உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டர்நெட் எக்சுபுளோரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர்
Windows Internet Explorer
உருவாக்குனர்Internet
தொடக்க வெளியீடுஆகஸ்ட் 1995
அண்மை வெளியீடு7.0.5730.13
(Windows XP/Server 2003)
7.0.6001.18000
(Vista SP1/Server 2008) / August 1995
Preview வெளியீடு8.0.6001.18241 (IE8, பீட்டா 2) /
ஆகஸ்ட் 27, 2008
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மாக் ஓஎஸ் சிஸ்டம் 7 இல் இருந்து OS X (கைவிடப்பட்டது)
சொலாரிஸ் and HP-UX (கைவிடப்பட்டது)

விண்டோஸ் 3.1 இலிருந்து Me (கைவிடப்பட்டது) small
மென்பொருள் வகைமைWeb browsers
உரிமம்Proprietary MS-EULA
இணையத்தளம்microsoft.com/ie
வார்ப்புரு:Msieversions


முன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் என்று அறியப்பட்ட விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர் மைக்ரோசாப்டினால் விருத்திசெய்யப்பட்ட வரைகலை உலாவியாகும். இது 1995 இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாகப் பாவிக்கப்பட்ட ஓர் உலாவியாகியது. 2002-2003 ஆம் ஆண்டளவில் உலாவியின் பங்கில் 95% இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6ஆவது பதிப்புக்கள் மூலம் இது வைத்திருந்தபோதும் இதன் பாவனையாள பங்கானது படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

வரலாறு

[தொகு]

இண்டநெட் எக்ஸ்புளோரர் 1994 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தாமஸ் றியடொன் (Thomas Reardon) ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் பெஞ்சமின் ஸ்லிவ்காவினால் ஸ்பைகிளால் மூலநிரலில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் காலாண்டுக் கட்டணத்துடன் விண்டோஸ் அல்லாத மென்பொருட்களின் வருமானத்தின் ஒருபகுதியையும் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் வழங்கியது. ஸ்பைகிளாஸ் மொசாக் அமெரிக்காவின் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் (NCSA) மொசாக் உலாவியுடன் பெயரளவில் ஒற்றுமை இருந்தாலும் அருமையாகவே ஸ்பைகிளாஸ் மொசாக் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் மொசாக் உலாவியின் மூலநிரலைப் பாவித்தது.

1ஆவது பதிப்பு

[தொகு]

இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் முதலாவது பதிப்பு ஆகஸ்ட் 1995 இல் வெளிவந்தது. இது ஸ்பைகிளாஸ் மொசாக் உலாவியை மீள் உருவாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது. இது விண்டோஸ் 95 பிளஸ் பதிப்புடன் மற்றும் கணினி உற்பத்தியாளர்களுக்கான விண்டோஸ் 95 உடனும் சேர்த்து வெளிவந்தது. ஆரம்பத்தில் ஏறத்தாழ அரை டசின் நிரலாக்கர்களுடனேயே இண்டநெட் எக்ஸ்புளோளர் பயணத்தை ஆரம்பித்தது. [1]விண்டோஸ் எண்டி இயங்குதளங்களுக்கான இண்டநெட் எக்ஸ்புளோளர் 1.5 பல மாதங்களுக்குப் பின்னர் வெளிவந்தது. இது இயங்குதளத்தில் உள்ளிணைக்கப்பட்டதால் ஸ்பைகிளாஸ் நிறுவனத்தாருக்குப் பணம் ஏதும் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் ஸ்பைகிளாசுடன் பிணக்குகள் ஏற்பட்டது. நீதிமன்றம் வரை சென்ற இந்தப் பிரச்சினை பல மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்பைகிளாசுக்கு மைக்ரோசாப்ட் வழங்கியதன் மூலம் முடிவுக்கு வந்தது.

