அசுபண்டு மலை
அசுபண்டு மலை (Husband Hill) செவ்வாய் கிரகத்தின் குசெவ் பள்ளப் பகுதியில் உள்ள கொலம்பியா மலைகளில் ஒன்றாகும். நாசாவின் இசுபிரிட் தரையுளவி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இடத்திற்கு அருகில் கொலம்பியா மலைகள் உள்ளன. வளிமண்டல மறுநுழைவில் சிதைந்தபோன விண்வெளி விண்கலம் கொலம்பியாவின் தளபதியான ரிக் அசுபண்டின் நினைவாக மலைக்கு இப்பெயரிடப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் இசுபிரிட் தரையுளவி அது தரையிறங்கிய இடத்தை ஆராய்ச்சி செய்த செயலின் ஒரு பகுதியாக மெதுவாக அசுபண்டு மலையின் உச்சிக்கு ஏறியது. 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அசுபண்டு மலை உச்சியை அடைந்த தரையுளவி [1] 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 அன்று மீண்டும் தரை தளத்தை நோக்கி இறங்கத் தொடங்கியது. இறங்குவதற்கு முன் அங்கிருந்த ஏறக்குறைய இரண்டு மாதங்களில் மலை உச்சியிலிருந்த பீடபூமியின் வெளிப்புறங்களையும் அதன் தோற்றங்களையும் ஆராய்ந்தது. ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சாதாரண பாசுபரசு உள்ளடக்கத்தை விட அதிகமான பாசுபரசு உள்ளடக்கம் நிரம்பிய பாறைகளைக் கொண்ட பகுதிக்கு கும்பர்லேண்டு முகடு என்றும் தெற்குப் பகுதியில் இருந்த இருண்ட எதிரொளிர் பகுதிக்கு எல் தொராடோ என்றும் பெயரிடப்பட்டன.
அசுபண்ட்டு மலை அதைச் சுற்றியுள்ள சமவெளிகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 351 அடி (107 மீ) உயர்ந்து காணப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rover Update: 2005: All". mars.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ http://www.nasa.gov/vision/universe/solarsystem/mer_feature_20060302.html
புற இணைப்புகள்
[தொகு]- Official Mars Rovers site
- The summit of Husband Hill (panoramic image)