உள்ளடக்கத்துக்குச் செல்

பெதிரோ ஜி. பெரீரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:
{{Reflist}}
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
==புற இணைப்புகள் ==
*[http://www.pedroferreira.co.uk/ Ferreira's webpage]
*{{IMDb name|4092406}}
*[https://www.newscientist.com/special/instant-expert-general-relativity New Scientist Instant Expert series: General relativity]
*[http://pirsa.org/index.php?p=speaker&name=Pedro_Ferreira Lecture on testing gravity] at the [[Perimeter Institute]]
*[https://inspirehep.net/author/profile/P.G.Ferreira.1 Scientific publications of Pedro G. Ferreira] on [[INSPIRE-HEP]]



[[பகுப்பு:கோட்பாட்டு இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:கோட்பாட்டு இயற்பியலாளர்கள்]]

02:29, 18 மே 2024 இல் நிலவும் திருத்தம்

பெதிரோ கில் பெரீரா
Pedro Gil Ferreira
பிறப்புமார்ச்சு 18, 1968 (1968-03-18) (அகவை 56)
இலிசுபன், போர்ச்சுகல்
குடியுரிமைபிரித்தானியர்/போர்த்துகீசியர்
தேசியம் British Portuguese
துறைஅண்டவியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பலகலைக்கழகம்
செர்ன்
பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலிசுபன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
ஆய்வு நெறியாளர் ஆந்திரியாசு பிரெக்ட்டு
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஜோ தங்கிளே[1]
அறியப்படுவது நிறைநிலை
திருத்திய ஈர்ப்பு

பெதிரோ கில் பெரீரா (Pedro Gil Ferreira) (பிறப்பு: 18 மார்ச் 1968) ஒரு போர்த்துகீசிய வானியற்பியலாளரும் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.[2][3] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் பேராசிரியராகவும் , வொல்ப்சன் கல்லூரியின் உறுப்பினராகவும் இருந்தார்.[4]

இளமையும் கல்வியும்

பெரீரா போர்ச்சுகல் இலிசுபனில் பிறந்தார். இவர் இலிசுபன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றார் , அங்கு அவர் 1986 முதல் 1991 வரை பொறியியல் படித்தார். அப்போது அவர் பொது சார்பியலைக் கற்றுக்கொண்டார். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் கோட்பாட்டு இயற்பியலில் ஆந்தி ஆல்பிரெக்ட்டு மேற்பார்வையில்.முனைவர் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சியும் தொழிலும்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் ஆராய்ச்சியாளராகவும் விரிவுரையாளராகவும் சேர இங்கிலாந்துக்குத் திரும்புவதற்கு முன்பு பெர்க்லி, செர்னில் முதுமுனைவர் பதவிகளில் பணியாற்றினார்.[5] 2008 ஆம் ஆண்டில் அங்கு வானியற்பியல் பேராசிரியராக ஆனார். 2010 முதல் ஆக்சுபோர்டு மார்ட்டின் பள்ளியில் கணக்கீட்டு அண்டவியல் திட்டத்தின் இயக்குநராக இருந்து வருகிறார் , மேலும் ' வதிவிடத்தில் வானியற்பியல் கலைஞர் ' திட்டத்தையும் நடத்தி வருகிறார். பெரீரா ஆப்பிரிக்கக் கணித அறிவியல் நிறுவனத்தில் தவறாமல் விரிவுரைகள் செய்கிறார் , மேலும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவியல் விவரிப்பாளராக அடிக்கடி தோன்றியுள்ளார்.

