இந்தியப் பிரிவினையின்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
இந்தியப் பிரிவினையின்போது, பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women during the partition of India) ஒரு பரந்த சூழ்நிலையாக இருந்தது. [1] மேலும், பிரிவினையின் போது 75,000 முதல்[2] 100,000 [3] பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்த காலகட்டத்தில் பெண்கள் மீது ஆண்களால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்காரம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[5] இந்த தாக்குதல்களுக்கு பெண்களும் உடந்தையாக இருந்தனர். [5] [6] பெண்களுக்கு எதிரான முறையான வன்முறைகள் மார்ச் 1947 இல் ராவல்பிண்டி மாவட்டத்தில் தொடங்கியது. சீக்கிய பெண்கள் முஸ்லீம் கும்பல்களால் குறிவைக்கப்பட்டனர். [7] [8] [7] வன்முறைகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையில் நிகழ்த்தப்பட்டன, பதான்கள், இந்து மற்றும் சீக்கிய பெண்களை அகதிகள் ரயில்களில் இருந்து அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில் அவர்கள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் சீக்கிய, முஸ்லிம் பெண்களை அவ்வப்போது இழுத்துச் செல்வதைக் கண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.[8] ஒருங்கிணைந்த சீக்கிய ஆயுதக் குழுக்களின் செயல்களால் கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை கடத்தப்பட்ட இந்து மற்றும் சீக்கிய பெண்களின் எண்ணிக்கையை விட இருமடங்கு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[9] பின்னர் இந்தியாவும் பாக்கித்தானும் கடத்தப்பட்ட பெண்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டன. முஸ்லிம் பெண்கள் பாக்கித்தானுக்கும், இந்து, சீக்கிய பெண்கள் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டனர். [9]
பின்னணி
[தொகு]பிரிவினையின் போது பஞ்சாபி சமூகம் அனைத்து நிலைகளிலும் கொலை, இடப்பெயர்ச்சி, தாக்குதலால் பாதிக்கப்பட்டது. போட்டி சமூகங்கள் பெண்களை அவமானப்படுத்துவதை இலக்காகக் கொண்டது. மேலும், பெண்களுக்கு எதிரான செயல்களில் கற்பழிப்பு, கடத்தல், கட்டாய மதமாற்றம் ஆகியவையும் அடங்கும். ஜம்மு காஷ்மீர் இராச்சியம் இராஜபுதனம் போன்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன.[8]
வன்முறை
[தொகு]முந்தைய கலவரங்களுக்கு மாறாக, கொல்கத்தாவில் நடந்த நேரடி கலவரத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.[10] நவகாளி வன்முறையின் போது பல இந்து பெண்கள் கடத்தப்பட்டனர்.[11] 1946இல் பீகாரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது பெண்களுக்கு எதிரான வன்முறை ஏற்பட்டது. பாட்னா மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டனர்.[12] பீகாரில் முஸ்லிம் பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[13] நவம்பர் 1946இல், கர்முக்தேஷ்வர் நகரத்தில் முஸ்லிம் பெண்கள் இந்து கும்பல்களால் ஆடைகளை களையப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டும் வன்கலவியிலும் உட்படுத்தப்பட்டனர்.[14] [15]
கடத்தல்களின் மதிப்பீடுகள்
[தொகு]கடத்தப்பட்ட பெண்களின் சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. மேலும், மதிப்பீடுகளும் வேறுபடுகின்றன. லியோனார்ட் மோஸ்லி மொத்தம் 100,000 பெண்கள் எல்லா பக்கங்களிலும் கடத்தப்பட்டதாக எழுதினார். பாக்கித்தானில் 33,000 இந்து, சீக்கிய பெண்கள் கடத்தப்படிருப்பதாக இந்திய அரசு மதிப்பிட்டது. இந்தியாவில் 50,000 முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டதாக பாக்கித்தான் அரசு மதிப்பிட்டது.[8] பிரிவினை கலவரத்தின் போது மொத்தமாக 40,000-45,000 பெண்கள் கடத்தப்பட்டதாக ஆண்ட்ரூ மேஜர் மதிப்பிடுகிறார். இந்து, சீக்கிய பெண்களை விட சுமார் இரண்டு மடங்கு முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டனர்.[8] 60,000 முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டதாக மஸ்ரூர் மதிப்பிடுகிறார். பேகம் தசாடூக் உசைன் 90,000 முஸ்லீம் பெண்கள் கடத்தப்பட்டதாக மதிப்பிட்டுள்ளார்.[16]
மீட்பு
[தொகு]செப்டம்பர் 1947 இல் இந்தியப் பிரதமர் நேருவும் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலி கான் ஆகிய இருவரும் கட்டாயத் திருமணங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை திசம்பர் மாதத்தில் நடந்த மேலாதிக்க மாநாட்டில் ஒப்புக்கொண்டனர்.[8]
