கொஹ்லர் கொடுத்த டேப்பை இதர கர்டினல்மார்களின் கூட்டத்துடன் பார்வையிடுகிறார். லாங்க்டன், வெட்டோரியா, மற்றும் இதர கார்டினல்மார்கள் காமேர்லேங்கோவை வழிமறித்து சிஸ்டைன் சாபெல் (சிறுகோயில்) என்ற இடத்தில் எதிர்கொள்கிறார்கள், அங்கே கடைசியில் உண்மை தெரியவருகிறது; இந்த நாவல் துவங்குவதற்கு முன்னால், திருத்தந்தை அவர்கள் லியோனார்டோ வெட்றாவை சிஈஆர்என் -னில் அவரது ஆராய்ச்சிகளைப்பற்றி அறிந்துகொள்ள சந்திப்பதாக இருந்தது. வெட்றா, ஒரு தீவிர கத்தொலிக்கராகும், அவர் மனிதன் மற்றும் இறைவன் இடையே ஒரு பாலத்தை அறிவியலால் இணைக்க இயலும் என்ற நம்பிக்கை கொண்டவராவார், இந்த நம்பிக்கையை அவர் ஆன்ட்டிமேட்டர் என்ற பொருள் மீது அவர் புரிந்துவரும் ஆராய்ச்சி மேலும் வலுப்படுத்தியது. வெட்றாவின் நம்பிக்கைகளால் காமேர்லேங்கோவிற்கு மிகவும் மன உலைச்சல் ஏற்படுகிறது, அவர் தேவாலயம் மட்டுமே, அறிவியல் அல்ல, உண்மையான கிறிஸ்துவர்களுக்கு பக்க பலமாக அமையும் என்ற தீவிர நம்பிக்கை கொண்டவராவார். வெட்றாவைப்பற்றிய விவாதங்களுக்கு இடையில், திருத்தந்தை அறிவியலுக்கு ஆதரவு அளித்ததற்கான காரணம், அறிவியல் மூலமாக அவருக்கு ஒரு குழந்தை உண்டானதே என்பதை தெரிவிக்கிறார். இதற்கான விளக்கத்திற்கு செவி கொடுக்காமல் (குழந்தை செயற்கை முறையில் பிறந்ததாக), மற்றும் இதனால் திருத்தந்தை கொடுத்த வாக்கின் படி தனது கற்பை பாதுகாக்கவில்லை என்ற நினைப்பு, அவரை பயமுறுத்தியது மேலும் இந்த நிலைமையை "சரிகட்ட" அவர் ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். அவர் திருத்தந்தைக்கு விஷம் வைத்துக்கொன்றார் மேலும், மறைமுகமாக இல்லுமினாட்டியின் தலைவர் (ஜானுஸ்) என்ற முறையில், ஒரு கொலையாளியை வேலையில் அமர்த்தினார், அவருக்கும் அவருடைய முந்தைய தலைமுறையினரைப் போலவே கத்தோலிக்க மத தேவாலயத்தினர் மீது அறப்போர் நடந்த பொழுது பகைமை நிலவியது, வெட்றாவை கொல்வதற்கும், ஆன்ட்டி மேட்டர் குப்பியை திருடுவதற்கும், மேலும் அந்த நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்மார்களை, அதுவும் திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான பாதிரியார்களின் தேர்வுக்கூட்டம் சந்திக்க இருந்த வேளையில், கடத்திச்சென்று கொல்வதற்கும் அவர் கட்டளைப்படி செய்து முடிக்க அவன் துணிந்தான். செயிண்ட் பீடேர்சில் ஆன்ட்டிமேட்டர் குப்பியை வைத்ததும் காமேர்லேங்கோவின் ஏற்பாடே மேலும் கடைசி நிமிடத்தில் தனக்கு ஒரு ஒளி கிடைத்தது போல் பாசாங்குசெய்தார், அப்படி அவர் வீரசாஹச செயல்களை புரிந்து மக்களிடம் கிறிஸ்துவமதத்தைக் காப்பாற்றிய ஒரு ஒப்பற்ற வீரர் என்ற நற்பெயரை பெறலாம் என்ற நப்பாசையில் அவர் இவ்வாறெல்லாம் செய்தார். இப்படியாக இல்லுமினாட்டி என்ற சமூகத்தினருக்கும் இந்த நாவலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது, மேலும் அவர்கள் இதில் காட்டிய "ஈடுபாடு" வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக கமேர்லேங்கோ தீட்டிய திட்டங்களின் ஒரு அம்சமாகும். முதலில் இருந்தே லாங்க்டன் சந்தேகித்தது போல, இல்லுமினாட்டி சமூகத்தினரின் செயல்பாடுகள் எப்போதோ மாண்டுபோய்விட்டது (அழிந்து விட்டது) என்பது ஊர்ஜிதமானது.

