சார்ல்ஸ் பாபேஜ்
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, திசம்பர் 26, 1791 – அக்டோபர் 18, 1871) கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட பிரித்தானியப் பல்துறையறிஞர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.[1] வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய அறிவியலாளர்கள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.
சார்ல்ஸ் பாபேஜ் | |
---|---|
1860இல் சார்ல்ஸ் பாபேஜ் | |
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 26 திசம்பர் 1791
இறப்பு | 18 அக்டோபர் 1871 மேரில்போன், இலண்டன், இங்கிலாந்து | (அகவை 79)
தேசியம் | இங்கிலாந்து |
துறை | கணிதம், பொறியியல், அரசியற் பொருளாதாரம், கணினியியல் |
பணியிடங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிரிச்சு |
கல்வி கற்ற இடங்கள் | பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு |
அறியப்படுவது | கணிதம் ,கணினியியல் |
தாக்கம் செலுத்தியோர் | ராபர்ட் உட்ஹவுஸ், கஸ்பார்டு மோங்கே, ஜான் ஹெர்ச்செல் |
பின்பற்றுவோர் | காரல் மார்க்சு, ஜான் ஸ்டுவர்ட் மில் |
கையொப்பம் |
சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்
தொகு- வாகனமங்களின் வேகமானி
- கண் பரிசோதனைக்கருவி
- புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
- நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
- சீரான அஞ்சல் கட்டண முறை
- கலங்கரை விளக்கு ஒளி
- கீறிவிச் ரேகைக் குறியீடு
- சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி
- மணிச்சட்டம்
- நேப்பியர் கருவி
- பாஸ்கல் இயந்திரம்
- டிபரன்ஸ் இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Terence Whalen (1999). Edgar Allan Poe and the masses: the political economy of literature in antebellum America. Princeton University Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00199-9. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
- ↑ Halacy, Daniel Stephen (1970). Charles Babbage, Father of the Computer. Crowell-Collier Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-741370-5.