உள்ளடக்கத்துக்குச் செல்

பாலை (திணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்.

பாலை நிலத்தின் பொழுதுகள்

[தொகு]

இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

பாலை நிலத்தின் கருப்பொருட்கள்

[தொகு]
  • தெய்வம்: கொற்றவை
  • மக்கள்: எயினர் (வேட்டுவர்), விடலை, காளை, மறவர், மறத்தியர்
  • பறவைகள்: பருந்து, கழுகு, புறா
  • மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
  • மலர்கள்: மராம்பு
  • பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
  • பறை : ஆறலை, சூறைகோள்
  • தொழில்: போர்தொழில் செய்தல் வேட்டையாடுதல்
  • உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
  • நீர்: கிணறு
  • விலங்கு: வலியிலந்த புலி, செந்நாய்
  • யாழ்: பாலையாழ்
  • ஊர்: குறும்பு

பாலை நிலத்தின் உரிப்பொருட்கள்

[தொகு]
  • அக ஒழுக்கம் : பிரிதல்
  • புற ஒழுக்கம் : வாகை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஐந்திணை".
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலை_(திணை)&oldid=4106418" இலிருந்து மீள்விக்கப்பட்டது