ஒரு கடைசி திருப்பு முனையாக, மேலும் தெரிய வந்தது என்ன என்றால், இறந்து போன திருத்தந்தைக்கு, செயற்கை முறையில் பிறந்த மகன், கமேர்லேங்கோ வென்ட்ரெஸ்கா என்பவரே ஆவார் என்பதாகும். பலரின் இறப்பிற்கு காரணமாகவும், குறிப்பாக தமது தந்தையாரை கொலை செய்த காரணங்களுக்காகவும் குற்ற உணர்வுகள் மேலோங்கியதால், திடீரென்று துக்கத்தில் ஆழ்ந்த வென்ட்ரெஸ்கா, தன்னை முழுக்க முழுக்க எண்ணெயால் நனைத்துக்கொண்டு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல பார்வையாளர்கள் கொண்ட கூட்டத்தினரின் முன்னிலையில், நெருப்பு வைத்து தன்னை எரித்து பலிகொடுத்து விடுகிறார். திருத்தந்தைக்கான பாதிரியார்களின் தேர்வுக்குழு கார்டினல் மோர்டாடி அவர்களை புதிய திருத்தந்தையாக தெரிவு செய்கிறது. முரண் நகை திருப்பு முனையாக, ஒரு சொல் விளையாட்டு மூலமாக, அது திருத்தந்தைக்கான தேர்தலுக்கான புதிய ஏற்பாடு என்ற முறையில் காணப்படும் சிறு பிழைகள் காரணமாக ஏற்பட்டது, திருத்தந்தையாக இரு நபர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்: அனைத்து கார்டினல்மார்களும் உரத்த குரலில் வென்ட்ரெஸ்காவின் பெயரை, அவர் தன்னைத்தானே எரித்துக்கொள்வதற்கு முன்பு அறைகூவியதால் அவர் பெயரும், மேலும் பொதுவான பதிவுமுறையில் மோர்டாடி அவர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தமது விடுதிகளுக்குத் திரும்பி செல்கின்றனர். புதிய திருத்தந்தையிடமிருந்து இருந்து வந்த ஒரு தகவல் மற்றும் பொட்டலத்தை லெப்டினண்ட் சார்ட்ராண்ட் லாங்க்டன் அவர்களுக்கு வழங்குகிறார். அந்தப் பொட்டலத்தில் "இல்லுமினாட்டி வைரத்தின்" குறியீடு உள்ளது, அதை அவர் லாங்க்டன் அவர்களுக்கு என்றென்றைக்குமே வைத்துக்கொள்ள அனுமதிக்கும் நன்றிக்கடன் ஆகும்.

