காசா குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து
மெரினா ராஜ் – வத்திக்கான்
காசாவில் உள்ள போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தினை வழங்க 12 இலட்சம் போலியோ தடுப்பு மருந்துகளை காசாவிற்கு கொண்டு வரச் செய்துள்ளது யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.
ஏறக்குறைய 6 இலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்படாதவாறு இருக்க தடுப்பு மருந்து வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.
WHO, UNRWA மற்றும் பிற கூட்டமிப்புக்களுடன் இணைந்து 6,40,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குழந்தைகளின் உடல் நலன், ஆரோக்கியம் மிக முக்கியமானதாகக் கருதி இதனைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.
ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை UNICEF பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பானது 12 இலட்சம் போலியோ தடுப்பூசியை (nOPV) காசாவிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்