உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:01, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
பிரசந்தா
Prachanda
प्रचण्ड
நேபாளப் பிரதமர்
பதவியில்
18 ஆகஸ்ட் 2008 – 25 மே 2009
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்னவர்மாதவ் குமார் நேபாள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1954 (1954-12-11) (அகவை 69)
காஸ்கி, நேபாளம்
அரசியல் கட்சிநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
வாழிடம்(s)காட்மாண்டூ, நேபாளம்
இணையத்தளம்http://www.ppmo.gov.np/

பிரசந்தா (Prachanda, நேபாள மொழி: प्रचण्ड, pɾəʦəɳɖə; பிறப்பு புஷ்ப கமல் தஹால் டிசம்பர் 11, 1954) நேபாளத்தின் பிரதமர் ஆவார். இவார் ஆகஸ்ட் 18, 2008 இல் பிரதமராகப் பதவியேற்றார். பொதுவுடமைவாதியும், புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுக்கள் பெப்ரவரி 13, 1996 ஆம் ஆண்டில் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்[1].

நேபாள சட்டசபை ஆகஸ்ட் 15, 2008 ஆம் ஆண்டு பிரசந்தாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது[2].

எட்டு துணை தளபதிகளை நீக்க மாவோயிஸ்ட் அரசு எடுத்த முடிவை ராணுவ தளபதி ரூக்மங்கத் கத்வால் மதிக்காமல் அவர்களை பணி நீடிப்பு செய்தார் எனவும் அதனால் ஏற்பட்ட மோதலில் ராணுவ தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். அதிபர் ராம் பரன் யாதவ் ரூக்மங்கத் கத்வாலை பதவியில் தொடருமாறு கூறியதை தொடர்ந்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசந்தா&oldid=3221043" இலிருந்து மீள்விக்கப்பட்டது