உணவு அறிவியல்

உணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் (அல்லது உணவு விலங்குகள் கொல்லப்படுவதற்கும்) நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும் இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும். இது வேளாண் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும் ஊட்டத் துறையில் இருந்து வேறுபட்டதாகவும் கருதப்படுகிறது.

புது உணவுப் பொருட்களை உருவாக்குவது, அவற்றுக்கான உற்பத்திச் செய்முறைகளை வடிவமைப்பது, பொட்டலம் கட்டுவதற்கான சரியான பொருட்களை இனங்காணுவது, உணவுகளின் ஆயுட்காலங்களை கணிப்பது, உணவின் சுவை மற்றும் ஏற்புத் திறனை வாடிக்கையாளர்களிடம் சோதித்துப் பார்ப்பது, வேதி மற்றும் நுண்ணுயிர் சோதனைகளை செய்வது ஆகியவை உணவு நுட்பவியலாளர்களின் பணிகளில் அடங்கும்.

உணவு அறிவியல், ஒரு பல்துறை அறிவியலாகும். நுண்ணுயிரியல், வேதிப் பொறியியல், உயிர்வேதியியல் போன்ற பல துறை நுட்பங்களும் உணவு அறிவியலில் பயன்படுகின்றன. உணவு அறிவியலின் சில கூறுகள் பின்வருமாறு:

  • உணவுப் பாதுகாப்பு அல்லது உணவு நுண்ணுயிரியல் - உணவு மூலம் பரவும் நோய்களுக்கான காரணம், அவற்றை தடுப்பது குறித்த துறை.
  • உணவுப் பதப்படுத்தல் - உணவுத் தரம் கெடாமல் பதப்படுத்துவது, கெட்டுப் போவதற்கான காரணங்களை ஆராயும் துறை.
  • உணவுப் பொறியியல் - உணவு உற்பத்திக்கான தொழிற்சாலை செய்முறைகள்.
  • உணவு வேதியியல் - உணவின் மூலக்கூறுக் கட்டமைப்பு, அவற்றுக்கு இடையே நிகழும் வேதிவினைகள் குறித்த துறை.
  • நுகர்வுச் சோதனை - நுகர்வோரின் புலன்களுக்கு உணவை ஏற்கும் திறன், விருப்பம் குறித்து ஆயும் துறை.
  • உணவுப் பொருள் உருவாக்கம் - புது உணவுப் பொருட்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுத் துறை.

படிப்புகள்

தொகு
  • உணவுத் தொழில்நுட்பம் - உணவு பொருட்கள், அதற்கான இயந்திரங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு (Food Science & Engineering)
  • சமையல் தொழில்நுட்பம் - உணவு செய்முறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு.(Catering Technology)
  • மனையியல் - உணவு செய்முறைகளைக் கொண்ட பாடத்திட்டங்கள் அடங்கிய படிப்பு. (Home Science)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவு_அறிவியல்&oldid=3312370" இலிருந்து மீள்விக்கப்பட்டது