உள்ளடக்கத்துக்குச் செல்

அடிதொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1942-ல் அடிதொட்டியொன்றில் ஒரு கன்று வெட்டிக் கொல்லப்படும் காட்சி.

அடிதொட்டி (Slaughterhouse), அல்லது வதைகூடம், என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் உடலிலிருந்து மனிதர்கள் உண்பதற்கான இறைச்சி தயாரிக்கப்படும் ஒரு இடமாகும். இது இறைச்சிக்கூடம் என்றும் கசாப்புக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. அடிதொட்டிகள் இறைச்சியைப் வழங்குகையில் பொட்டல அமைப்புகள் அவ்விறைச்சியை பிரித்தெடுத்து வகைப்படுத்தி விற்பனைக்கு ஏதுவாக பொட்டலம் கட்டும் வேலையைச் செய்கின்றன.

மனித நுகர்வுக்கு அல்லாத இறைச்சியை உற்பத்தி செய்யும் அடிதொட்டிகள் சில நேரங்களில் கழிவதைகூடங்கள் (knacker's yards அல்லது knackeries) என்று அழைக்கப்படுகின்றன. இங்குதான் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற விலங்குகளும் பணிக்குப் பயன்படாத மற்றும் பணியாற்றி ஓய்ந்த குதிரைகள் போன்ற பண்ணை விலங்குகளும் வெட்டப்படுகின்றன.

பெரிய அளவில் விலங்குகளை வெட்டுவது தளவாடங்கள், விலங்குகள் நலன், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும் இது பொதுச் சுகாதாரத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. அடிதொட்டிகளை எங்கு நிறுவுவது என்பது கலாச்சார ரீதியிலும் பொதுமக்களுக்கு அவற்றின் மீதான வெறுப்பு,[1][2] சுகாதாரம்[3] ஆகியவற்றின் அடிப்படையிலும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

அடிதொட்டிகளுக்கு விலங்குகள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து முறைகள், கொல்லப்படுவதற்கு முன்னதான ஏற்பாடுகள், விலங்குகளை வளர்த்து மேய்த்தல், கொல்லப்படுதல் என அனைத்தும் விலங்குரிமை அமைப்புகளால் தொடர்ந்து கண்டிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.[4]

நவீன நடைமுறைகள்

[தொகு]

நவீன அடிதொட்டிகளில் இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினரால் பரிசோதனை செய்யப்படும். இன்றைய அடிதொட்டிகளில் சில நாடுகளில் விலங்குகள் நவீன முறையில் துப்பாக்கி மூலம் கொல்லபடுகின்றன. அதன் பின்னர் அந்த விலங்குகளின் இறைச்சி நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் முத்திரை இட்டு அந்நகராட்சியின் நகர்நல அலுவலர் உறுதிசெய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், விலங்குகள் கொல்லப்படும்போது ஏற்படும் கழிவுகள் இயற்கை உரம் தயாரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.[5]

விலங்குரிமை மீறலும் விலங்குகளுக்கு விளையும் இன்னல்களும்

[தொகு]

1997-ல் மனிதநேய விவசாய சங்கத்தின் (Humane Farming Association [HFA]) முதன்மை ஆய்வாளரான கெயில் ஐஸ்னிட்ஸ்[6] ஸ்லாட்டர்ஹவுஸ் ("வதைகூடம்") என்ற நூலினை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் உள்ள அடிதொட்டி தொழிலாளர்களின் நேர்காணல்களை அவர் வெளியிட்டிருந்தார். அடிதொட்டிகளில் அத்தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய விரைவுத் தன்மையின் காரணமாக, பொதுவாகவே விலங்குகள் உயிருடன் கண் சிமிட்டிக்கொண்டும் கைகால்களை உதைத்துக்கொண்டும் மரண வலியால் அலறிக்கொண்டும் இருக்கும் போதே தோலுரிக்கப்படுகின்றன என்று அதில் அவர் குறிப்பிடுகிறார். வதைகூடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் பவுண்டுகள் எடையுள்ள பசுக்கள் மரண வலியால் துடித்துக் கொண்டிருக்கையில் வலி தாங்காமல் தன்னருகில் இருப்பவரை உதைத்துத் தள்ளுவதும் வாடிக்கை என்பதால் இது விலங்குகளுக்குக் கொடுமையானது என்பதோடு மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் மனிதத் தொழிலாளர்களுக்கும் ஆபத்தானது என்று ஐஸ்னிட்ஸ் நிறுவுகிறார்.[7]

