பிராங்க் செர்வுட் ரோலண்ட்
பிராங்க் செர்வுட் ரோலண்ட் (Frank Sherwood Rowland, சூன் 28, 1927 – மார்ச் 10, 2012) என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். வளிமண்டல வேதியியல், மற்றும் வேதி வினைவேக இயல் ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. ஓசோன் குறைபாட்டில் குளோரோபுளோரோகார்பன்களின் பங்கு பற்றிய இவரது ஆய்விற்காக 1995 ஆம் ஆண்டில் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிராங்க் செர்வுட் ரோலண்ட் Frank Sherwood Rowland | |
---|---|
மே 2008 உலக அறிவியல் மாநாட்டில் | |
பிறப்பு | டெலவெயர், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா | சூன் 28, 1927
இறப்பு | மார்ச்சு 10, 2012 நியூபோர்ட் பீச், கலிபோர்னியா | (அகவை 84)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வைன் |
கல்வி கற்ற இடங்கள் | ஒகையோ வெசுலியன் பல்கலைக்கழகம் (இளமாணி), சிகாகோ பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | வில்லார்ட் லிபி |
அறியப்படுவது | ஓசோன் குறைபாடு |
விருதுகள் | 1995 வேதியியலுக்கான நோபல் பரிசு 1989 சப்பான் பரிசு |
மனிதனால் உருவாக்கப்படும் கரிமச் சேர்ம வளிமங்கள் சூரியக் கதிர்வீச்சுடன் இணைந்து அடுக்கு வளிமண்டலத்தில் சிதைவடைவதால், குளோரீன் அணு, மற்றும் குளோரீன் ஓரொக்சட்டு ஆகியவற்றை வெளியிடுகின்றது, இவை பெருமளவு ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கக்கூடியவை என்பதை ரோலண்டு அவரது உதவியாளர் மரியோ மொலினா ஆகியோர் கண்டுபிடித்தனர். இது பற்றிய முதலாவது ஆய்வுக்கட்டுரை நேச்சர் ஆய்விதழில் 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு அது குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன[1].
இறப்பு
தொகுநடுக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த செர்வுட் சிலகால சுகவீனத்திற்குப் பின்னர் 2012 மார்ச் 10 இல் கலிபோர்னியாவில் காலமானார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "F. Sherwood Rowland – Autobiography". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
- ↑ [1]
வெளி இணைப்புகள்
தொகு- CFCs, Ozone Depletion and Global Warming Freeview video interview with F.Sherwood Rowland provided by the Vega Science Trust.
- MJ Molina and FS Rowland "Stratospheric Sink for Chlorofluoromethanes: Chlorine Atom-Catalysed Destruction of Ozone" Nature 249 (28 June 1974):810-2 doi:10.1038/249810a0
- UCI Nobel winner F. Sherwood 'Sherry' Rowland dies at 84 Orange County
- Ozone layer scientist who 'saved the world' dies Guardian