அமோனியம் பாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் பாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
மூவமோனியம் பாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10361-65-6 | |
ChemSpider | 140090 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
H12N3O4P | |
வாய்ப்பாட்டு எடை | 149.09 g·mol−1 |
தோற்றம் | வெண்மை, நான்முகப்படிகங்கள் |
58.0 கி/100 மி.லி (25 °செ) | |
தீங்குகள் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1671.9 கியூ/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | முச்சோடியம் பாசுபேட்டு முப்பொட்டாசியம் பாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் பாசுபேட்டு (Ammonium phosphate) என்பது (NH4)3PO4, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் மற்றும் பாசுபேட் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு மிகக் குறைவான நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. நிலைப்புத்தன்மை இல்லாத காரணத்தால் அதிக வணிக முக்கியத்துவம் ஏதுமின்றி ஆராய்ச்சிக்காக மட்டுமே இது பயன்படுகிறது. இச்சேர்மத்துடன் ((NH4)3PO4) கூட்டாக இதனுடன் தொடர்புடையதும் நிலைப்புத் தன்மை இல்லாததுமாய் (NH4)3PO4.(NH4)2HPO4 என்ற இரட்டை உப்பும் அறியப்படுகிறது. பொதுவாக இவை சிதைவடையும் போது படிப்படியாக அமோனியா வாயுவை வெளிவிடுகின்றன.:[2]
- (NH4)3PO4 → H(NH4)2PO4 + NH3
மூவமோனியம் பாசுபேட்டு உப்புகளின் பொதுப்பண்புகளுக்கு மாறாக, ஈரமோனியம் பாசுபேட்டு (H(NH4)2PO4) என்ற உப்பு மிகவும் பயனுள்ள ஒரு உரமாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–42, 5–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Klaus Schrödter, Gerhard Bettermann, Thomas Staffel, Friedrich Wahl, Thomas Klein, Thomas Hofmann "Phosphoric Acid and Phosphates" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_465.pub3