2ஆவது பதிப்பு

[தொகு]

விண்டோஸ் 3.5, விண்டோஸ் எண்டி 4, விண்டோஸ் 95 இயங்குதளங்களை ஆதரிக்கும் முகமாக இண்டநெட் எக்ஸ்புளோளரின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1995 இல் வெளிவந்த வெள்ளோடப் பதிப்பின் பின்னர்) நவம்பர் 1995 இல் வெளிவந்தது. இதில் பாதுக்காப்பான முறையில் இணையத்தை அணுகும் செக்கியூட் சாக்கெட் லேயர் (SSL), குக்கீஸ், மெய்நிகர் மாதிரி உருவாக்க மொழி (VRML), RSA, இணையக் குழுக்கள் ஆகிய வசதிகள் உள்ளிணைக்கப்பட்டன. இதுவே விண்டோஸ் 3.1 ஆப்பிள் மாக்கிண்டோஷ் சிஸ்டம் 7 இற்கும் வெளிவந்த முதலாவது உலாவியாகும். ஆப்பிள் பவர்பிசி கணினிகளுக்கானது ஜனவரி 1996 இலும் 68k இற்கானது ஏப்ரலிலும் வெளிவந்தது. ஆப்பிள் கணினிகளூக்கான 2.1 பதிப்பு ஆகஸ்ட் 1996 இல் வெளிவந்தது. எனினும் இதே காலப்பகுதியில் விண்டோஸ் பதிப்பானது 3 ஐ அடைந்திருந்தது.

3ஆவது பதிப்பு

[தொகு]

இண்டநெட் எக்ஸ்புளோளரின் 3ஆவது பதிப்பு 13 ஆகஸ்ட் 1996 இல் வெளிவந்தது. இது இதன் முன்னோடிகளைவிட மிகவும் பிரபலம் அடைந்தது. இது ஸ்பைகிளாசின் மூலநிரல் இன்றி விருத்தி செய்யப்பட்டதெனினும் ஆவணத்தில் ஸ்பைகிளாஸ் ஐ மதிப்பளிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது. இதுவே முதன் முதலாக காஸ்கேடிங் ஸ்டைல் ஷீ்டடை (CSS) ஐ பகுதியளவில் ஆவது முதலில் ஆதரித்த உலாவியாகும். இது ஆக்டிவ் எக்ஸ் ஜாவா ஆப்லெட்ஸ் உடன்சேர்ந்த பல்லூடகம் (இன்லைன் மல்டிமீடியா) ஆகிய வசதிகளை உள்ளடக்கியிருந்தது. இதில் அவுட்லுக் எக்பிரஸ் இன் முன்னோடியான இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் அத்துடன் நெட்மீட்டிங் முன்னோடிப் பதிப்பான விண்டோஸ் அட்ரஸ் புக் போன்ற மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இது விண்டோஸ் 95 இன் 2 ஆவது பதிப்புடன் உள்ளிணைக்கப்பட்டிருந்தது. இது வெளிவந்து சில மாதங்களுக்குள்ளாகவே ஆய்வாளர்களாலும் ஹக்கர்களாலும் (Hackers) பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதுவே முதன் முதலா நீல நிறத்திலான e இலச்சினையைக் கொண்டிருந்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் விருத்திக் குழுவானது ஏறத்தாழ 100 நிரலாக்கர்களைக் கொண்டிருந்தது.

4ஆவது பதிப்பு

[தொகு]

இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது செப்டம்பர் 1997 இல் வெளிவந்தது. இது இயங்குதளத்திற்கும் உலாவியிற்குமான இடைவெளியை உறவை ஆழமாக்கும் வண்ணம் வெளிவந்தது. இந்தப் பதிப்பை விண்டோஸ் 95 அல்லது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் நிறுவும் பொழுது விண்டோஸ் டெக்ஸ்டாப் அப்டேட் என்பதைத் தேர்வுசெய்தால் பாரம்பரிய விண்டோஸ் எக்ஸ்புளோளர் ஆனது இணைய உலாவி போன்றே தோற்றமளிக்கும் ஓர் இடைமுகத்தை வழங்கியது அத்துடன் விண்டோஸ் டெக்ஸ்டாப்புடன் இணைய இடைமுகத்துடன் ஆக்டிவ் டெக்ஸ்டாப் ஆக மாறியது. விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒருங்கிணைத்தமையானது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது குழுக்கொள்கைகள் எனப்பொருள்படும் குறூப் பாலிசிகளுக்கு ஆதரவினை வழங்கியது. இதன் மூலம் உலாவியின் பல்வேறு தேர்வுகளை விருப்படி அமைக்கவும் சில தேர்வுகளை கட்டுப்படுத்தவும் உதவியது. மைக்ரோசாப்ட் சாட் என்கின்ற அரட்டை மென்பொருளுடன் மேம்படுத்தப்பட்ட நெட்மீட்டிங் மென்பொருளும் இணைக்கப்பட்டிருந்தது. இது விண்டோஸ் 98 பதிப்புடன் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதன் 4.5 ஆவது பதிப்பானது ஆப்பிள் 68k கணினிகளின் ஆதரவை விலக்கினாலும் இலகுவான 128 பிட் என்கிறிப்ஷன் (Encryption) வசதிகளை வழங்கியது. இது முன்னைய பதிப்புக்களை விடத் உறுதியானதாக வெளிவந்தது.

5ஆவது பதிப்பு

[தொகு]

இண்டநெட் எக்ஸ்புளோளரின் 5ஆவது பதிப்பானது 18 மார்ச் 1999 இல் வெளிவந்தது. இந்தப் பதிப்பானது விண்டோஸ் 98 இன் இரண்டாவது பதிப்பு மற்றும் ஆபிஸ் 2000 பதிப்புக்களுடன் உள்ளிணைக்கப்பட்டிருந்தது. இது இருவழிச் சொற்கள், எக்ஸ் எம் எல், எக்ஸ் எஸ் எல் டி மற்றும் இணையப்பக்கங்களை ஒருங்கிணைந்த இணையப்பக்கங்களாகச் சேமிக்கும் (MHTML) வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இன் 5ஆவது பதிப்பையும் உள்ளடக்கியிருந்தது. இதுவே முதன்முதலாக XMLHttpRequest ஐ அறிமுகம் செய்து ஏஜாக்ஸ் இடைமுகத்தை பிறப்பித்தது. 16பிட் பதிப்புக்களில் இதுவே கடைசிப் பதிப்பும் ஆகும். பிழைதிருத்தப்பட்ட பதிப்பான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.01 டிசம்பர் 1999 இல் வெளிவந்தது. விண்டோஸ் 2000 இந்தப் பதிப்பையே உள்ளடக்கியிருந்தது. ஜூலை 2000 இல் வெளிவந்த பதிப்பானது மேம்படுத்தப்பட்ட அச்சு மேலோட்ட வசதிகளுடன் CSS, எச்டிஎம்எல் நியமங்களை ஆதரித்தது.

பொதுவாக இண்டநெட் எக்ஸ்புளோரர் ஆரம்பிக்கும் பொழுது வீட்டுப் பக்கத்தை (home page) காட்டும் இதைத் தவிர்க்க கட்டளை ஊடாக start -> Run -> iexplore -home என்றவாறு ஆரம்பிக்கலாம்.


இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 பாதுக்காப்பு வலயங்களாக வலையமைப்பைப் பிரித்து நிர்வாகிக்கும்.

  • அகக்கணினி வலையமைப்பு (Local Intranet)
  • நம்பிக்கைக்கு உரிய தளங்கள் (trusted zones)
  • கட்டுப்படுத்தப்பட்ட தளங்கள் (Restricted Zones)
  • இணையம் (Internet) மேலேயுள்ள மூன்று வலையத்திலும் வராதவை எல்லாம் இணையம் என்றே கருதப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. உலாவிகளின் யுத்தத்தின் ஞாபகங்கள் அணுகப்பட்டது 5 டிசம்பர்2008 (ஆங்கில மொழியில்)