இருகூர்
இருகூர் | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°01′N 77°04′E / 11.02°N 77.07°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
வட்டம் | சூலூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
25,691 (2011[update]) • 2,205/km2 (5,711/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi) • 343 மீட்டர்கள் (1,125 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/irugur |
இருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரின் கூட்டு புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஓர் தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
கோயம்புத்தூர் மாநகராட்சியை ஒட்டிய இப்போரூராட்சியில் இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமைவிடம்
[தொகு]இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருகூர் இரயில் சந்திப்பு நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 7,459 வீடுகளும், 25,691 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°01′N 77°04′E / 11.02°N 77.07°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343 மீட்டர் (1125 அடி) உயரத்தில் இருக்கின்றது.
போக்குவரத்து
[தொகு]இவ்வூரில் தொடருந்து நிலையம் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Irugur Town Panchayat Population Census 2011
- ↑ "Irugur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)