மனிதாபிமான வதைச் சட்டத்தின் படி அனைத்து விலங்குகளும் கொல்லப்படும் முன்னரோ அல்லது மற்ற கொடூரச் செயற்பாடுகளுக்கு ஆட்படுத்தப்படும் முன்னரோ மயக்கமடையச் செய்யப்பட வேண்டும். இதனால் அந்த விலங்கு வதைபடுவதற்கு முன்பு எலெக்ட்ரானார்கோசிஸால் உள்ளிட்ட எந்த வலிக்கும் ஆளாகாது. ஆனால் மேற்கூறிய நிகழ்வுகள் நாடு முழுவதிலும் உள்ள சில வதைகூடங்கள் மனிதாபிமான வதைச் சட்டத்தின் வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை என்பதையே குறிக்கின்றன.

மொத்தம் இரண்டு மில்லியன் மணிநேர தொழில் அனுபவத்தைக் கொண்ட அடிதொட்டித் தொழிலாளர்களை ஐஸ்னிட்ஸ் நேர்காணல் செய்ததில் விதிவிலக்கு ஏதுமின்றி அந்தத் அடிதொட்டித் தொழிலாளர்கள் அனைவருமே விலங்குகளை உயிருடன் அடித்தும், கழுத்தை நெரித்தும், கொதிக்கும் வெந்நீரில் வேகவைத்தும், தலையைத் துண்டாக்கியும் கொன்றுள்ளதாகவும் மேலும் இச்செயல்களைக் குறித்த புகார் ஏதும் இதுவரை எழுப்பியதில்லை என்றும் கூறியுள்ளதை மனிதநேய விவசாய சங்கம் பதிவு செய்துள்ளது. அத்தொழிலாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த விலங்கு வன்முறைச் செயல்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரிக்கத் தவறவில்லை. தங்களது தொழிலில் உள்ள கொடூர செயற்பாடுகளின் விளைவாக அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தவரையும் மற்றவரையும் உடல்ரீதியாகத் துன்புறுத்தியுள்ளதையும் மேலும் மது உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டதையும் அந்நேர்காணல்களின் வாயிலாக ஒப்புக்கொண்டுள்ளனர்.[8]

எடுத்துக்காட்டாக, பன்றி வதைகூடத் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 1,100 பன்றிகளைக் கொன்று முடிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்களது மனக் கடுப்புகளை அந்த விலங்குகள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று மனிதநேய விவசாய சங்கம் குற்றம் சாட்டுகிறது. பத்து வதைகூடங்களில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவரை பேட்டி காணுகையில் ஐஸ்னிட்ஸ் அவரிடம் பன்றி இறைச்சி உற்பத்தி குறித்துக் கேட்டறிந்தார். அதற்கு அந்தத் தொழிலாளி கூறியதாவது:

விலங்குரிமை ஆர்வலர்கள், விலங்கினவாத எதிர்ப்புவாதிகள், சைவ மற்றும் நனிசைவ ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வதைகூடங்களின் முக்கிய விமர்சகர்கள் அடங்குவர். இவர்கள் அனைத்து வதைகூடங்களையும் மூடுவதற்கான அணிவகுப்பு உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் இவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டி வலியுறுத்தியும் வதைத் தொழிலுக்கு எதிரான தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். இவர்களுள் பலர் மனிதாபிமான வதை என்ற ஒன்று சாத்தியமற்றது என்று வாதிடுகின்றனர்.[10]

