உள்ளடக்கத்துக்குச் செல்

பதொம் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதொம் (Fathom, சுருக்கம்: ftm) என்பது நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். பொதுவாக நீர்நிலை நீளங்களை அளக்க இது பயன்படும்.

பிரித்தானிய அலகுகளில் அல்லது அமெரிக்க மரபுவழி அலகுகளில் ஒரு பதொம் எனப்படுவது 2 யார் (6 அடி)களாகும்.[1] அடிப்படையில் அகல விரித்து நீட்டப்பட்ட மனிதனின் கைகளின் விரல் நுனிகளுக்கிடையிலான தூர அளவு இதுவாகும்.

பெயரீடு

[தொகு]

பதொம் எனும் பெயர் பழைய ஆங்கிலச் சொல்லான fæðm என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருள் நீட்டி அகல விரிக்கப்பட்ட கைகள் என்பதாகும்.[2][3][4]

பன்னாட்டு பதொம்

[தொகு]

ஒரு பதொம் என்பது:

1959 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, அவுத்திரேலியா, கனடா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன பன்னாட்டு யார் நீளத்தை 0.9144 மீட்டர் என வரையறுத்தது. அனைத்துலக முறை அலகுகளில் (SI) பத்தொம் அலகு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பிரித்தானிய பதொம்

[தொகு]

பிரித்தானியப் படைத்துறை பதொம் என்பது கடல் மைல்(6080 அடி) ஒன்றின் ஆயிரத்தில் ஒரு பங்கு (6.08அடிஅல்லது 1.85 மீ) என வரைவிலக்கணம் செய்யும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopædia Britannica eleventh edition 1911.
  2. Oxford English Dictionary, second edition, 1989;
  3. Bosworth, Joseph (1898). An Anglo-Saxon Dictionary. Oxford, England: Clarendon Press. Archived from the original on 2007-03-14. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  4. Fathom - Definition from the Merriam-Webster Online Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதொம்_(அலகு)&oldid=3219571" இலிருந்து மீள்விக்கப்பட்டது