என். எஸ். ராமானுஜ தத்தாச்சர்யா
என். எஸ். ராமானுஜ தத்தாச்சர்யா | |
---|---|
பிறப்பு | எஸ். ராமானுஜ தத்தாச்சர்யா 1928 நாவல்பாக்கம், வட ஆற்காடு, தமிழ்நாடு |
இறப்பு | 5 ஜூன் 2017 |
பணி | சமசுகிருத அறிஞர் |
நாவல்பாக்கம் எஸ். ராமானுஜ தத்தாச்சர்யா (Navalpakkam Ramanuja Tatacharya) (1928-2017) ஒரு புகழ்பெற்ற சமசுகிருத அறிஞர். உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருதான செவாலியர் விருதைப் பெற்றுள்ளார்.[1] பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார். கேந்திரிய சமசுகிருத வித்யாபீடத்தின் முதல் துணைவேந்தராக 1989-1994 க்கு இடையில் பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டில், சமசுகிருத இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர் 1928 இல் வட ஆற்காடு மாவட்டத்தில் நாவல்பாக்கம் கிராமத்தில் எஸ். ஏ. டி. கிருஷ்ணசாமி தத்தாச்சர்யா மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு பிறந்தார். அவர் சரளமாக சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பேச கூடியவர். இவர் திருப்பதி சமசுகிருத வித்யாபீடத்தின் முதல் துணை வேந்தராக பதவி வகித்தார்.
இறப்பு
[தொகு]இவர் 2017 சூன் 5 இல் மும்பையில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "For Sanskrit scholar, small salary meant no distractions" (in en-IN). The Hindu. 2012-07-14. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3638702.ece.
- ↑ "Vice-Chancellor of Rashtriya Sanskrit Vidyapeetha passes away". The Hans India. 2017-06-06. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-06-06/Vice-Chancellor-of-Rashtriya-Sanskrit-Vidyapeetha-passes-away/304662.
வெளி இணைப்புகள்
[தொகு]- Obituary பரணிடப்பட்டது 2019-04-17 at the வந்தவழி இயந்திரம்