ரசிப் தைய்யிப் எர்டோகன்
ரசிப் தைய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan)( பிறப்பு:26 பெப்ரவரி 1954) துருக்கியின் தற்போதைய 12வது ஜனாதிபதியாவார். அவர் முன்பு துருக்கியின் பிரதமராக 2003 முதல் 2014வரையான காலப்பகுதியிலும்,இஸ்தான்பூலின் மேயராக 1994முதல் 1998வரையான காலப்பகுதியிலும் கடமையாற்றினார்.2001இல், அவர் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை உருவாக்கினார்.2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுன்னர், அவரது கட்சியை பொதுத்தேர்தல்களில் தலைமை தாங்கி வழிநடத்தி 2002,2007,2011 ஆண்டு தேர்தல்களில் அவரது கட்சியை வெற்றிபெறச் செய்தார்.இஸ்லாமிய அரசியல் பின்னணி கொண்ட அவர்,தான் பழமைவாத ஜனநாயகவாதி என கூறுகின்றார்.அவரது நிருவாகம் சமூகப் பழமைவாதம் மற்றும் பொருளாதார கொள்கையுடையதாக நோக்கப்படுகின்றது.[4]
மாண்புமி ரசிப் தைய்யிப் எர்டோகன் | |
---|---|
துருக்கியின் 12வது ஜனாதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 ஆகஸ்ட் 2014 | |
பிரதமர் | அஹ்மத் தாவுதொக்லு |
முன்னையவர் | அப்துல்லாஹ் குல் |
துருக்கியின் பிதமர் | |
பதவியில் 14 மார்ச் 2003 – 28 ஆகஸ்ட் 2014 | |
குடியரசுத் தலைவர் | அஹ்மத் நெக்செட் சீஸர் அப்துல்லாஹ் குல் |
Deputy | கபினட் l (2003–07) கபினட் ll(2007–11) கபினட் lll(2011–14) |
முன்னையவர் | அப்துல்லாஹ் குல் |
பின்னவர் | அஹ்மத் தாவுதொக்லு |
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி | |
பதவியில் 14 ஆகஸ்ட் 2001 – 27 ஆகஸ்ட் 2014 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | அஹ்மத் தாவுதொக்லு |
பதவியில் 9 மார்ச் 2003 – 28 ஆகஸ்ட் 2014 | |
தொகுதி | சேர்ட் (2003 தேர்தல்மூலம்) இஸ்தான்புல் l (2007-2011) |
இஸ்தான்புல் மேயர்கள் | |
பதவியில் 27 மார்ச் 1994 – 6 நவம்பர் 1998 | |
முன்னையவர் | நுரேத்தீன் சூசன் |
பின்னவர் | அலி முபித் குருண்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 பெப்ரவரி 1954 இஸ்தான்புல், துருக்கி |
அரசியல் கட்சி | தேசிய இரட்சிப்பு கட்சி (1972–81) நலன்புரிக் கட்சி (1983–98) நற்பண்பு கட்சி (1998–2001) நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (2001–present) |
துணைவர் | எமின் எர்டோகன் |
பிள்ளைகள் | அஹ்மத் பாரக் சுமய்யே நிஸ்முத்தின் பிலால் எஸ்ரா |
முன்னாள் கல்லூரி | மர்மாரா பல்கைலக்கழகம்[1][2][3] |
கையெழுத்து | |
இணையத்தளம் | Government website Personal website |
ஒரு இமாம் ஹதிப் பாடசலையில்(இரண்டாம் நிலைக்கல்வி நிலையம்) கற்ற எர்டோகன், துருக்கியின் ஒரு உதைப்பந்தாட்ட அணியில் நடுத்தர சிறப்பான வீராக விளையாடினார்.1994இல் இஸ்லாமிய நலன்புரிக் கட்சியிலிருந்து இஸ்தான்பூலின் மேயராக தெரிவுசெய்யப்படமுன்னர்,இஸ்லாமிய அரசியல் கட்சிகளில் மாணவனாக இணைந்துகொண்டார்.[2] 1998இல் மதசகிப்புத்தன்மை காரணமாக அவரது அலுவலகத்திலிருந்து தடை செய்யப்பட்டு,10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,வெளிப்படையான இஸ்லாமிய அரசியலை கைவிட்டு, மிதவாத பழமைவாத கட்சியொன்றாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை 2001இல் உருவாக்கினார்.அவரது கட்சி, 2002ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைய விட சற்றுக்குறைவான ஆசனங்களை வென்றது.எர்டோகனின் அரசியல் அலுவலகத்தடை நீக்கப்படும்வரை, கட்சியின் இணைநிறுவனர் அப்துல்லாஹ் குல் அவரது அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.சேர்ட் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடரந்து,2003 மார்ச் மாதம் எர்டோகன் துருக்கியின் பிரிதமரானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Erdoğan'ın diploması aslında hangi okuldan" [Which school is Erdoğan's diploma from]. oda TV (in Turkish). 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Cengiz Aldemir (28 April 2014). "Erdoğan'ın diploması Meclis'te" [Erdoğan's diploma in parliament] (in Turkish). Sözcü. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Rektörlük, diplomasını yayınladı; Halaçoğlu yeni belge gösterdi" [Rectorate issues diploma:Halaçoğlu shown the new document] (in Turkish). Zaman. 25 April 2014. Archived from the original on 26 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Turkey's Davutoglu expected to be a docile Prime Minister with Erdogan calling the shots". Associated Press. Fox News. 21 August 2014. http://www.foxnews.com/world/2014/08/21/turkey-davutoglu-expected-to-be-docile-prime-minister-with-erdogan-calling/. பார்த்த நாள்: 27 November 2014.
- ↑ Arda Can Kumbaracibasi (24 July 2009). Turkish Politics and the Rise of the AKP: Dilemmas of Institutionalization and Leadership Strategy. Routledge. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-87629-9.