குஜராத்தில் சமணம்
குஜராத்தில் சமணம் பல நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கை செலுத்தி வருகிறது.[1]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குஜராத் மாநிலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 5,79,654 ஆக உள்ளது. [2]சமணர்கள் தங்களின் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதர், இம்மாநிலத்தின் கிர்நார் மலையில் மோட்சம் அடைந்தார் எனக்கருதுகிறார்கள்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில், சமண சமயத்தின் தலைநகரம் எனப்போற்றப்படும் பண்டைய வல்லபி நகரத்தில் சமண அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது.[3] சௌதா வம்ச மன்னர் வனராஜா ஆட்சியின் போது (கிபி 720-780), வல்லபி நகரத்தில் சமணத் துறவி சிலாகுணா சூரி தலைமையில் கூடிய துறவிகள், சமண சமயத்தின் ஒழுங்கு முறைப்பட்ட சாத்திரங்கள் தொகுக்கப்பட்டன.
வரலாறு
[தொகு]குஜராத் மாநிலம் கி பி 6-7ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணக் கோயில்கள் கொண்டிருந்தது. இக்கோயில்கள் சோலாங்கிப் பேரரசர்கள் மற்றும் இராசபுத்திர சௌதா வம்சத்தவர்கள் பேணிக்காத்தனர்.[4] 13-ஆம் நூற்றாண்டில் வடக்கு குஜராத் பகுதிகள், சமண சமயத்தின் முக்கிய மையமாக விளங்கியது.[5]
முதன் முதலில் குஜராத்தில் அறியப் பட்ட இலக்கியமான பரதன் – பாகுபலி இராஜா எனும் சரித்திர வரலாற்று நூலை எழுதியது ஒரு சமணத் துறவி ஆவார். குஜராத் சமண வரலாற்றில் ஆச்சாரியர் ஹேமசந்திர சூரி மற்றும் அவர் மாணவர் சோலாங்கிப் பேரரசர் குமாரபாலன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
முக்கிய சமண மையங்கள்
[தொகு]- சத்ருஞ்ஜெய மலை.
- பாலிதானா கோயில்கள்
- கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்)
- தரங்கா சமணர் கோயில்
- அதீஸ்சிங் கோயில்,
- பத்ரேஸ்வரர் சமணர் கோயில்
- கும்பாரிய சமணக் கோயில்கள்
- பவகர் சமணக் கோயில்கள்
- அப்காபூர் சமணக் கோயில்கள்
குறிப்பிடத்தக்க சமணர்கள்
[தொகு]- விக்கிரம் சாராபாய்
- பிரேம்சந்த் ராய்சந்த்
- அமித் ஷா
- திலீப் தோஷி
- கௌதம் அதானி
- விஜய் ருபானி
- விர்ஜி வோரா
- ஆஷா பரீக்
- திலீப் சாங்வி
- கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
- சுதிர் வி. ஷா
சமணக் கோயில்கள்
[தொகு]-
வசாய் ஜெயின் கோயில், பத்ரேஸ்வர்
-
சோமொவ்சரண் கோயில்
-
கிர்நார் ஜெயின் கோயில்கள்
-
அதலஜ் ஜெயின் கோயில்
-
மகூடி ஜெயின் கோயில்
-
சாந்திநாதர் ஜெயின் கோயில், கோத்தரா, கட்ச் மாவட்டம்
-
72 ஜெயின் கோயில்கள்
-
பவகாத் மலை ஜெயின் கோயில்
-
கீர்த்தி தூண், பாலன்பூர்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Jainism". பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ Jain Population in India
- ↑ "Jainism". பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "Al-Hind the Making of the Indo-Islamic World". பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "Cultural History of India". பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
மேற்கோள்கள்
[தொகு]- Glasenapp, Helmuth Von (1999), Jainism: An Indian Religion of Salvation, தில்லி: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1376-6