இணைய சமத்துவம்
இணைய சமத்துவம் |
---|
தலைப்புகள், விவகாரங்கள் |
நாடு அல்லது பிராந்திய வாரியாக |
இணையம் |
---|
இணைய நடுநிலைமை அல்லது இணையதள சமநிலை அல்லது இணைய சமத்துவக் (net neutrality), கொள்கையில் இணைய சேவை வழங்கும் நிறுவனமும் அரசாங்கமும் இணையத்தில் பயணிக்கும் அனைத்துத் தரவு பெட்டிகளைச் சமமாக எவ்வித தங்கு தடையின்றி பகிர்தல். இவ்வாறு பயணிக்கும் தரவு பெட்டிகளை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அல்லது நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல் பாக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ இணையம் இல்லாத போதும் சில பாக்கெட்டுகளை மட்டும் இலவசமாக வழங்கவோ கூடாது என்பதாகும். மொத்தத்தில், இணையத்தில் பயணிக்கும் தகவல்களை அதன் வழியில் எவ்விதத்திலும் குறுக்கிடாமல் அது சென்றடைய விடவேண்டும்.
கொலம்பியா பல்கலைக்கழக ஊடக சட்டப் பேராசிரியரான டிம் வூ, 2003-ஆம் ஆண்டு Net neutrality என்ற பதத்தை பொது கடத்தி(common carrier) என்ற கருத்துப்படிவத்தின் நீட்டலாக உருவாக்கினார்.[1][2][3][4]
காம்காஸ்ட் என்ற இணையச் சேவை வழங்கி சகாக்களிடையேயான தகவல் பரிமாற்ற வேகத்தைத் திட்டமிட்டு மந்தப்படுத்தியது, இணைய சமத்துவக் கொள்கை மீறலின் எடுத்துக்காட்டாகும்.[5]
விளக்கங்களும் தொடர்புடைய கொள்கைகளும்
[தொகு]இணைய நடுநிலைமை
[தொகு]இணைய போக்குவரத்துகள் அனைத்தும் சரி சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் எனும் கொள்கையே இணைய நடுநிலைமை (அ) இணைய சமத்துவம்.[6] கொலம்பியா சட்டக் கல்லூரி பேராசிரியர் டிம் வூவின் கருத்துப்படி, இணய நடுநிலைமை என்பதன் பொருத்தமான விவரனைக் கூறப்படுவது - ஒரு பிணையத்தை வடிவமைக்கையில் அதன் அனைத்து தளங்கள், உள்ளடக்கங்கள், பீடங்களும் சமமாகப் பாவிக்கப்படுமானால், அந்த பொது தகவல் பிணையம் மிகுதியான உயர்ந்த பயன்களை விளைவிப்பதாக அமையும்.[7]
திறந்தவெளி இணையம்
[தொகு]தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்கொள்ளும் வண்ணம் இணையத்தின் அனைத்து வளங்களையும் எளிதில் அணுகக்கூடியதாக அமைக்க வேண்டும் எனும் கருத்துரு திறந்தவெளி இணையம் ஆகும். இணைய நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை, வெளிப்படையான தர நிர்ணயங்கள், மிகக் குறைவான நுழைவுத் தடைகள் முதலிய கருத்துருக்களை உள்ளடக்கியது இது. இது மையக் குவிப்பற்ற தொழில்நுட்ப சக்தியினைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது; திறந்தவெளி மென்பொருளோடும் நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.[8]
வெளி இணைப்புகள்
[தொகு]- (ஆங்கிலம்)நெட் நியூட்ராலிடி என்றால் என்ன? பரணிடப்பட்டது 2018-12-05 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) இணைய சமத்துவம் குறித்து இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்?
- செல்போன் நிறுவனங்கள் vs ஆப்ஸ்!! கட்டணத்தை அதிகரிக்குமா நெட் நியூட்ராலிட்டி பிரச்னை?[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டிம் வூ (2003). "(ஆங்கிலம்) இணையச் சமநிலை, அகண்டலைவரிசை பாகுபாடு" (PDF). தொலைதொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்பச் சட்டப் பத்திரிக்கை. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கிராமெர். ஜே; வெய்வியொர்ரா. எல் & வெயின்ஹார்ட். சி. (2013): "(ஆங்கிலம்) இணையச் சமநிலை : ஒரு முன்னேற்ற அறிக்கை" பரணிடப்பட்டது 2016-04-17 at the வந்தவழி இயந்திரம். தொலைதொடர்புக் கொள்கை 37(9), 794–813.
- ↑ பேர்னேர்ஸ்-லீ, டிம் (21 ஜூன் 2006). "(ஆங்கிலம்) இணையச் சமத்துவம்: இது சற்று முக்கியம்". timbl's blog. Archived from the original on 2008-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-04-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "(ஆங்கிலம்) கூகிள் பயனர்களுக்கான இணையச் சமத்துவ வழிகாட்டி". கூகிள். Archived from the original on 2008-09-01. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பீட்டர் சுவென்சன் (19 அக்டோபர் 2007). "(ஆங்கிலம்) காம்காஸ்ட் சில சந்தாதாரர் போக்குவரத்தைத் தடை செய்கிறது, அ.பி. சோதனையில் தெரியவந்தது". அசோசியேட்டட் பிரெஸ். http://www.msnbc.msn.com/id/21376597/.
- ↑ "(ஆங்கிலம்) இணைய சமத்துவத்தினுள்: சேவை வழங்கிகள் உங்கள் பொருளடக்கங்களை வடிகட்டுகிறதா?".
- ↑ வூ, டிம். "(ஆங்கிலம்)இணையச் சமத்துவம் - கேள்விகள்".
- ↑ மேத்தியூ இங்கிராம். "(ஆங்கிலம்) திறந்தவெளி vs. அடைத்த: எவ்வகையான இணையம் நமக்குத் தேவை?". GigaOm. Archived from the original on 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-04-24.