தொழிலாளர்களுக்கு விளையும் இன்னல்கள்

[தொகு]
வதைகூடத்தில் வெட்டப்படவிருக்கும் விலங்கு

அமெரிக்க வதைகூடத் தொழிலாளர்கள் சராசரி அமெரிக்கத் தொழிலாளியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பெரிய அளவிலான காயங்களுக்கு ஆளாகின்றனர்.[11] அமெரிக்க தேசிய வானொலியான NPR அறிக்கையின்படி, மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு பன்றி வதைகூடத் தொழிலாளர்களுக்கும் மாட்டு வதைகூடத் தொழிலாளர்களுக்கும் சராசரியை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம்.[12] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வதைகூடத் தொழிலாளர்களுக்கு பணியிட விபத்துகளின் காரணமாக உடலுறுப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சை நிகழ்வு ஒரு வாரத்திற்கு இரண்டு என்ற அளவில் நடந்தேறுகின்றன என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.[13] சராசரியாக மாதத்திற்கு ஒருமுறையேனும் அமெரிக்காவின் மிகப்பெரிய இறைச்சி உற்பத்தியாளரான டைசன் ஃபுட்ஸின் ஊழியர் ஒருவருக்கு ஒரு விரலோ அல்லது கைகால்களோ துண்டிக்கப்படுகிறது.[14] இங்கிலாந்தில் ஆறு வருட காலப்பகுதியில், 78 வதைகூடத் தொழிலாளர்கள் தங்களது விரல்கள், விரல் பகுதிகள் மற்றும் கைகால்களை இழந்துள்ளனர் என்றும் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் குறைந்தது 4,500 பேர் பணியிட விபத்துகளால் மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது என்றும் "தி ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்" என்ற புலனாய்வுப் பத்திரிகைப் பணியகம் தெரிவித்துள்ளது.[15] தி இத்தாலியன் ஜர்னல் ஆஃப் ஃபுட் ஸேஃப்டி ஆய்விதழில் வெளிவந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வதைகூடத்தில் விலங்குகளின் தொடர்ச்சியான அலறல்களிலிருந்து வதைகூடத் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டி காதுகளுக்குப் பாதுகாப்புக் கருவிகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.[16] 2004-ஆம் ஆண்டு தி ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் அண்ட் என்வைரோன்மெண்டல் மெடிசின் ஆய்விதழில் வெளிவந்த ஆய்வில், நியூசிலாந்து இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் "நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களாலும் அனைத்து காரணங்களாலும் இறப்பதற்கான ஆபத்து அதிகப்படியாகக் காணப்படுகின்றன" என்று கண்டறியப்பட்டுள்ளது.[17]

வதைகூடத் தொழிலாளர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்பினை ஐஸ்னிட்ஸ் தனது நூலில் கீழ்வருமாறு விவரிக்கிறார்:

வதைகூடக் கழிவுகள்

விலங்குகளை வெட்டுவதும், வளர்ப்பதும், அவற்றை இறைச்சிக்காக வதைகூடத்திற்கு கொண்டு செல்வதும் என அனைத்துமே அதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மன அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் தந்து அவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளைத் தரவல்லவை.[31] ஆர்கனைஸேஷன் என்ற ஆய்விதழில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு ஒன்று, "44 வெவ்வேறு தொழில்களில் உள்ள 10,605 டேனிஷ் தொழிலாளர்களின் தரவுகளின் பின்னடைவு பகுப்பாய்வுகள், வதைகூடத் தொழிலாளர்கள் உடலளவிலும் மனதளவிலும் தொடர்ச்சியாக நலம்குன்றி வாழ்கின்றனர் என்றும் கூடுதலான எதிர்மறை எண்ணங்களுடனும் செயற்பாடுகளுடனும் வாழ்கின்றனர் என்றும் நிறுவுகின்றன" என்று கூறுகிறது.[32] கொலராடோ பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் "வதைகூடத் தொழிலாளர்கள் 'குற்றவுணர்வால் ஏற்படும் அதிர்ச்சிகரமான மன அழுத்தம்' எனப்படும் ஒரு வகையான பின்னதிர்ச்சி மனவழுத்த (PTSD) நோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்று அன்னா டோரோவ்ஸ்கிக் கூறுகிறார்.[33] குற்றவியல் நிபுணரான ஏமி ஃபிட்ஸ்ஜெரால்டின் 2009-ஆம் ஆண்டு ஆய்வில் "மற்ற அனைத்துத் தொழில்களைக் காட்டிலும் இறைச்சித் தொழிலில் ஈடுபடுவதே வன்குற்றங்களுக்கான கைதுகள், கற்பழிப்புக்கான கைதுகள், இதர பாலியல் குற்றங்களுக்கான கைதுகள் உட்பட மொத்தக் கைது விகிதங்கள் அதிகமாக இருக்கக் காரணம்" என்று குறிப்பிடுகிறார்.[34] PTSD ஜர்னல் ஆய்விதழில் அறிஞர்கள் விளக்குவது போல், "இந்த பணியாளர்கள் பன்றிகள், பசுக்கள் போன்ற சாதுவான ஜீவன்களைக் கொல்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தச் செயலைச் செய்வதற்கு அத்தொழிலாளர்கள் தங்களது வதைச் செயல்களிலிருந்தும் தம் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அப்பாவி ஜீவன்களிலிருந்தும் சற்றும் தொடர்பற்றவர்களாக தங்களை ஆக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த வகையான உணர்ச்சி முரண்பாடுகள் அத்தொழிலாளர்களிடம் குடும்ப வன்முறை, சமூக விலகல், பதட்டம், போதைப்பொருள் பழக்கம், குடிப்பழக்கம், PTSD எனப்படும் பின்னதிர்ச்சி மனவழுத்த நோய் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும்".[35]

