அஸ்பரஜின்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அஸ்பரஜின்
| |
வேறு பெயர்கள்
2-அமினோ-3-கார்பமோயில்புரோபநோயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
70-47-3 | |
ChEMBL | ChEMBL58832 |
ChemSpider | 6031 |
EC number | 200-735-9 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C00152 |
பப்கெம் | 236 |
| |
UNII | 7NG0A2TUHQ |
பண்புகள் | |
C4H8N2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 132.12 g·mol−1 |
காடித்தன்மை எண் (pKa) | 2.02 (கார்பாக்சில்), 8.8 (அமினோ)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அஸ்பரஜின் (Asparagine) (அ) அஸ்பரமைடு [குறுக்கம்: Asn (அ) N; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B][2] புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: 2HN-CO-CH2-CH(NH2)-COOH (அ) C4H8N2O3. இது ஒரு அத்தியாவசியமற்ற ஆல்ஃபா அமினோ அமிலமாகும். அஸ்பரஜின் விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: AAU மற்றும் AAC. கார்பாக்சமைடு வினை தொகுதியை பக்கத்தொடராகக் கொண்டுள்ளது. அஸ்பரஜின், அஸ்பார்டிக் அமிலத்தின் அமைடு ஆகும். அமைடு தொகுதியானது மின்னூட்டம் இல்லாதது. அஸ்பரஜின் எளிதில் நீர்ப்பகுப்பு வினைக்கு உட்பட்டு அஸ்பார்டிக் அமிலமாக மாறும். இந்த வினையானது, முதுமைப்படுதலுக்கான பல காரணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.