கீவ் மாகாணம்
கீவ் மாகாணம்
Київська область | |
---|---|
மாகாணம் | |
கீவிஸ்கா மாகாணம்[1] | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | கீவ் |
அரசு | |
• ஆளுநர் | வசில் வொலோதின்[2] |
• கீவ் மாகாணக் குழு | 84 உறுப்பினர்கள் |
• அவைத் தலைவர் | ஹன்னா ஸ்டாரிகோவா |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,131 km2 (10,861 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 8-வது |
மக்கள்தொகை (2021)[3] | |
• மொத்தம் | 17,88,530 |
• தரவரிசை | 10வது |
• அடர்த்தி | 64/km2 (160/sq mi) |
Demographics | |
• அலுவல் மொழி | உக்குரேனிய மொழி |
• Salary growth | +28.73 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 07-09 |
பிரதேச குறியீடு | +380 44 (கீவ் நகரம்) +380 45 (கீவ் நகரத்திற்கு வெளியே)[4] |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-32 |
வாகனப் பதிவு | AI |
மாவட்டங்கள் | 25 |
மொத்த நகரங்கள் | 26[5] |
மண்டல நகரங்கள் | 12[5] |
சிறு நகரங்கள் | 30 |
கிராமங்கள் | 1,127[5] |
FIPS 10-4 | மாகாணக் குறியீடு UP13 |
இணையதளம் | kyiv-obl |
கீவ் மாகாணம் (Kyiv Oblast or Kiev Oblast) உக்ரைன் நாட்டின் நடு வடக்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன தலைநகரம் கீவ் நகரம் ஆகும். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை கைப்பற்ற, 24 பிப்ரவரி 2022 முதல் உருசியா படையெடுப்பு நடத்தி வருகிறது.
புவியியல்
[தொகு]28,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கீவ் மாகாணம், உக்ரைன் நாட்டில் வடமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது கீவ் நகரத்தின் பரப்பளவை விட 35 மடங்குப் பெரிய்தாகும். கீவ் மாகாணத்தின் வடக்கில் பெலரஸ் நாடும், தென்கிழக்கில் போல்தவா மாகாணம், தெற்கில் செர்கசி மாகாணம், கிழக்கிலும், வடகிழக்கிலும் செர்னிகிவ் மாகாணம், தென்மேற்கில் வின்னித்சியா மாகாணம், மேற்கில் சைதோமிர் மாகாணம் எல்லைகளாக உள்ளது. தினேப்பர் ஆறு கீவ் மாகாணத்தின் வடக்கிலிருந்து தெற்காக 246 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்கிறது. கீவ் நீர்த்தேக்கம் மற்று கனிவ் நீர்த்தேக்கம் மற்றும் 750 சிறுஏரிகள் கீவ் மாகாணத்தின் நீர் ஆதாரமாக உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]சனவரி மாதத்தில் குளிர்காலத்திய வெப்ப நிலை {convert|-6.1|°C|°F}} ஆகவும், கோடைக்காலத்திய வெப்ப நிலை 19.2 °C (66.6 °F) ஆகவும் இருக்கும்.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]கீவ் மாகாணம் 25 மாவட்டங்கள், 26 நகரங்கள், 12 மண்டல நகரங்கள், 12 சிறு நகரங்கள் மற்றும் 1,127 கிராமங்கள் கொண்டது.
செர்னோபில் மண்டலம்
[தொகு]கீவ் மாகாணத்தின் வடமேற்கின் கோடியில் அமைந்த செர்னோபில் நகரத்தில் உள்ள அணு உலை 26 ஏப்ரல் 1986 அன்று வெடித்து அணுக்கதிரியக்கம் வெளியே பரவியதால் செர்னோபில் மண்டலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டது. தற்போது இந்நகரம் மனிதர் வாழாது உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]கீவ் மாகாணத்தின் மொத்த் மக்கள் தொகை 17,88,530 ஆகும். அதில் உக்குரேனிய மொழி|உக்ரேனியர்கள்]] 16,84,800 (92.5%) பெரும்பான்மையாகவும், உருசியர்கள், யூதர்கள், பெல்ரசியர்கள் மற்றும் பிறர் சிறுபான்மையினத்தவராக உள்ளனர். கீவ் போன்ற நகர்புறங்களில் 10,53,500 (57.6%) மக்களும், கிராமபுறங்களில் 7,74,400 (42.4%) மக்களும் வாழ்கின்றனர்..[6]கீவ் மாகாண மக்கள் தொகையில் ஆண்கள் 46.3% மற்றும் பெண்கள் 53.7% ஆக உள்ளனர்.
பொருளாதாரம்
[தொகு]தொழில்துறை
[தொகு]கீவ் மாகாணம் அணுசக்தி மின் ஆற்றல், எரிசக்தி துறை, உணவு, வேதியியல், பெட்ரோ-கெமிக்கல் தொழில்கள், பொறியியல் இயந்திரங்கள், உலோகத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.
வேளாண்மை
[தொகு]1999-ஆம் ஆண்டின் கீவ் மாகாணத்தின் தானிய உற்பத்தி 1,118,600 டன்கள் ஆகும். கரும்பு 15,70,900 டன்களும், சூரியகாந்தி வித்துக்கள் 1,81,000 டன்களும் விளைந்தது.
அடிக்குறிப்புகள்
[தொகு]a. ^ These neighboring settlements are practically merged into a conurbation
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ (in உக்குரேனிய மொழி) Zelensky gave the Kyiv region a leader, Ukrayinska Pravda (18 June 2020)
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ua2021estimate
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ announcement of new telephone codes in Kyiv Post
- ↑ 5.0 5.1 5.2 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;KyivRegionStatistics07
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Ukrcensus.gov.ua – Kyiv region பரணிடப்பட்டது பெப்பிரவரி 18, 2006 at the வந்தவழி இயந்திரம் URL accessed on November 26, 2006
- Information Card of the Region பரணிடப்பட்டது மார்ச்சு 24, 2009 at the வந்தவழி இயந்திரம் – Official site of the Cabinet of Ministers of Ukraine
- Information Card of the Region – Official site of the Cabinet of Ministers of Ukraine
வெளி இணைப்புகள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- kyiv-obl.gov.ua – Official website of Kyiv Oblast Administration
- patent.net.ua – Symbols of Kyiv Oblast
- Wormwood Forest – a commercial site, however, containing free-access Chernobyl-related maps and photogallery (in ஆங்கில மொழி and உக்குரேனிய மொழி)
- Kyiv Oblast from website Ukraine-CityGuide (in உக்குரேனிய மொழி, உருசிய மொழி, and ஆங்கில மொழி)
- Kyiv real estate - a noncommercial site with detailed information on all residential complexes of Kyiv Oblast (in உருசிய மொழி and உக்குரேனிய மொழி)
- Kyiv Oblast from website Ukraine-CityGuide (in உக்குரேனிய மொழி, உருசிய மொழி, and ஆங்கில மொழி)
- The Official Site of the Radomysl Castle பரணிடப்பட்டது 2020-08-14 at the வந்தவழி இயந்திரம் (in உக்குரேனிய மொழி, உருசிய மொழி, and ஆங்கில மொழி)