1980-களில் தொடங்கி, கார்கில், கானக்ரா, டைசன் ஃபுட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய உணவு நிறுவனங்கள் தொழிலாளர்களது நலனைச் சற்றும் கருத்தில் கொள்ளாது தங்களது பெரும்பாலான வதைகூடங்களைத் தொழிற்சங்க முறைகளற்ற தென்பகுதி கிராமப்புறங்களுக்கு நகர்த்தின.[36]:205 அமெரிக்காவில் வதைகூடங்கள் குழந்தைத் தொழிலாளர்களையும் ஆவணங்களின்றிக் குடியேறியவர்களையும் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தி அவர்களைச் சுரண்டுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.[37][38] மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமெரிக்காவில் வதைகூடத்தில் பணியமர்த்தப்படும் செயலையே 2010-ஆம் ஆண்டு ஒரு மனிதவுரிமைக் குற்றமாக விவரித்தது.[39] வதைகூடத் தொழிலாளர்கள் ஓய்வு இடைவேளை ஏதும் அனுமதிக்கப்படாமலும், அடிக்கடி டயப்பர்கள் அணிய வேண்டிய நிலைக்கு ஆட்படுத்தப்பட்டும், குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டும் இருந்ததை ஆக்ஸ்ஃபாம் அமெரிக்காவின் தனது அறிக்கையொன்றில் வெளியிட்டது.[40]

மேலும் காண்க

[தொகு]

