எண்ணிம முறை
எண்ணிம முறை (Digital system) என்பது கருத்தளவில், 6 மரம், 8 விதை, 5 விரல் என்பது போல எண்ணிக்கையால் குறிக்கப்பெறும் முறை. இதற்கு மாறாக, நீர், பால் போன்றவற்றையோ, நீள அகலம் போன்றவற்றையோ தொடர்ச்சியாக மாறுபடும் அளவைப் பொருள்களாகக் கொள்ளலாம். இந்த எண்ணிம முறையில் பல வகைகள் உண்டு என்றாலும், அடிப்படையாக 0,1 என்று கருதப்படும் இரண்டின் அடிமானமாகிய இரும முறையே இன்று பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச் சொல் digital என்பது இலத்தீன் மொழியில் விரல் (finger) என்று பொருள்படும் digit என்பதில் இருந்து உருவானது.[1][2][3]
ஒலி, ஒளி போன்று தொடர்ச்சியாக மாறும் பண்புகளையும், தக்கவாறு பகுத்துத் தோராயமாக எண்ணிம அளவாக மாற்றலாம். இப்படி எண்ணிமப் பொருளாக மாற்றுவதற்கு துளிகையாக்கம் (quantization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தொடர்ந்து மாறுபடும் ஒரு குறிப்பலையை எவ்வாறு துளிகையாக்கம் செய்து எண்ணிமப்படுத்தலாம் என்பதை அருகில் உள்ள படங்கள் விளக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ceruzzi, Paul E (29 June 2012). Computing: A Concise History. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-51767-6.
- ↑ Martin Hilbert; Priscila López (10 February 2011). "The World's Technological Capacity to Store, Communicate, and Compute Information". Science. Vol. 332, no. 6025. pp. 60–65. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.1200970. Archived (PDF) from the original on 31 May 2011. Also "Supporting online material for The World's Technological Capacity to Store, Communicate, and Compute Information" (PDF). Science. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.1200970. Archived (PDF) from the original on 31 May 2011. Free access to the article through here: www
.martinhilbert .net /WorldInfoCapacity .html / - ↑ ""video animation on The World's Technological Capacity to Store, Communicate, and Compute Information from 1986 to 2010". Archived from the original on 21 February 2013. பார்க்கப்பட்ட நாள் 6 November 2013 – via YouTube.