சாமரி அத்தப்பத்து

அதப்பட்டு முதியன்செலகே சமாரி ஜெயங்கனி (Atapattu Mudiyanselage Chamari Jayangani (பிறப்பு: 9 பெப்ரவரி, 1990) எனபவர் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் தற்போதைய இலங்கைப் பெண்கள் அணியின் தலைவி ஆவார். இலங்கை அணியின் பத்தாவது தலைவியாக இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் தலைமையில் இலங்கை அனி ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் வெற்றியும் 13 போட்டிகளில் தோல்வியும் பெற்றது.[1] நவமபர், 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அவையின் விருது வழங்கும் நிகழ்வில் இவர் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனையாக அறிவிக்கப்பபட்டார்.[2]

சர்வதேச போட்டிகள்

தொகு

துவக்க வீராங்கனையாக விளையாடும் இவர் அதிரடியாக ஓட்டங்களை எடுப்பவராக கருதப்படுகிறார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்னத் துடுப்பாட்டத்தில் இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் குறைந்த பந்துகளில் ஐம்மது ஓட்டங்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் இவரின் தலைமையின் கீழ் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் வெற்றி பெற்றது.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை நூறு ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிகமுறை நூறு ஓட்டங்கள் அடித்த இலங்கைத் துடுப்பாட்ட வீராங்கனை எனும் சாதனை படைத்துள்ளார். இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட வரலாற்றில் அதிக முறை நூறுகள் மற்றும் ஐம்பது ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்..[3][4] மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 178* ஓட்டங்கள் அடித்துள்ளார்.[5] இதன்மூலம் அதிக ஓட்டங்கள் அடித்த துடுப்பாட்ட வீராங்கனை எனும் சாதனை படைத்துள்ளார்.மேலும் அதிக மட்டையாட்ட சராசரியைக் கொண்ட இலங்கை வீராங்கனை எனும் சாதனையையும் படைத்துள்ளார்[6]. ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்டு நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இலங்கை வீராங்கனை எனும் சாதனை படைத்தார்.99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த மூன்றாவது சர்வதேச வீராங்கனை ஆவார்.[7]

மூன்றாவது வீராங்கனையாக இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்கமல் 178* ஓட்டங்களை எடுத்தார்.[8] மேலும் பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்னத் துடுப்பாட்டப் போட்டியில் நூறுகள் அடித்த முதல் இலங்கை வீராங்கனை எனும் சாதனை படைத்தார்[9][10] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை பெண் துடுப்பாட்டக்காரர் எனும் சாதனை படைத்தார். மேலும் ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீராங்கனை இவர் ஆவார்.[11][12] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்னத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 178* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பெண்கள் துடுப்பாட்டப் போட்டியில் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை மற்றும் உலகக் கிண்னப் போட்டியில் இரன்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார்.[13] அதிக பவுண்டரிகள் மூலம் 124 ஓட்டங்களை எடுத்தார்.[13]

சான்றுகள்

தொகு
  1. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | List of captains | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/individual/list_captains.html?class=9;id=3672;type=team. 
  2. "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  3. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | Most hundreds | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_hundreds_career.html?class=9;id=3672;type=team. 
  4. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | Most fifties (and over) | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_fifties_career.html?class=9;id=3672;type=team. 
  5. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | High scores | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_innings.html?class=9;id=3672;type=team. 
  6. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | Highest averages | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/highest_career_batting_average.html?class=9;id=3672;type=team. 
  7. "Records | Women's One-Day Internationals | Batting records | Dismissed for 99 (and 199, 299 etc) | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/t20champions/content/records/284117.html. 
  8. "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  9. "Cricket Records | Records | Women's World Cup - Sri Lanka Women | List of hundreds | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/list_hundreds.html?id=68;team=3672;type=trophy. 
  10. "Cricket Records | Records | Women's World Cup - Sri Lanka Women | High scores | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_innings.html?id=68;team=3672;type=trophy. 
  11. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's One-Day Internationals | Most runs | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=9;id=3672;type=team. 
  12. "Cricket Records | Records | Sri Lanka Women | Women's Twenty20 Internationals | Most runs | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=10;id=3672;type=team. 
  13. 13.0 13.1 "Chamari Atapattu's one-woman effort". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.