தரவுகள்

[தொகு]
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=380852&Print=1
  2. குமுதம் ஜோதிடம்; 30.03.2012
  3. "பள்ளி அருகே திறந்தவெளி கழிப்பிடத்தால்...துர்நாற்றம்! சுகாதார சீர்கேட்டால் தவிக்கும் மாணவர்கள்" (in ta). Dinamalar (Thuraiyur: Dinamalar). 14 November 2013. https://www.dinamalar.com/news_detail.asp?id=849771. 
  4. Terlouw, E.M.C.; Arnould, C.; Auperin, B.; Berri, C.; Le Bihan-Duval, E.; Deiss, V.; Lefèvre, F.; Lensink, B.J. et al. (2008). "Pre-slaughter conditions, animal stress and welfare: Current status and possible future research". Animal 2 (10): 1501–1517. doi:10.1017/S1751731108002723. பப்மெட்:22443909. 
  5. "மயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு" (in ta). Daily Thanthi (Mayiladuthurai: Daily Thanthi). 14 September 2019. https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/09/14011539/Will-the-modern-goat-hatchery-be-reused--The-expectation.vpf. 
  6. "HFA – The Humane Farming Association". www.hfa.org. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  7. Eisnitz, Gail A. Slaughterhouse. Prometheus Books, 1997, cited in Torres, Bob. Making a Killing. AK Press, 2007, p. 46.
  8. "HFA Exposé Uncovers Federal Crimes" பரணிடப்பட்டது 2009-05-19 at the வந்தவழி இயந்திரம், Humane Farming Association. Retrieved March 8, 2008.
  9. Eisnitz, p. 82, cites in Torres, Bob. Making a Killing. AK Press, 2007, p. 47.
  10. Browning, Heather; Veit, Walter (2020). "Is Humane Slaughter Possible?". Animals 10 (5): 799. doi:10.3390/ani10050799. பப்மெட்:32380765. 
  11. "Meatpacking". Occupational Safety and Health Administration. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  12. Lowe, Peggy (11 August 2016). "Working 'The Chain,' Slaughterhouse Workers Face Lifelong Injuries". National Public Radio. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  13. "Two amputations a week: the cost of working in a US meat plant". The Guardian. 5 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  14. Lewis, Cora (18 February 2018). "America's Largest Meat Producer Averages One Amputation Per Month". Buzzfeed News. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  15. "Revealed: Shocking safety record of UK meat plants". The Bureau of Investigative Journalism. 29 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  16. Francesca Iulietto, Maria; Sechi, Paola (3 July 2018). "Noise assessment in slaughterhouses by means of a smartphone app". Italian Journal of Food Safety 7 (2): 7053. doi:10.4081/ijfs.2018.7053. பப்மெட்:30046554. 
  17. McLean, D; Cheng, S (June 2004). "Mortality and cancer incidence in New Zealand meat workers". Journal of Occupational and Environmental Medicine 61 (6): 541–547. doi:10.1136/oem.2003.010587. பப்மெட்:15150395. 
  18. Eisnitz, Gail A. (1997). Slaughterhouse: : The Shocking Story of Greed, Neglect, And Inhumane Treatment Inside the U.S. Meat Industry. Prometheus Books.
  19. "Sheep farmer who felt so guilty about driving his lambs to slaughter rescues them and becomes a vegetarian". The Independent. 30 January 2019. https://www.independent.co.uk/news/uk/home-news/sheep-farmer-vegetarian-lambs-sanctuary-slaughter-meat-industry-dairy-devon-a8754056.html. 
  20. Victor, Karen; Barnard, Antoni (20 April 2016). "Slaughtering for a living: A hermeneutic phenomenological perspective on the well-being of slaughterhouse employees". International Journal of Qualitative Studies on Health and Well-being 11: 30266. doi:10.3402/qhw.v11.30266. பப்மெட்:27104340. 
  21. "Working 'The Chain,' Slaughterhouse Workers Face Lifelong Injuries". Npr.org. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  22. Anna Dorovskikh. "Theses : Killing for a Living: Psychological and Physiological Effects of Alienation of Food Production on Slaughterhouse Workers". Scholar.colorado.edu. Archived from the original on 30 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "PTSD in the Slaughterhouse". The Texas Observer. 7 February 2012. https://www.texasobserver.org/ptsd-in-the-slaughterhouse/. 
  24. Newkey-Burden, Chas (19 November 2018). "There's a Christmas crisis going on: no one wants to kill your dinner - Chas Newkey-Burden". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2018/nov/19/christmas-crisis-kill-dinner-work-abattoir-industry-psychological-physical-damage. 
  25. "Psychological Distress Among Slaughterhouse Workers Warrants Further Study - SPH - Boston University". School of Public Health. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  26. Dillard, Jennifer (September 2007). A Slaughterhouse Nightmare: Psychological Harm Suffered by Slaughterhouse Employees and the Possibility of Redress through Legal Reform. https://www.researchgate.net/publication/228141419. பார்த்த நாள்: 30 January 2019. 
  27. S, Serina; hu (2 March 2018). "'I couldn't look them in the eye': Farmer who couldn't slaughter his cows is turning his farm vegan". Inews.co.uk. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  28. Fox, Katrina. "Meet The Former Livestock Agent Who Started An International Vegan Food Business". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  29. Lebwohl, Michael (25 January 2016). "A Call to Action: Psychological Harm in Slaughterhouse Workers". The Yale Global Health Review. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  30. Nagesh, Ashitha (31 December 2017). "The harrowing psychological toll of slaughterhouse work". Metro. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  31. [19][20][21][22][23][24][25][26][27][28][29][30]
  32. Baran, B. E.; Rogelberg, S. G.; Clausen, T (2016). "Routinized killing of animals: Going beyond dirty work and prestige to understand the well-being of slaughterhouse workers". Organization 23 (3): 351–369. doi:10.1177/1350508416629456. 
  33. Dorovskikh, Anna (2015). Killing for a Living: Psychological and Physiological Effects of Alienation of Food Production on Slaughterhouse Workers (BSc). University of Colorado, Boulder. Archived from the original on 2018-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.
  34. Fitzgerald, A. J.; Kalof, L. (2009). "Slaughterhouses and Increased Crime Rates: An Empirical Analysis of the Spillover From "The Jungle" Into the Surrounding Community". Organization & Environment 22 (2): 158–184. doi:10.1177/1350508416629456. https://journals.sagepub.com/doi/abs/10.1177/1086026609338164. 
  35. "The Psychological Damage of Slaughterhouse Work". PTSDJournal. Archived from the original on 25 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  36. Nibert, David (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". In Steven Best; Richard Kahn; Anthony J. Nocella II; Peter McLaren (eds.). The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. pp. 197–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0739136980.
  37. Waldman, Peter (29 December 2017). "America's Worst Graveyard Shift Is Grinding Up Workers". Bloomberg Businessweek. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  38. Grabell, Michael (1 May 2017). "Exploitation and Abuse at the Chicken Plant". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  39. "Rights on the Line". 11 December 2010. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  40. Grabell, Michael. "Live on the Live". Oxfam America. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிதொட்டி&oldid=3927014" இலிருந்து மீள்விக்கப்பட்டது