பல பெண்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களால் வெட்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்ற பயத்தில் மீட்கபடுவதை மறுத்தனர். அதே நேரத்தில் சில பெண்கள் தங்கள் புதிய 'குடும்பங்களுக்கு' தங்களை சரிசெய்து கொண்டனர். எனவே திரும்பி வர மறுத்தனர். 1954 வாக்கில் இரு அரசுகளும் பெண்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பக்கூடாது என்று ஒப்புக்கொண்டன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Žarkov, Dubravka (2007). The Body of War: Media, Ethnicity, and Gender in the Break-Up of Yugoslavia. Duke University Press. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0822339663.
- ↑ Aftab, Tahera. Inscribing South Asian Muslim Women: An Annotated Bibliography & Research Guide. Brill. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004158498.
- ↑ Ian Talbot. The Partition of India. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Butalia, Urvashi. Writings on Human Rights, Law and Society in India: A Combat Law Anthology. Human Rights Law Network. p. 598. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89479-78-4.
- ↑ 5.0 5.1 Kabir, Ananya Jahanara. Feminism, Literature and Rape Narratives: Violence and Violation. Routledge. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415806084.
- ↑ Chowdhry, Geeta (2000). Women, States, and Nationalism: At Home in the Nation?. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415221726.
- ↑ 7.0 7.1 Shani, Giorgio. Sikh Nationalism and Identity in a Global Age. Routledge. p. 89.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Major, Abduction of women during the partition of the Punjab 1995.
- ↑ 9.0 9.1 Barbara D. Metcalf; Thomas R. Metcalf (24 September 2012). A Concise History of Modern India. p 226, Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-53705-6.
- ↑ Ian Talbot; Gurharpal Singh (23 July 2009). The Partition of India. Cambridge University Press. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Ian Talbot; Gurharpal Singh (23 July 2009). The Partition of India. Cambridge University Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Ian Talbot; Gurharpal Singh (23 July 2009). The Partition of India. Cambridge University Press. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Ian Talbot; Gurharpal Singh (23 July 2009). The Partition of India. Cambridge University Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Gyanendra Pandey (22 November 2001). Remembering Partition: Violence, Nationalism and History in India. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-00250-9.
- ↑ Ian Talbot; Gurharpal Singh (23 July 2009). The Partition of India. Cambridge University Press. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85661-4.
- ↑ Kiran, Violence against Muslim Women 2017.
நூலியல்
[தொகு]- Major, Andrew (1995), "Abduction of women during the partition of the Punjab", South Asia: Journal of South Asian Studies, 18 (1), எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00856409508723244
- Kiran, Naumana (2017), "Punjab Migration 1947: Violence against Muslim Women and the Settlement", South Asian Studies, 32 (1)
- Ravinder Kaur (2014). "Bodies of Partition: Of Widows, Residue and Other Historical waste". Penn University Press.
மேலும் படிக்க
[தொகு]- Talib, Gurbachan Singh; Shiromani Gurdwara Parbandhak Committee (1950). Muslim League Attack on Sikhs and Hindus in the Punjab 1947. Amritsar: Shiromani Gurdwara Parbankhak Committee.
வெளி இணைப்புகள்
[தொகு]- Whitehead, Andrew Women victims of partition -- Brutalised and humiliated