நடிகர்கள்

[தொகு]
  • ராபர்ட் லாங்க்டன் : ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் குறியீட்டமர்வுத் துறையில் பேராசிரியர் மற்றும் இந்த நாவலின் முதன்மை நாயகன் ஆவார். அவர் லியோனார்டோ வெட்றாவின் கொலைக்கு காரணமாக இருந்த மர்மத்தை துலக்க உதவுவதற்காக சிஈஆர்என் நிறுவனத்திற்கு விமானம் மூலமாக பறந்து வருகிறார். அவர் ஒரு ஜோடி சிநோஸ் கால்சட்டைகள், ஆமைக்கழுத்து கொண்ட சட்டை, மற்றும் கம்பளத்தாலான மேல் சட்டை அணிந்தவராக விவரிக்கப் படுகிறார். அவர் பெயரானது ஜான் லாங்க்டன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்ததாகும்.
  • லியோனார்டோ வெட்றா : சிஈஆர்என் நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானி மற்றும் ஒரு பாதிரியார். அவர் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியால் கொலை செய்யப்பட்ட பொழுது ஆன்ட்டி மேட்டர் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அவர் வெட்டோரியா வேட்ராவின் வளர்ப்புத்தந்தையாவார்.
  • வெட்டோரியா வேட்ரா : வெட்றாவின் வளர்ப்பு மகள். அவள், அவள் தந்தையைப்போல, சிஈஆர்என் நிறுவனத்தில் பணிபுரிபவராவார். அவர் உயிரியல் மற்றும் இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். வெட்டோரியா அவருடைய தந்தையுடன் ஆன்ட்டி மேட்டர் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் என்பதை புத்தகத்தை படிப்பவர்கள் முதலிலேயே அறிந்திருப்பார்கள்.
  • கமேர்லேங்கோ கார்லோ வென்ட்ரெஸ்கா : பாப்பரசரின் நெருங்கிய பாதிரியார்களின் கூட்டத்தினராக கமேர்லேங்கோவாக இருப்பவர். (பாப்பரசரின் துணையாளர்) அவர் பாப்பரசரை கொலைசெய்தார், மற்றும் அவரே கொலையாளியின் உயிரியலுக்குரிய தந்தை என்பது பிறகு தெரியவருகிறது. கொலையாளியுடன் தொடர்பு கொள்வதற்கான அவருடைய இரகசிய குறியீட்டுப்பெயர், "ஜானுஸ்", இரு முகம் கொண்ட பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணமான ரோமானியக் கடவுளாவார், மேலும் அவருடைய நினைவாகவே ஆங்கில மாதமான ஜனவரி என்ற பெயர் கொண்டவராவார்.
  • கார்டினல் சவேரியோ மோர்டாடி : பாப்பரசரின் நெருங்கிய பாதிரியார்களின் கூட்டத்தினரில் மிகவும் பெரியவரான கார்டினல், மற்றும் தற்பொழுது காலேஜ் ஓப் கார்டினல்ஸ் என்ற கல்லூரியில் முதல்வராக பணிபுரிபவர். அவர் மறைந்த பாப்பரசரின் டெவில்ஸ் அட்வகேட் (பேய்களின் வக்கீல்) ஆவார்.
  • கம்மாண்டர் ஓலிவெட்டி : ஸ்விஸ் பாதுகாப்பாளர்களின் கம்மாண்டர் (ஆணை அதிகாரி). முதலில் அவர் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியுடன் பேசும் வரை, அவர் லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தெரிவித்த கோரிக்கைகளை நிராகரித்தார். அவரும், அவருடன் கூடிய இதர ஸ்விஸ் பாதுகாவலர்களும், வாட்டிகன் நகரில் எங்கேயோ தெரியப்படாத இடத்தில் மறைக்கப்பட்டிருந்த ஆன்ட்டி மேட்டரை வெறியுடன் தேடி வந்தனர். அவர் சண்டா மரியா டெல்லா வெட்டோரியா தேவாலயத்தில் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியால் கொல்லப்படுகிறார்.
  • கேப்டன் ரோசெர் (ரிச்டர்) : கம்மாண்டர் ஒலிவெட்டிக்குப்பிறகு வரும் இரண்டாவது கம்மாண்டர். அவருடன் மாக்ஸ் கொஹ்லர் தொடர்பு கொண்டு, அசலாக (உண்மையாக) நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில், அவருக்கு தெரிந்ததை அவரிடம் தெரிவிக்கிறார். ரோசெர் ஒரு இல்லுமினாடஸ் ஆக இருக்கலாம் என்று தவறாக புரிந்துகொண்டு, அவரை லெப்டினண்ட் சார்ட்ராண்ட் கொன்றுவிட்டார்.
  • ஹஸ்ஸாஸ்ஸின் : தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஜானுஸால் கொலை செய்வதற்காக கூலியாளாக அமர்த்தப்பட்டவர், மாறுவேடத்திலுள்ள கமேர்லேங்கோ. அவர் மத்திய கிழக்கு நாட்டுக்காரர் மேலும் பெண்களை சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவராக நாவலில் வெளிப்படுகிறார். இவன் லியோனார்டோ வெட்றா, பிரிஃபெரிட்டி கார்டினல்மார்கள் , மற்றும் கம்மாண்டர் ஒலிவெட்டியை கொலை செய்து விடுகிறான். காஸ்டல் சாண்ட் ஏஞ்சலோ என்ற இடத்தில் ஒரு பால்கனியில் இருந்து லாங்க்டன் அவரை தள்ளி விடுகிறார் மற்றும் கீழே அவர் அடுக்கி வைத்திருந்த பீரங்கி குண்டுகளின் மீது விழுந்து, முதுகெலும்புகள் உடைந்து, இறந்து போகிறார்.
