உள்ளடக்கத்துக்குச் செல்

அவானா நோய்த்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவானா நோய்த்தொகை (Havana syndrome) ("anomalous health incidents"[1][2]) என்பது கடல் கடந்த அமைவிடங்களில் பணியமர்த்தப்பட்ட ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரச தந்திர, நுண்ணறிவுப் பிரிவு, இராணுவ அலுவலர்களால் முதன்மையாக தெரிவிக்கப்பட்டுள்ள அள்ளது புகாரளிக்கப்பட்டுள்ள ஒரு சர்ச்சைக்குரிய மருத்துவ நிலையாகும். இந்த மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறும் பெரும்பாலானோரிடம் தொடர்ந்து உணரப்படும் உள்ளூர் உரத்த ஒலி அல்லது இரைச்சல், சமநிலையில் சிக்கல், அறிவாற்றல் பிரச்சனைகள், உறக்கமின்மை, தலைவலி போன்ற அறிகுறிகள் மாதக்கணக்கில் நிலைத்திருப்பதாக புகாரளித்துள்ளனர். இவ்வாறானவற்றில் முதலாவதான புகார் அவானாவின் ஐக்கிய அமெரிக்க மற்றும் கனடாவின் தூதரகப் பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்டது. இதற்கு முந்தைய நிகழ்வுகள் செருமனியின் பிராங்ஃபர்ட்டில் நிகழ்ந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.[3] 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை சீனா, இந்தியா,[4] ஐரோப்பா, ஹனோய் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி உள்ளிட்ட பல இடங்களில் வாழும் இராணுவ, உளவுப் பிரிவு அலுவலர்களும் அவர்களின் குடும்பங்களும் கடல் கடந்த அமைவிடங்களில் வாழும் போதும் இவ்வாறான நோய்க்குறிகளைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய்க்குறியின் காரணமானது அறியப்படாமலும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. 2019 மற்றும் 2020 களில் சில ஐக்கிய அமெரிக்க அரசப் பிரதிநிதிகள் இந்நிகழ்வுகளுக்குக் காரணமாக அடையாளம் தெரியாத வெளிநாட்டு நடிகர்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறினர், வேறு சில ஐக்கிய அமெரிக்க அலுவலர்களோ மீயொலி மற்றும் நுண்ணலை ஆயுதங்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்படாத மற்றும் அறிந்திராத பலவித தொழில்நுட்பங்களை இவற்றிற்குக் காரணமாகக் குறிப்பிட்டனர். ஐக்கிய அமெரிக்காவின் நுண்ணறிவு புலனாய்வுச் சேவைப் பிரிவினால் இதற்கான காரணம் மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து எவ்விதத் தீர்மானமான முடிவுகளையும் எடுக்க முடியவில்லை; இருந்தபோதிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசு அலுவலர்கள் ஊடகங்களுடனான பேட்டியின் போது உருசிய இராணுவ புலனறிவுப் பிரிவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தங்கள் ஐயப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anomalous Health Incidents and the Health Incident Response Task Force" (in அமெரிக்க ஆங்கிலம்). United States Department of State. November 5, 2022. Archived from the original on December 17, 2022. பார்க்கப்பட்ட நாள் December 11, 2022.
  2. "FY2022 NDAA: Care for Anomalous Health Incident Victims" (in அமெரிக்க ஆங்கிலம்). Congressional Research Service. February 7, 2022. Archived from the original on December 12, 2022. பார்க்கப்பட்ட நாள் December 12, 2022.
  3. Dobrokhotov, Roman; Grozev, Christo; Weiss, Michael (31 March 2024). "Unraveling Havana Syndrome: New evidence links the GRU's assassination Unit 29155 to mysterious attacks on U.S. officials and their families". The Insider (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-01.
  4. "Explained: CIA officer on India trip reports Havana Syndrome; what is known about its symptoms and causes so far". September 24, 2021. Archived from the original on July 11, 2022. பார்க்கப்பட்ட நாள் February 21, 2022.
  5. Greg Myre, CIA Recalls Vienna Station Chief In Move Related to Handling of 'Havana Syndrome' பரணிடப்பட்டது நவம்பர் 20, 2021 at the வந்தவழி இயந்திரம், NPR (September 24, 2021).
  6. Seligman, Lara; Desiderio, Andrew (May 10, 2021). "Russian spy unit suspected of directed-energy attacks on U.S. personnel". Politico இம் மூலத்தில் இருந்து May 11, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210511075124/https://www.politico.com/news/2021/05/10/russia-gru-directed-energy-486640. 
  7. Adam Entous (May 31, 2021). "Are U.S. Officials Under Silent Attack?". The New Yorker. Archived from the original on June 1, 2021. பார்க்கப்பட்ட நாள் June 4, 2021. Top officials in both the Trump and the Biden Administrations privately suspect that Russia is responsible for the Havana Syndrome. Their working hypothesis is that agents of the G.R.U., the Russian military's intelligence service, have been aiming microwave-radiation devices at U.S. officials to collect intelligence from their computers and cell phones, and that these devices can cause serious harm to the people they target.