பெரீராவின் முதன்மை ஆர்வங்கள் பொது சார்பியல், கோட்பாட்டு அண்டவியல் ஆகியவற்றில் உள்ளன. இணைநிலை மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழ்களில் 100 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை எழுதியுள்ளார்.[6] 1997 ஆம் ஆண்டில் மைக்கேல் ஜாய்சுடன் இணைந்து இருண்ட ஆற்றலின் சாத்தியமான விளக்கமாக நிறைநிலை அளவன் புலப் படிமங்களை முதன்முதலில் முன்மொழிந்தவர்களில் ஒருவராக இருந்தார். அண்ட நுண்ணலை சிற்றுலைவுகளின் ஒலி உச்சங்களை அளவிடும் மாக்ஸிமா, பூமெராங் வளிமக்கூண்டுவழி பரவும் அண்ட நுண்ணலை சிற்றுலைவுகளின் செய்முறைகளில் பெரீரா உறுப்பினராகவும் இருந்தார். யூக்ளிடு விண்கலம், சதுர கிலோமீட்டர் கதிரலைத் தொலைநோக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி பொது சார்பியலை நிறுவுவதற்கான பல திட்டங்களில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

ஊடகங்கள்

பெரீரா நேச்சர், சயின்சு, நியூ சயின்டிஸ்ட் டு உள்ளிட்ட அறிவியல் இதழ்களுக்கு வழக்கமான பங்களிப்பாளராக உள்ளார் , மேலும் அண்டவியல், பொது சார்பியல் வரலாறு குறித்த இரண்டு புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று, முழுச்செம் கோட்பாடு. இது 2014 ஆம் ஆண்டு அறிவியல் புத்தகங்களுக்கான அரசு கழக வின்ட்டன் பரிசுக்கு பட்டியலிடப்பட்டது. வானியல், இயற்பியல், அண்டவியல் செய்திகளைப் பற்றி விவாதிக்க தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தவறாமல் தோன்றுகிறார் , மேலும் பிபிசி டிஸ்கவரி சேனல் மற்றும் பிறவற்றிற்கான பல அறிவியல், கணித ஆவணப்படங்களுக்குப் பங்களித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் அவர் திறந்த வானியர்பியல் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.[7]

புத்தகங்கள்

  • Ferreira, Pedro G. (2006). The State of the Universe - A Primer in Modern Cosmology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0297847403.[8]
  • Ferreira, Pedro G. (2014). The Perfect Theory: A Century of Geniuses and the Battle over General Relativity. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1408703106.[9][4]

தொலைக்காட்சியும் காணொலியும்

  • Stephen Hawking: Master of the Universe (Channel 4) 2008
  • The One Show (BBC) 2009
  • Naked Science: Hawking’s Universe (National Geographic) 2009
  • Horizon: Is Everything We Know About the Universe Wrong? (BBC) 2010
  • Beautiful Equations (BBC) 2010
  • The Beauty of Diagrams (BBC) 2010

மேற்கோள்கள்

  1. Dunkley, Joanna (2005). Modern methods for cosmological parameter estimation : beyond the adiabatic paradigm. bodleian.ox.ac.uk (DPhil thesis). University of Oxford. இணையக் கணினி நூலக மைய எண் 500732473. வார்ப்புரு:EThOS.
  2. Janna Levin (29 March 2016). Black Hole Blues and Other Songs from Outer Space. Knopf Doubleday Publishing Group. pp. 226–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-95820-4.
  3. Paul Halpern (10 August 2012). Edge of the Universe: A Voyage to the Cosmic Horizon and Beyond. John Wiley & Sons. pp. 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-23460-0.
  4. 4.0 4.1 "Watch this spacetime: gravitational wave discovery expected". The Guardian, Ian Sample, 9 February 2016
  5. Symmetry: Dimensions of Particle Physics. Fermi National Accelerator Lab.
  6. Google Scholar report for Pedro Ferreira
  7. "Open journals that piggyback on arXiv gather momentum". Nature, Volume 530, Issue 7588, Toolbox Elizabeth Gibney, 04 January 2016
  8. Turney, Jon. "Book Review: The State of the Universe by Pedro G. Ferreira". 
  9. Kean, Sam. "Book Review: 'The Perfect Theory' by Pedro G. Ferreira". 

புற இணைப்புகள்