  • மாக்ஸிமிலியன் கொஹ்லர் : இவர் சிஈஆர்என் நிறுவனத்தின் இயக்குனராவார். அவருக்கு பக்கவாதம் இருந்தபோதும், சிஈஆர்என் னில் அவரை கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவரது கைச்சக்கரஇருக்கை வண்டி பல விதமான மின்னணுவியல் கருவிகளைக் கொண்டது, எடுத்துக்காட்டாக கணினி, தொலைபேசி, பேஜர் கருவி, விடியோ காமெரா மற்றும் ஒரு துப்பாக்கி. அவர் லாங்க்டன் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவரது நண்பனான, லியோனார்டோ வெட்றாவை கொன்றவனை கண்டுபிடிக்க அவரது உதவியை நாடுகிறார். அவரது பக்கவாதத்திற்கு தேவாலயமே காரணம் என்று குறை கூறுகிறார், மற்றும் அவரது பெற்றோர் மிகவும் மதத்தின்மேல் பற்றுவைத்ததனால் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்க அவர்கள் முன்வரவில்லை, மேலும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஒரு விஞ்ஞானியாக ஆனார் என்று கூறுகிறார்.
  • குந்தர் க்ளிக் மற்றும் சினிதா மாக்ரி  : பிபிசி யைச் சார்ந்த செய்தித் தொகுப்பாளர் மற்றும் படப்பிடிப்பு குழுவினர். ஹஸ்ஸாஸ்ஸின் வாட்டிகன் நகரத்தில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச்சொல்ல அவர்களுடன் தொடர்பு கொண்டான். பரபரப்பான செய்திகளுக்கும் மற்றும் சதித்திட்டம் சார்ந்த தகவல்களுக்கும் க்ளிக் பெயர் பெற்றவராவார். அதே வேளையில், மாக்ரி, ஒரு படப்பிடிப்பு வல்லுநர் மற்றும் க்ளிக்கிற்கு உகந்தவர் ஆவார். அவர்களுக்கு நாவலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியைப்பற்றியும் அதீதமான அறிவாற்றல் இருக்கிறது, பாப்பரசரின் நெருக்கமான பாதிரியார்களின் கூட்டத்தினரில் இருந்து மோர்டாடியை பாப்பரசராக தெரிவு செய்வது வரையிலான அனைத்துமே அவர்களுக்கு அத்துப்படியாகும்.
  • லெப்டினண்ட் சார்ட்ராண்ட் : ஒரு இளவயது ஸ்விஸ் பாதுகாவலர். அவர், கம்மாண்டர் ஓலிவெட்டி மற்றும் காப்டன் ரோசெர், அனைவரும் இணைந்து வாட்டிகன் நகரத்தில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆன்ட்டி மேட்டர் குப்பியை மும்முரமாக தேடுகிறார்கள். கேப்டன் ரோசெரை தவறாக இல்லுமினாடஸ் என்று புரிந்துகொண்டு, அவரை சுட்டுக் கொன்றுவிடுகிறான். கதை முடியும் தருவாயில், திருத்தந்தை அவரிடம் இல்லுமினாட்டி வைரத்தை, வரையறையில்லா நன்றிக்க்கடனாக கருதி லாங்க்டன் அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
  • கார்டினல் எப்நேர் (எப்னல்) : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பிரான்க்புர்ட், ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர். அவரை மூச்சுத்திணறவைத்துச் சாகடித்தார்கள், அவர் வாய்க்குள் அழுக்கு மற்றும் மணல் திணிக்கப்பட்டது.
  • கார்டினல் லமஸ்ஸே : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பாரிஸ், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். அவரது நுரையீரலை துளைத்து சாகடிக்கப்பட்டார், அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
  • கார்டினல் கைடெரா : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பார்செலோனா, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்.அவர் உடல் உயிருடன் எரித்துச் சாம்பலாக்கப் பட்டது.
  • கார்டினல் பக்கியா : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் மிலன், இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் மற்றும் புதிய பாப்பரசராக தெரிவு செய்வதற்கு மிகவும் விரும்பப்பட்டவர். அவர் தண்ணீரில் மூழ்க வைத்து சாகடிக்கப்பட்டார்.

