உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்துறைப்பூண்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
116.15.238.72 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 16:53, 21 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திருத்துறைப்பூண்டி வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருத்துறைப்பூண்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 99 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் மற்றும் திருத்துறைப்பூண்டி வண்மீகநாதசுவாமி கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 214,995 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 105,333 ஆண்களும், 109,662 பெண்களும் உள்ளனர். 57,394 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.09% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20842 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 986 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 82,800 மற்றும் 881 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.97% , இசுலாமியர்கள் 8.89%, கிறித்தவர்கள் 1.91% மற்றும் பிறர் 0.06%ஆகவுள்ளனர்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]