உள்ளடக்கத்துக்குச் செல்

பஸ்லுர் ரகுமான் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:10, 7 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சுயசரிதை: clean up, replaced: பிரிட்டிஷ் → பிரித்தானிய)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாஸ்லுர் ஏ. ஆர். ரகுமான் மாலிக் ( Fazlur Rahman Malik (உருது: வார்ப்புரு:URDU‎) ) (செப்டம்பர் 21, 1919 - ஜூலை 26, 1988), பொதுவாக பஸ்லூர் ரகுமான் என்று அழைக்கப்படும் இவர் இன்றைய பாகிஸ்தானின் நவீனத்துவ அறிஞரும் இஸ்லாத்தின் தத்துவஞானியும் ஆவார். இஸ்லாத்தின் ஒரு முக்கிய தாராளவாத சீர்திருத்தவாதியாக இருந்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவர் கல்வி சீர்திருத்தம் மற்றும் சுயாதீன பகுத்தறிவின் ( இஜ்திஹாத் ) மறுமலர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.[1] இவரது படைப்புகள் பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளினை மையமாகக் கொண்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் கனடாவில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்ட பின்னர் இவர் 1963 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் மத்திய இசுலாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரின் பல படைப்புகள் மற்ற இசுலாமிய சீர்திருத்தவாதிகளால் பரவலாக பாராட்டப் பட்டிருந்தாலும் பழமைவாத அறிஞர்களால் வெளிப்படையாக இவரின் படைப்புகள் தாராளமயக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டன.[1] இது அவரின் அரசியல் எதிரியான அயூப் கானின் ஆதரவாளர்களால் இவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு வழிவகுத்தது. இவர் 1968 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்குச் சென்றார், அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார் .

சுயசரிதை

[தொகு]

ரகுமான் பிரித்தானிய இந்தியாவின் (தற்போது இந்தப் பகுதி பாகிஸ்தானில் உள்ளது. ) வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் (தற்போது இந்தப் பகுதி கைபர் பக்துன்க்வா ) ஹசாரா மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை, மவுலானா ஷிஹாப் அல்-தின் தேவபந்துவில் கல்வி பயின்றார்.இவரின் தந்தை தனது 10 ஆம் வயதில் முழு குரானையும் மனப்பாடம் செய்யும் திறன் கொண்டவராக இருந்தார்.[2]

ரகுமான் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியைப் பயின்றார், மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இப்னு சினா குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். பின்னர் அங்கு கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார். முதலில் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பாரசீகம் மற்றும் இசுலாமிய தத்துவங்களைக் கற்பித்தார், பின்னர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் 1961 ஆம் ஆண்டு வரை இசுலாமியம் தொடர்பான கல்வியினை கற்பித்தார்.

அதே ஆண்டில் கராச்சியில் உள்ள மத்திய இசுலாமிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பினை வகிக்குமாரு ஜனாதிபதி அயூப் கானிடம் இருந்து அழைப்பு வந்ததன் பேரில் இவர் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் செப்டம்பர் 1968 இல் பதவியை ராஜினாமா செய்து அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்ற பிறகு அங்கி கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். மேலும் யு.சி.எல்.ஏ.யில் கவுரவ பேராசிரியராக ஒரு வருடம் கற்பித்தார். அவர் 1969 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினார். ரகுமான் இசுலாமிய அரசியலின் சீர்திருத்தவாதியாகவும், வெளியுறவுத்துறையின் ஆலோசகராகவும் இருந்தார். ரகுமான் இல்லினாய்ஸின் சிகாகோவில் ஜூலை 26, 1988 அன்று சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இறந்தார். ரகுமான் இறந்ததிற்குப் பிறகு அவரது எழுத்துக்கள் இஸ்லாம் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக உள்ளன. அவரது நினைவாக, சிகாகோ பல்கலைக் கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான மையத்திற்கு இவரின் பெயர் வைக்கப்பட்டது..

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Sonn, Tamara. (1995). "Rahman, Fazlur". In John L. Esposito. The Oxford Encyclopedia of the Modern Islamic World. Oxford: Oxford University Press.
  2. Emi Irfa, "The concept of battle againts non Muslim in the Holy Qur’an (application of Fazlur Rahman’s double movement method)" (thesis), 2015, p. 22