தவறான கணிப்புகள்

[தொகு]

இந்த நாவலின் முதல் பதிப்பு ரோம் நகரத்தைச்சுற்றி இருக்கும் பல இடங்களை தவறான கணிப்புகளுடனும் மேலும் இத்தாலிய மொழியின் பயன்பாடு தவறாகவும் இருந்தது. மொழியில் காணப்பட்ட பிழைகள் நாளடைவில் இதர பதிப்புகளில் திருத்தப்பட்டன.[3]

திட்டவட்டமான அறிமுகத்துடன் எழுதப்பட்டிருந்தாலும், இந்த நாவலில் பலதரப்பட்ட வல்லுனர்கள் பலதரப்பட்ட பொருட்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வரலாறு சார்ந்த விளக்க உரைகளை விரிவாக அளித்துள்ளார்கள் ஆனால் திறனாய்வாளர்கள் அவற்றில் பல பிழைகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஆன்ட்டி மேட்டர் பற்றிய கலந்துரையாடல்களை குறிப்பிடலாம், புத்தகத்தில் ஆன்ட்டி மேட்டர் பயன்படும்வகையில் தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி செய்யலாமென்றும், மற்றும் அதன் மூலம் என்றுமே வற்றாத அளவுக்கு மட்டற்ற ஆற்றலை (மின்சக்தியை) பெறலாமென்றும் கூறப்ப்பட்டுள்ளது. சிஈஆர்என் நிறுவனம் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் குறித்த ஒரு கேள்வி-பதில் பதிப்பில், ஆன்ட்டி மேட்டர் தயாரிப்பதற்கே மிகையான அளவில் சக்தியின் தேவை இருப்பதாகவும், அதனால் ஆன்ட்டி மேட்டர் ஒரு மின்சாரம் வழங்கும் கருவியாக இருக்க இயலாது என்றும் தெளிவு படுத்தியுள்ளனர்.[4] அதே பதிப்பில் காணப்படும் நாவலைப்பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு, இணையதளத்தை கண்டுபிடித்தது சிஈஆர்என் என்று நாவலில் குறிப்பிட்டு இருந்தாலும், அசலில் இணையதளத்தை கண்டுபிடித்தது யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஓப் டிபென்ஸ் ஆகும். மேலும் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டு பிடித்தது சிஈஆர்என் னை சார்ந்த டிம் பெர்னேர்ஸ் லீ குழுவினராகும். இருந்தாலும், புத்தகம் என்ன குறிப்பிடுகிறது என்றால், சிஈஆர்என் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டுபிடித்தது, இணையதளத்தையல்ல என்பதே.[5]

ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் டிகோடெட் , அமெரிக்கன் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்கின் விளக்கப்படம், தி ஹிஸ்டரி சேனல் மூலமாக, முதல் முதலாக மே 10, 2009 அன்று, நாவல் திரைப்படமாக எடுக்கப்படும் முன்னரே ஒளிபரப்பப்பானது. இந்த விளக்கப்படம் நாவலில் வந்துள்ள பலதரப்பட்ட இடங்களை ஆராய்கிறது, மேலும் காணப்படும் பிழைகளை சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிஈஆர்என் அலுவலர் சொன்னதாவது, கடந்த 20 வருடங்களாக, சுமாராக ஒரு கிராமின் 10 பில்லியனின் ஒரு பாகமே இதுவரை இந்த வசதியில் ஆன்ட்டி மேட்டர் தயாரிக்கப் பட்டிருப்பதாகவும் மேலும் அதனுடைய வெடிச்சத்தம் ஒரு பட்டாசின் அளவே இருக்கும், நாவலில் கூறியிருப்பதைப் போல் பயங்கரமானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதே.[6]

"இல்லுமினாட்டி" என்ற சொல் பொதுவாக பவேரியா என்ற நாட்டில் ஆடம் வேயஷுப்து என்பவரால் 1776 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை குறிக்கும்,[7] அதனால் நாவலில் வருவதுபோல் இந்த சமூகத்திற்கும் மற்றும் கலிலியோ மற்றும் பெர்னினி போன்றோருடன் இருக்கும் தொடர்பு வெறும் கட்டுக்கதையாகும், அதே போன்று "பாத் ஓப் இல்லுமிநேசன்" (தீப அலங்காரப் பாதை) என்பதும் கட்டுக்கதையே, ஆனால் அந்த பாதையில் பெர்னினியின் கலைப்படைப்பு உண்மையானதாகும், மேலும் அது போன்று வாட்டிகன் நகரத்தின் தாழ்வாரத்தில் காணப்படும் வேலைப்பாடுகளும் உண்மையானவையாகும்.(நாவலின் கூற்றுப்படி அல்லாமல், முதலில் பதிவு செய்யும் பயணிகளுக்கு இவற்றை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது[8]).

குறிப்புகள்

[தொகு]
  1. www.johnlangdon.net பரணிடப்பட்டது 2009-03-01 at the வந்தவழி இயந்திரம் ஜான் லாங்க்டன் அவர்களுடைய அதிகாரபூர்வமான வலைத்தளம், பிரிவு "ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்" (திரும்பப்பெற்றது 2007-01-30)
  2. "The Ten Most Famous Ambigrams". Ambigram Magazine (Ambigram.com).
  3. கியால்லி அண்ட் த்ரில்லெர்: அன்கேலி எ தேமோனி டி டன் பிரவுன்
  4. "CERN - Spotlight: Angels and Demons". CERN - European Organization for Nuclear Research. Archived from the original on 2008-01-29. பார்க்கப்பட்ட நாள் 2008-09-11.
  5. டான் பிரவுன். ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்  ; 2000. பாக்கெட் புக்ஸ்; பக்கங்கள் 7 & 20–21.
  6. ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் டிகோடெட் அட் History.com
  7. பாருங்கள் எ.கா. பர்ருயேல், கோட் ஓப் தி இல்லுமிநாடி , ப. 8, இல்லுமினாடிக்கு எதிரான புத்தகம் வெளியிட்டது 1798
  8. "யு.எஸ்.ஏ, டுடே என்ற நாவலில் காணப்படும் இடங்கள்". Archived from the original on 2010-05-30. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.

குறிப்புதவிகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]