உள்ளடக்கத்துக்குச் செல்

இரேத்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏட்ரியன் காலத்தில் (கிபி 117-138) உரோமைப் பேரரசு. மேல் தன்யூப் ஆறு, இரேத்சியா மாகாணம் தன்யூபின் தெற்கே (சுவிட்சர்லாந்து/டிரோல்/செருமனி) காட்டப்பட்டுள்ளது.
இரேத்சியா மாகாணம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

இரேத்சியா அல்லது இரீத்சியா (Raetia அல்லது Rhaetia; /ˈrʃə/, /ˈrʃiə/) என்பது உரோமைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆகும். இது இரேத்திய மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும். இதன் எல்லைகளாக மேற்கே எல்வெட்டி, கிழக்கே நொரிக்கம், வடக்கே விண்டெலீசியா, தெற்கே வெனேசியா ஆகிய பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது தற்போது சுவிட்சர்லாந்தின் கிழக்கு, மத்திய பகுதிகளாலும், தெற்கு பவேரியா மற்றும் மேல் சுவாபியா, வோரார்ல்பர்க், டிரோலின் பெரும் பாகம், லோம்பார்டியின் பகுதி ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பின்னர் விண்டெலீசியா, இன்றைய தென்கிழக்கு வேர்த்தெம்பர்க், மற்றும் தெற்கு பவேரியா ஆகியன இரேத்சியாவின் பகுதிகளாயின. இரேத்சியாவின் இன்றைய வடக்கு எல்லை அகஸ்ட்டசு, திபேரியசு காலத்தில் தன்யூப் ஆறாக இருந்தது. இரேத்சியா இத்தாலியுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

மூலம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Bagnall, R., J. Drinkwater, A. Esmonde-Cleary, W. Harris, R. Knapp, S. Mitchell, S. Parker, C. Wells, J. Wilkes, R. Talbert, M. E. Downs, M. Joann McDaniel, B. Z. Lund, T. Elliott, S. Gillies. "Places: 991348 (Raetia)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 8, 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேத்சியா&oldid=2045025" இலிருந்து மீள்விக்கப்பட்டது