2006 உலகக்கோப்பை காற்பந்து
2006 FIFA World Cup - ஜெர்மனி FIFA Fußball-Weltmeisterschaft Deutschland 2006 | |
---|---|
அதிகாரப்பூர்வ சின்னம் | |
அணிகள் | 32 (தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198) |
இடம் | ஜெர்மனி |
நடைபெறும் ஆட்டங்கள் | 64 |
2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.
ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.
ஆடு களங்கள்
[தொகு]மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.
அணிகள்
[தொகு]குழுக்கள்
[தொகு]இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]
குழு A | குழு B | குழு C | குழு D |
---|---|---|---|
ஜெர்மனி | இங்கிலாந்து | அர்ஜெண்டினா | மெக்சிகோ |
கோஸ்டா ரிகா | பராகுவே | ஐவரி கோஸ்ட் | ஈரான் |
போலந்து | டிரினிடாட் மற்றும் டொபாகோ | செர்பியாவும் மொண்டெனேகுரோவும் | அங்கோலா |
எக்குவடோர் | சுவீடன் | நெதர்லாந்து | போர்த்துகல் |
குழு E | குழு F | குழு G | குழு H |
இத்தாலி | பிரேசில் | பிரான்சு | எசுப்பானியா |
கானா | குரோவாசியா | சுவிட்சர்லாந்து | உக்ரைன் |
ஐக்கிய அமெரிக்கா | ஆத்திரேலியா | தென் கொரியா | தூனிசியா |
செக் குடியரசு | சப்பான் | டோகோ | சவூதி அரேபியா |
நேரடி ஒளிபரப்பு
[தொகு]உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]ஆங்கிலம்
[தொகு]- பிபா உலககோப்பை 2006-க்கான அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம்
- ஆட்ட நேர அட்டவணை பரணிடப்பட்டது 2007-03-21 at the வந்தவழி இயந்திரம்
- ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை தகவற்தளம் பரணிடப்பட்டது 2006-12-20 at the வந்தவழி இயந்திரம்
- உலகக்கோப்பை நடக்கும் விளையாட்டரங்கங்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2006-06-16 at the வந்தவழி இயந்திரம்
- அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை தொண்டியக்கம் பரணிடப்பட்டது 2006-07-04 at the வந்தவழி இயந்திரம்
- பி.பி.சி. தொகுப்பு
தமிழ்
[தொகு]- உலகக்கோப்பை கால்பந்து - களஞ்சியம் பரணிடப்பட்டது 2006-05-29 at the வந்தவழி இயந்திரம்
- உலகக்கோப்பை கால்பந்து 2006
- உலகக்கிண்ணம்2006ஜேர்மனி
- நினைவுகள் - கால்பந்தாட்டம்
- சென்னை நெட்வொர்க்.காம்-இல் போட்டி முடிவுகள் பரணிடப்பட்டது 2006-06-17 at the வந்தவழி இயந்திரம்
- சிஃபி இணையத்தள சிறப்புத் தளம் பரணிடப்பட்டது 2006-10-11 at the வந்தவழி இயந்திரம்