உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி
உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி | |||||||
---|---|---|---|---|---|---|---|
உருசிய உள்நாட்டுப் போர் பகுதி | |||||||
கூட்டணி துருப்புக்கள் விளாடிவோசுடாக்கில் அணிவகுப்பு, 1918. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
வெள்ளை இயக்கம் பிரித்தானியப் பேரரசு Japan | உருசிய சோவியத் குடியரசு வார்ப்புரு:நாட்டுத் தகவல் தூர கிழக்கு குடியரசு இலாத்விய சோசலிச சோவியத் குடியரசு உக்ரானிய சோவியத் சோசலிச குடியரசு எசுதோனியா மங்கோலிய மக்கள் கட்சி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பல்வேறு தளபதிகள் | விளாடிமிர் லெனின் லியோன் திரொட்ஸ்கி மிக்கைல் துக்காசெவுசுக்கி பெடர் ராசுகோல்னிகோவ் ஜோசப் ஸ்டாலின் திமித்திரி சுலோபா பவல் டைபென்கோ |
||||||
பலம் | |||||||
~165,000; | அறியப்படவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
அறியப்படவில்லை |
உருசிய உள்நாட்டுப் போரில் பல நாடுகளின் படைத்துறை ஈடுபாடுகள் கூட்டணி குறுக்கீடு எனப்படுகின்றன. 14 நாடுகளைச் சேர்ந்த படைத்துறையினர் இந்த இராணுவ இயக்கத்தில் ஈடுபட்டன.[1] துவக்க கால நோக்கங்களாக செக்கோசுலோவேக்கிய லெஜியன்களுக்கு உதவி புரியவதும் உருசியத் துறைமுகங்களில் இராணுவத் தளவாடங்களுக்கு பாதுகாப்பு நல்கலும் முதலாம் உலகப் போரின் கிழக்கு முனையை மீளவும் நாட்டுவதுமாக இருந்தன. ஐரோப்பாவில் வெற்றிகண்ட முதலாம் உலகப்போரின் நேசப்படைகள் சார் மன்னருக்கு ஆதரவான, போல்செவிக்குகளுக்கு எதிரானஉருசியாவின் வெண்சேனைக்கு ஆதரவாக இருந்தன. கூட்டணியினரின் முயற்சிகள் பிளவுபட்ட நோக்கங்கள், எட்டவியலா இலக்குகள், போர்த் தளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவின்மையால் தடைபட்டன. இந்தக் காரணங்களுடன் செக்கோசுலோவேக்கிய லெஜியன்களின் தோல்வியும் கூட்டணியை வடக்கு உருசியாவிலுருந்தும் சைபீரியாவிலுருந்தும் 1920இல் விலகச் செய்தன. இருப்பினும் சப்பானியப் பேரரசு 1922 வரை சைபீரியாவின் பல பகுதிகளையும் 1925 வரை சக்காலினின் வடபகுதியையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது.[2]
செஞ்சேனை கூட்டணி ஆதரவகன்ற மன்னர்சார்பு வெள்ளை இயக்கத்தினரின் படைகளை எளிதாக வென்று தமது ஆட்சியை நிலைநிறுத்தினர்.கூட்டணியின் குறுக்கீட்டைக் காரணம் காட்டி போல்செவிக்குகள் தங்கள் எதிரிகள் மேற்கத்திய தனியுடைமைவாதிகள் என வாதிட்டனர். இறுதியில் போல்செவிக்குகளே வென்று சோவியத் ஒன்றியத்தை நிறுவினர்.